மருத்துவரை மணந்தார் Mr.India கோபிநாத் ரவி
கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம் நடிகர் Mr.I ndia கோபிநாத் ரவிக்கு காதல் திருமணம்!
நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி – டாக்டர். பிரியா திரு மணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர் .இந்தி யா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சே ர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவ ருக்கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்ப தே லட்சியம்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக் கியமான நெகட்டிவ் கதாப்பா த்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்ல ன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை ந டைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடி யாகி வருகிறார்.
இந்த நிலையில், கோபிநாத் ரவிக்கும், சென்னையை சே ர்ந்த டாக்டர்.பிரியா என்பவருக் கும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை ஐடிசி நட் சத்திர ஓட்டலில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் சரத்குமார், சந்தோஷ் பிரதா ப், மாஸ்டர் மகேந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகைகள் ராதிகா, யாஷிகா ஆனந்த், ஷா லு ஷம்மு, காயத்ரி ஷான், தயாரிப்பாளர் மனோஜ் பென், இயக்குநர் ரவி பெர்னாட் உள் ளிட்ட திரையுலக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிலர்கள் பலர் கலந்துக்கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.
கோபிநாத் ரவியும், டாக்டர்.பிரியாவும் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைதுள்ளனர்.
பிரியா மருத்துவராக இருந்தாலும், தனது கணவர் கோபிநாத் ரவியின் சினிமா லட்சியத் திற்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர் சினிமாவில் நடிகராக வெற்றி பெறுவதற்கு பெரும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறாராம்.
சென்னையில் பிரபல மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்ட ர்.பிரியா, தற்போது தனியாக கிளினிக் ஒன்றை தொடங்குவதோடு பல கிளைகளை ஆர ம்பிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
மருத்துவராக தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தாலும், தனது கணவர் சினிமாவில் உயர்ந்த நிலையை அடைவதற்கான முயற்சியில் துணை நிற்பதோடு, அவருக்கு உற்சா க ம் அளித்து ஒத்துழைப்பும் கொடுத்து வரும் டாக்டர்.பிரியா தனது வாழ்க்கையில் வந்தது தான் செய்த அதிஷ்ட்டம், என்று கூறி மகிழ்கிறார் மிஸ்டர்.இந்தியா கோபிநாத் ரவி.