‘பட்டாம்பூச்சி ‘ படம் எப்படி இருக்கு திரை விமர்சனம்

‘பட்டாம்பூச்சி ‘ படம் எப்படி இருக்கு திரை விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து – இயக்கம் – பத்ரி , தயாரிப்பு  – அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர் , ஒளிப்பதிவு -கி ருஷ் ணசுவாமி , இசை -நவநீத் சுந்தர், , எடிட்டிங் – பென்னிஆலிவர் , சண்டைப்பயிற்சி ரா ஜசேகர், திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி , கலை இயக்கம் – பிரேம்குமார் , மக் கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத் , மற்றும் பலர் .

திரை கதை-;

சீரியல் கொலைகாரன் ஒருவனின் கொலைகளையும், அதற்கான காரணங்களையும் சை க்கோ – த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் ‘பட்டாம்பூச்சி 1989-களில் நடக்கிறது கதை. தூக்கு கைதியான சுதாகரிடம் (ஜெய்) கடைசி ஆசை என்ன என கேட் கி றார்கள். என்னைப்பற்றி எழுதிய ரிப்போர்டரை பார்க்க வேண்டும் என்கிறார். உடனே அ ந்த ரிப்போர்டரும் வரவழைக்கப்படுகிறார். அவரிடம் பேசும் சுதாகர் ‘செய்யாத கொலை க்காக என்னை தூக்கில் போடுகிறார்கள்’ என கூறிவிட்டு, ‘இந்த கொலை தான் செய்யல ன்னு சொன்னேன. ஆனா 7 கொலை பண்ணிருக்கேன். நான் தான் பட்டாம்பூச்சி’ என ட்வி ட்ஸ்ட் வைக்கிறார்.

உடனே திரை தீப்பிடிக்க, பழைய செய்தித்தாள்கள் புரட்டப்படுகிறது. ‘பட்டாம்பூச்சி’ என்ற சைகோ கொலைகாரனுக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் நீதிம ன் றத்திற்கு செல்ல, 30 நாளில் இவர் தான் ‘பட்டாம்பூச்சி’ என்ற சைக்கோ கொலைகாரர் என் பதை நிரூபிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்தப் பொறுப்பு காவல் அதி கா ரி குமரனுக்கு (சுந்தர் சி) வழங்கப்படுகிறது. இறுதியில் சுதாகர் தான் பட்டாம்பூச்சி என் ப து நிரூபிக்கப்பட்டதா? அவர் ஏன் கொலைகளை செய்தார்? எதற்காக செய்தார்? என்ற கே ள்விகளுக்கு பதிலளிக்கிறது ‘பட்டாம்பூச்சி’ படத்தின் திரைக்கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

  கொலை வழக்கொன்றில் தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கிறார் சுதாகர். தன் கடைசி ஆசையாகப் பத்திரிகையாளர் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறார். அந்தச் சந்திப்பில் தா ன் ஏற்கெனவே ஏழு கொலைகள் செய்திருப்பதாகவும், அந்தப் பத்திரிகையாளர் தொடர்ச் சியாக எழுதி வந்த ‘பட்டாம்பூச்சி’ சீரியல் கில்லர் தானே என்றும், தற்போது குற்றவாளி ஆ க்கப்பட்டிருக்கும் கொலைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அறிவிக்கிறா ர். சுதாகராக நடிகர் ஜெய். இந்திய சினிமாக்களில் டான் கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர்க ளி ன் காட்சிகளில்கூட பெண்கள், குழந்தைகளை டீல் செய்யும் போது சாஃப்ட்டாகத்தான் காட்சிகள் அடுக்குவார்கள்.

ஆனால், நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ஜெய்க்கு இதில் கொடூர சீரியல் கில்லர் வேடம். அதுவும் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் என டார்கெட் செய்து குரூரமாகக் கொ ல்லும் வேடம். எதைப் பற்றியும் யோசிக்காமல் துணிந்து நடித்திருக்கிறார். அதிலும் பட த் தின் இறுதிக்காட்சிகளில் சிரித்துக்கொண்டே யாரை எப்படி கொலை செய்தேன் என ஜெ ய் சொல்வது வேற லெவல் சைக்கோத்தனம். 30 நாள்களுக்குள் ஏழு கொலைக ளுக் கான காரணத்தையும், கொலை செய்த விதம் குறித்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பொறுப்பு காவல் அதிகாரி குமரனுக்கு வருகிறது.

