பா. இரஞ்சித் அறிக்கை.
பா. இரஞ்சித் அறிக்கை.
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறி ஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரி ழப்பாகும்.
அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என் று அனைத்திலுமே நவீன முறை யை கையாண்டவர், தமிழுக்கு அ றிமுகப்படுத்தியவர்.
தலித் திறனாய்வு முறையியல் உ ருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந் த கோட்பாடுகளின் மூலம் தன் னை நிலைநிறுத்திக்கொள்ளாம ல், கற்ற அனைத்தையும் அடித்தட் டு மக்களின் வரலாற்றை புரிந்துக் கொள்ளவும் அவர்களின் அரசிய லை நிறுவவும் எழுதியவர். ‘தலித்’ என்கிற சொல்லை பிறப்பின் அ டையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வர லாறு முழுக்க வெளிப்பட்ட அதி காரத்திற்கு எதிரான மனநிலை யே அது என்றார்.
புனைவும் அரசியலும் வெவ்வே றல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமை யை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், ப டைப்பு குணாம்சத்தின் நுட்பங்க ளை கணக்கில் கொண்டே அவற் றை மறுவாசிப்புக்குள்ளாக் கினா ர்.
படைப்பூக்கத் தன்மையும், ஆய்வு ம், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன் னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்க க் கூடியவர். அவரை இழந்து வா டும் குடும்பத்தாருக்கு எனது ஆழ் ந்த இரங்கலை தெரிவித்துக் கொ ள்கிறேன்.
தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உ லகத்திற்கும் அவர் ஆற்றிய பங்க ளிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டு க் கொள்கிறேன். @CMOTamilnadu @ Neelam_Culture @NeelamSocial @Neel amPublicat1