பொதுமக்களுக்கு சோப்பு போட்டு கைகழுவி விழிப்புணர்வு ஏற்படுத்திய தாசில்தார்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3 – ஆம் அலை பரவலை தடுக்க ஆகஸ்ட் 1 மு தல்- ஆகஸ்ட் 7 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு தின ந்தோ றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் காரியாபட்டி பேரூராட்சி நிர் வாகத்தின் சார்பில் பேருந்து நிலை யம் நிழற்கு டை யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காரி யாபட்டி தாசில்தார் தனக்குமார் தனது கைகளை சோ ப்புப் போட்டுக் கை கழுவி பொதுமக்களுக்கு வி ழிப் புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காரி யா பட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன் றத்தின் செ யலாளர் அருண்குமார் பொதுமக்களுக்கு கை கழு வும் முறைகள் குறித்தும், அனைவரையும் கைகழுவ சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத் தினார்.
இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துமீனா, சுகாதார ஆய் வாளர் வீரணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், மஸ்தூர் பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.