மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் பட த் தை தமிழில் ஆர் கண்ணன் இயக்கிய முதன்மை பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ந டிக்க, துர்கா ராவ் சவுத்ரி நீல் சவுத்ரி தயாரிப்பில் ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ என்ற த லைப்பில் தயாராகி பிப்ரவரி 3ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நி கழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணிஎம், ஐஸ் வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக் குழுவினருடன் தலைமை விருந்தினராக திருமதி சுகாசி னி மணிரத்தினம் கலந்து கொண்டார்.
திருமதி சுகாசி னி மணிரத்தினம் அவர் பேசுகையில்…
“எங்கள் கண்ணன் மிக வேகமானவர். அவர் படம் எடுக்கும் வேகத்தையும், திட்டமிட லை யும் இன்றைய இளம் இயக்குனர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காட்சியை 12 நாட் கள் எடுக்கும் இன்றைய சினிமாவில் இந்த முழு படத்தையும் 12 நாட்களில் எடுத்து முடித் திருக்கிறார். அவரை குருவின் குரு என்று சொல்லலாம்.
மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் கண்ணன். அவர் எங்களது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய போது நகைச்சுவை சம்பந்தமாக ஏதாவது வேண்டி இருந் தால் அவரைத்தான் அழைப்போம். அப்படி ஒரு நகைச்சுவை உணர்வு உள்ளவர் இந்த சீ ரியஸான படத்தை எடுத்திருக்கிறார் என்பது பெருமையாக இருக்கிறது…” என்றார். அத ற்குப் பின் பேச வந்த கண்ணன் தனது உரையில், “ஒரு ராஜாவுக்கு கிரீடம் எப்படி முக் கி யமானதோ அப்படி இந்த விழாவுக்கு சுகாசினி மேடம் வந்திருப்பது..!” என்றார்.
“மனோபாலாவிடம் உதவியாளராக நான் டிவி சீரியலில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சுகாசினி மேடத்தின் அறிமுகம் கிடைத்து அவர்தா ன் என்னை எங்கள் இயக்குனர் மணிரத்தினம் சாரிடம் கொண்டு சேர்த்தார். கன்னத்தி ல் முத்தமிட்டால் தொடங்கி மணி சாரிடம் 7 வருடங்கள் பயிற்சி பெற்றேன்.
ஒரு ராணுவ வீரனை போல் அங்கு பெற்ற பயிற்சியினால்தான் நான் இவ்வளவு துரித மா க படங்கள் இயக்க முடிகிறது. அதேபோல் ஒரு குத்து பாட்டோ, சண்டைகளோ இல்லா மல் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லும் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த துற் காராவ் சௌத்ரி, நீல் சவுத்ரி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.
அடுத்த நன்றியை இந்த படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்ற ஐசிஎஸ் ஐஸ்வர்யா ராஜே ஷுக்கு தெரிவிக்கிறேன். மலையாளத்தில் நிமிஷா ஏற்றிருந்த இந்த பாத்திரத்தை தமி ழில் செய்வதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விட்டால் வேறு நடிகை இல்லை. ஒருவேளை அவர் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால் நான் அநேகமாக இந்த படத் தை விட்டுவிட்டு வேறு படம் செய்ய போயிருப்பேன்.
இந்தப் படத்தை ஒத்துக் கொண்ட நாளிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் இன்வால்வ் மெ ண்ட் அற்புதமாக இருந்தது. எங்களை எல்லாம் அவர் வீட்டுக்கு அழைத்து படம் பற்றி நி றைய உரையாடினார். அவரும் கலைராணியும் நடிக்கும் ஒரு காட்சி படத்தின் ஹை லைட்டாக இருக்கும்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் சிறந்த ஒளிப்பதிவாளர் மட் டும ல்லாது மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் இருந்தார். அன்றைக்கு படத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவருக்கு நெருக்கமாக இருந்த விஷால், உதய் சார் போன்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு இந்த படத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார்.
என்னுடைய முதல் படமான ஜெயம் கொண்டான் படம் எப்படி ரசிக்கப் பட்டதோ அந்த அ ளவுக்குக் கொண்டாட இந்த படத்தில் விஷயம் இருக்கிறது..!” என்றார். பிற தொழி ல்நு ட் ப கலைஞர்களும் பேசிய இந்நிகழ்வில் இறுதியில் படத்தின் ஆடியோ வை சுகாசினி ம ணிரத்தினம் வெளியிட ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னிலையில் திருமதி. கண்ணன் பெற் றுக்கொண்டார்.