‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘திரைப்பட விமர்சனம்

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

ராஜ்கமல் , ஸ்வேதா பாண்டி , ஸ்வேதா பண்டிட் ,   ஜெயச்சந்திரன் , விஜய் டிவி ராமர் , சூர் யா  , டெலிகாம் வெங்கடேஷ் , கிறிஸ் பெப்பே , மதுசதன் , வெங்கடேஷ் பிரசாத் .எஸ் ,  ராஜா  ,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

இயக்குனர் – வரதராஜ் , இசை – யூதா சாண்டி இசை பின்னணி ஸ்கோர் – விவேக் சக் ரவர்த் தி  , ஒளிப்பதிவு – சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகன் , தயாரிப்பு நிறுவனம் – ரெயின்போ புரொடக்சன்ஸ் , தயாரிப்பு – வரதராஜ் *வினோத் குமார் வி.சி , பி ஆர் ஓ – சக்தி சரவணன் , படத்தை வெளியிடு – ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் , நடன இயக்குநர் – அர்ச்சனா ,   தயாரிப் பு வடிவமைப்பு  – கர்ணன் , படத்தொகுப்பு –  சரவணன் ஜி.என்மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .

திரை கதை-;

ப்ளே பாயாக சுற்றி திரியும் ராஜ்கமல் சமூக ஊடகங்களில் பெண்களுடன் நட்பாக பழகுகி றார். பிறகு அவர்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களின் அந்தரங்க புகைப்படங் களை எடுத்து மிரட்டி பணம் சம்பாதிக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெ ண் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பி றகு போலீஸ் விசாரணை ஆரம் ப மாகிறது. இந்த விஷயம் கதாநாயகி ஸ்வேதாவுக்கு தெ ரிய வருகிறது. தனது காதலனை விட்டு பிரிய நினைக்கிறார். ஆனால் ராஜ்கமல் தான் உண்மையாக காதலிப்பதாகவும் சே ர்ந்த வாழ விரும்புவதாகவும் சொல்கிறார்.

இந்நிலையில் ராஜ்கமலை பிடிக்க போலீஸ் வந்து விடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கி றது பெண்கள் குறிப்பாக இளைஞிகள் குளிக்கும் போது, தனது ஆண் காதலனுடன் வெளி யே சுற்றும் போது, அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” ஒன்றை பொருத்தி அ வர் களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுத்து வருகிறது ஒரு கும்பல்.இப்படியாக எடுக் கப்படும் வீடியோவை அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி அந்த பெண்களிடம் பணம் பறிக்கிறது அந்த கும்பல்.இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, அந்த மர்ம கும்பலை வலைவீசி பிடிக்க விரைகிறது தமிழக காவல்துறை.இந்த கும்பலிடம் நா யகி எப்படி சிக்கினார்.? நாயகன் ராஜ்கமல் என்ன செய்தார்.? தமிழக காவல்துறை யின் நடவடிக்கை என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

 

திரைப்பட விமர்சனம்-;

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ” சின்னத்திரையில் பிரபலமான ராஜ்க மல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சு ற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். கா தலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன்.அவனால் பாதிக்கப்பட்ட பெண் கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள் ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு.அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொ லை செய்து கொள்கிறாள்.

 

போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார் கள்.நந்தினியையும் அப்படித்தான் காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். மலை உச்சியில் கூடாரம் அடித்துத் தங்குகிறார்கள்.இந்த உலகத்திலேயே தான் தான் மகிழ்ச்சியானவள் என்று காதல் பரவசத்தில் நந்தினி நினைக்கிறாள். அவர்கள் வந்த ஜீப் பழுதாகிவிட்டதால் கூடாரத்தில் அவளைத் தனியாக இருக்கச் சொல்லிவிட்டு அரவிந்த் மெக்கானிக் கடை தே டிச் செல்கிறான்.அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அவனது குட்டு வெளி ப்ப டுகிறது.அரவிந்தின் அந்தரங்கம் அவளுக்குத் தெரிகிறது.அவனது கோரமுகத்தை அ றிந்த அவள், அதிர்கிறாள். காதலன் என்று நம்பி மோசம் போய் விட்டோமே எனப் பதறுகி றாள்.திரும்பி வந்த அவனிடம் சண்டை போடுகிறாள்.

