“பொறி பறக்கும் #வீரமேவாகைசூடும் டிரைலர்..” நடிகர் மாரிமுத்து.
‘வீரமே வாகை சூடும்’ இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முத ல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வா ரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன் றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.
விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித் துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாச த்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழை ப் பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடை நிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவ னமாக இருப்பார்.
இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார் இயக்குனர். இறுதியாக வீர மே வாகை சூடும் என்று கூறினார். இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என்று இருப்பது போல், சக்திவாய்ந்த பெய ராக இருந்தது. இந்த கதைக்கும், கதாநாயகனுக்கும் சாலச் சிறந்ததாக இருந்தது. வீரம் என்ற சொல்லுக்கு விஷால் சாரைப் பொருத்திப் பார்க்கலாம்.
ஒருநாள் படப்பிடிப்பின் போது விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி சார் வந்திருந்தார். அப் போது நான் கை கொடுத்தேன், அவரும் கொடுத்தார். 3 நாட்களுக்கு கை வலித்தது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை, அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கி றார். அப்பாவே அப்படி என்றால் மகனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விஷால் ஆக் சனலில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு அடியும் தூள் பறக்கிறது. விஷால் படிப்பிடிப்பு தளத்தில் இப்படத்தின் இரண்டு சண்டைக் காட்சிகளைக் காட்டினார். பார்த்ததும் மிர ண்டு போனேன். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
இயக்கனர் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் போட்டு இப்படத்தை இயக்கி யிரு க்கிறார். VFF நிறுவனம் அதிக செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் நடத்ததில் மி கவும் மகிழ்ச்சியடைகிறேன். டிரைலரில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். விஷாலிடம் நான் சண்டையை நிறுத்தப் போறதில்லையா? என்று. அதற்கு, அதை என் எதிரிதான் மு டிவு பண்ணனும் என்பார். இதுதான் இப்படத்தின் கதை.
இந்த படத்தின் வெளியீட்டின் போது ( jan 26 ) ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அ னை வரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ‘அட்ரங்கி ரே’ என்ற தெலுங்கு படத்தில் இதன் க தா னாயகி டிம்பிள் எனக்கு மகளாக நடித்து இருக்கிறார். இப்படத்தில் மருமகளாக மரு மக ளாக நடித்திருக்கிறார். மேலும், இயக்குனரின் முதல் படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.