பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சர வண ன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,
‘பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவ ண ன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி ம யில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது..
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினி மா வின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 க ளின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,ப ழ நி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நட ந்து வருகிறது.
சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண் டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா த்ரில்லரா க வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக தி ண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையி ல், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட ப டப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக ந டிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கி றார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப் புகழ் சுனில்,தம்பிராமையா,GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – வாஞ்சி நாதன் முருகேசன், எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM ) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற் றுகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடியவுள்ள நிலை யில், டீசர் மற் றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படு ம்.