மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மாறா’

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரை ப்படமான ‘மாறா’

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரை ப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ

காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்தி ரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும்.

திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்ல ப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகி யோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் ‘மாறா’ படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம் அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலை க்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் ம்யூஸிக்கின் வாயிலாக விளம்பரமில்லா இசை சேவை, இந்தியாவின் மிக ப்பெ ரும் விலைபொருள்களின் தேர்வில் இலவசமான துரித டெலிவரி, அதிகபட்ச தள்ளு படி களுக்கு முற்கால அனுமதி, ப்ரைம் ரீடிங்கின் வழியாக அளவில்லா ப்ரைம் புத்தகங்களை வாசித்தல் மற்றும் மொபைல் கேமிங்க் சேவைகளையும் அளிக்கிறது,

ட்ரைலர் :

http://amzn.to/MaaraTrailer

மாதம் ரூ. 129 க்கு மட்டுமே மும்பை, இந்தியா, டிசம்பர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க் கப் பட்ட தமிழ்த் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டது. மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை திலீப் குமார் இயக்க ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவ ர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களுடன் அலெக்ஸா ண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி முக்கிய கதாபா த்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஜனவரி 8, 2021 அன்று அமேசான் ப் ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வெளியிடப்படுகிறது.

பார்வையாளர்களை வண்ணமயமானதோர் உலகத்திற்கு அழைத்துச்செல்லும் இந்த ட்ரெய்லரானது பாருவின் (ஷ்ரத்தா ஶ்ரீநாத்) வாழ்க்கையை காட்டுவதோடு மட்டுமில் லா மல், அவளின் புதிய வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் ஓவியங்கள் நிறைந்ததோர் புத்த கத்தையும் விவரிக்கிறது. அந்த ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட அவள் அவற்றை வரைந்த ஓவியனான மாறாவை (மாதவன்) தேடிச்செல்கிறாள். அவளின் பயணமானது வண் ண ங்கள், இசை, காதல், நம்பிக்கை, மற்றும் பல உணர்வுகள் இழைந்தோட ஓர் பரிபூரண அனுபவமாய் அமைகிறது.

மாறா’ படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகையில் நடிகர் மாதவன் கூறி யது: “மாறா எனும் சொல் ஓரு தனி மனிதனை மட்டும் குறிக்காமல் பல இனிமையான மனிதர்களைக்கொண்ட ஓர் சிறு உலகத்தையே குறிக்கிறது. அம்மனிதர்களின் தினசரி வாழ்வுகளும் அவர்களின் உரையாடல்களும் மிகவும் இயல்பானவை, ஆனால் அவர்களி ன் அனுபவங்களோ பார்வையாளர்கள் தங்களை அவர்களில் ஒருவராய் உணர வைக்கும ளவு அலாதியானவை. என்னுடைய கதாபாத்திரமானது தன்னை சுற்றியுள்ள மனிதர்களி டம் பழகுவதில் அவன் காட்டும் மையமான அன்பை மையப்படுத்தி உருவாக்கப்பட் டுள் ளது.அந்த அன்பே அவனைப் பார்வையாளர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதோர் கதா பா த்திரமாக உருவாக்குகிறது.

பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் பலர் வாழ்வுகளில் அவன் மாற்றங்களை உருவாக்குகி றவனாவான். கதாபாத்திரத்தின் அந்த குணாதிசயமே என்னை வெகுவாய் ஈர்த்தது. இத் திரைப்படமானது அந்த உறவுகளையும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள் ளும் அழகான தருணங்களையும் மையமாகக் கொண்டுள்ளது. ஒரு இனிய உலகமது. அவ் வுலகை உயிர்ப்பிக்கப் பல முன்னணி நடிகர்களின் அபாரமான நடிப்பு உதவியுள்ளது.
அவர்களில் பலர் மீது நான் திரையிலும் திரைக்கு அப்பாலும் கொண்டுள்ள அபிமானமா னது அவர்களுடன் நான் நடித்த காட்சிகளுக்கு மெருகூட்டியது மட்டுமில்லாமல் எனக்கு என்றும் நீங்க நினைவுகளாகவும் அமையக் காரணமாயிருந்தது. இத்திரைப்படத்தைக் காணும் பார்வையாளர்களும் இதனை நாங்கள் படைக்கும் போது பெற்ற முழுமை யான தோர் அனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன். மாறா என் மனதிற்கு மிகவும் நெ ருக்கமானதோர் படைப்பு. உங்களுக்கும் அவ்வாறே அமையுமென நம்புகிறேன்.”

‘மாறா’ படத்தில் உள்ள அவரது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகையில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் கூறியது: “பாரு என்பவள் தனக்கு என்ன வேண்டுமெனத் தானே அறியாதவள். ஆனால் தனக்கு என்ன தேவை இல்லை என்பதை அறிவாள். அவளிடமுள்ள தீர்க்கமும் ம னிதத்தின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் அவளை சக மனிதர்களிடம் ஈர்க்கி றது. அவளிடம் பழகிய சிறிது நேரத்திலேயே அவளுடன் பல காலம் பழகியதோர் உண ர்வைக் கொடுக்கக்கூடிய குணமானது அவளின் சிறப்பம்சமாகும். அவள் இந்த கதையின் உலகினை சுற்றித்திரியும் போதும் அவ்வுலகினில் உள்ள புதிர்களில் தொ லைந்து பல ஆச்சரியமூட்டும் கதைகளையும் மனிதர்களையும் சந்திக்கும்போதும் அவள் தன்னை ஒரு சிறுமியாகவே உணர்கிறாள் என்பது என்னை வெகுவாக ஈர்த்தது.”  கதைச்சுருக்கம் ஓர் கடற்கரையோர ஊரின் சுவர்களில் தான் சிறுமியாய் இருந்த போது கேட்ட கதையை ஓவிய வடிவத்தில் கண்ட பாரு அதனை வரைந்த ஓவியனான மாறனைத் தேடிச்செல்கி றாள்.