பல பெண்களுக்குத் துரோகம் செய்தவன் என்று சீறுகிறாள். வாக்குவாதம் நடக்கிறது. ஆ னால் அவனோ இதுவரை கெட்டவனாக இருந்து தவறுகளைச் செய்தது உண்மைதான் எ ன்றும் ஆனால் இனிமேல் திருந்தி விட்டதாகவும் கூறுகிறான். நந்தினியிடம் தான் வைத் தது உண்மையான காதல்தான் என்றும் இனி நல்லவனாக இருப்பேன் என்று கூறிச் சேர் ந்து வாழ விரும்புவதாகவும் மன்றாடுகிறான். அவளை உண்மையிலேயே காதலி ப்பதா கவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் எவ்வாவோ கெஞ்சுகிறான்.ஆனால் அவளோ அ வனை வெறுக்கிறாள். அந்தச் சமயத்தில் அவனைத்தேடி போலீஸ் கொடைக்கானல் வந் து விடுகிறது.அவர்களுக்குள் மோதல் நடக்கிறது .சின்னத்திரையில் பரவலாக அறியப் பட்ட நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன் . எதிர்மறை நிழல் படிந்த கதா பா த்திரம்தான். அவரும் தன்னால் முடிந்த அளவுக்குப் புகுந்து விளையாடி இருக்கிறார் .செ ல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும்

பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில்சிக்கியவர்களிடம்
மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார். நாயகியாக நடி த்த ஸ்வேதா பண்டிட் சுமார் முகம் என்றாலும் நல்ல  நடிப்பைக்கொடுத்திருக்கி றார்.ஒரு காதலியாகக் கொஞ்சும் போதும் துரோகம் அறிந்து குமுறும்போதும் போதும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்ன லில் உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிரு க்கி றார். வை- பை மூலம் செல்போ ன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில் நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தா னது என்று எச்சரித்து இருக்கிறது படம்.நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் சில அசட்டுத்தனமான காட்சிகள் உள்ளன.

பாடல் காட்சிகளில் கொடைக்கா னல் மலைப்பகுதியைச் சுற்றி அலைந்து திரிந்து பட ம் பிடித்துள்ளார்கள். அப்போது சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் விவேக் சக்ரவர்த்தியின் இ சையும் கைகோர்த்து செய்துள்ள பயணம் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் காதலியிடம் நாயகன் மன்றாடுவது நாடகத்தனமாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி ப ற்றி கதை சொல்ல வந்த படம், உருவாக்கத்தில் பழைய முறையில் உருவாகியுள்ள து. தொ ழில்நுட்ப ரீதியில் மிகவும் சுமாரான காட்சிகளே உள்ளன.‘பெண் விலை வெறும் 999 ரூபா ய் மட்டுமே’ என்றுதான் படத்தின் கதை சொல்கிறது.தணிக்கை கெடுபிடிகளுக் காகத்தா ன் பெண் ‘பென் ‘ஆக மாறியுள்ளது.செல்போன்களைக் கொண்டு பெண்கள் எப்படி வீழ் த்தப்படுகிறார்கள்? ஒரு சாதாரண செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பா திக்கப்படுகிறது என்கிற நல்லதொரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்ல முயன்றிருக் கிறார். 

இயக்குநர் வரதராஜ்.இந்தக் கருத்தைச் சொன்ன நோக்கத்திற்காக இயக்குநரைப் பாராட் டலாம்.அவ்வகையில் படம் அவருக்கு வெற்றி எனலாம். ஆனால் சினிமா முன்னேறியுள்ள வளர்ச்சியின் அளவுக்குக் காட்சிகளில் தரத்தின் உயரம் இல்லை.சில குறைகளுக்குப் பட்ஜெட் காரணமாக இருக்கலாம். மொத்தத் தில் இந்தப் படம் ஜனதா சாப்பாடு.தன்னால் முடிந்த உயரத்துக்கு பூப்பறித்துள்ளார் இயக்குநர் வரதராஜ். பட்ஜெட் படமாக இருந்தாலும் பெண்கள் மேல் அக்கறை கொண்டு ஒரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லியி ருப்பத ற்காக, குறைகளைப் புறந்தள்ளி விட்டு இயக்குநரைப் பாராட்டலாம். பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – ஆண்ட்ராய்டு கால பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக வர வேண்டிய படம். ஆனால்.???

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்
திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5