புதிது புதிதாகக் கட்டளைகள் பிறப்பிக்கும் சுதாகரை எப்படி டீல் செய்கிறார் குமரன் எ ன க் கதை விரிகிறது. இன்னொரு பக்கம் சுதாகர் ஏன் இப்படி ஆனார் என்பதும், குமரனு க்கா ன குடும்ப பிரச்னைகள் குறித்தும், குமரனுக்கும் பத்திரிகையாளருக்குமான சம்பந்தம் கு றித்தும் காட்சிகள் அடுக்கப்படுகின்றன.  தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பின் வடு அக லாத குமரனாக சுந்தர் சி. தனக்கு இருக்கும் பிரச்னை வெளிப்படும் காட்சிகளில் சிறப் பா கவே நடித்திருக்கிறார். பத்திரிகையாளர் வேடத்தில் ஹனிரோஸ். அவருக்கான காட்சி க ள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், அவரை வெறுமனே ஒரு கிளாமர் மாடலாக சித்திரித் திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

யார் யாரின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள், சுதாகர் வெறுமனே ஒரு சீரியல் கில்லரா அ ல்லது ஆகப்பெரும் கில்லாடியா என்பதாக சைக்கோ த்ரில்லர் கதையாக விரிகிறது  பட த்தின் முதல் பாதியில் சில வசனங்கள் சுவாரஸ்யமாய் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ரி, பா லாஜி வேணுகோபால், போகன் சங்கர் குழுவுக்குப் பாராட்டுக்கள். அதே போல், த்ரில் லர் கதையை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சாத்வீகமாக எடுக்காமல், கொலைகள் இப்படித்தான் நடக்கின்றன, கொலைகாரர்கள் யாருக்கும் தயவு தாட்சண் யம் பார்ப்பதில்லை என்பதை அழுத்தமாக விவரிக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய முயற்சி.

சுதாகராக நடிகர் ஜெய். இந்திய சினிமாக்களில் டான் கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர்க ளின் காட்சிகளில்கூட பெண்கள், குழந்தைகளை டீல் செய்யும் போது சாஃப்ட்டாகத்தான் காட்சிகள் அடுக்குவார்கள். ஆனால், நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ஜெய்க்கு இ தில் கொடூர சீரியல் கில்லர் வேடம். அதுவும் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் என டா ர் கெட் செய்து குரூரமாகக் கொல்லும் வேடம். எதைப் பற்றியும் யோசிக்காமல் துணிந்து நடித்திருக்கிறார். அதிலும் படத்தின் இறுதிக்காட்சிகளில் சிரித்துக்கொண்டே யாரை எப்படி கொலை செய்தேன் என ஜெய் சொல்வது வேற லெவல் சைக்கோத்தனம்.

தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பின் வடு அகலாத குமரனாக சுந்தர் சி. தனக்கு இருக்கும் பிரச்னை வெளிப்படும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.  பத்திரிகையாளர் வேடத்தில் ஹனிரோஸ். அவருக்கான காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும்,  அவ ரை வெறுமனே ஒரு கிளாமர் மாடலாக சித்திரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.  பட த்தின் முதல் பாதியில் சில வசனங்கள் சுவாரஸ்யமாய் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ரி, பாலாஜி வேணுகோபால், போகன் சங்கர் குழுவுக்குப் பாராட்டுக்கள். அதே போல்,  த்ரி ல்லர் கதையை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சாத்வீகமாக எடுக்காமல், கொலைகள் இப்படித்தான் நடக்கின்றன, கொலைகாரர்கள் யாருக்கும் தயவு தாட் சண் யம் பார்ப்பதில்லை என்பதை அழுத்தமாக விவரிக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய முயற்சி.

ஆனால், த்ரில்லராக ஆரம்பிக்கும் ‘பட்டாம்பூச்சி’, ஒரு கட்டத்துக்கு மேல் அப்படியே நின் றுவிடுகிறது. முதல் பாதியில் இடைவேளை வரை வெளிப்படும் அந்த அதிபுத்தி சாலி த் தனம் இரண்டாம் பாதியில் மொத்தமாக மிஸ்ஸிங். சேஸிங், கடத்தல், சண்டை என்பதாக மட்டுமே காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள். இமான் அண்ணாச்சியின் காட்சிகளில் நம்பக த்தன்மை குறைகிறது. நவநீத் சுந்தரின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டி னா லு ம், எங்கேயோ கேட்ட இசை போலத் தொனிக்கிறது.சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் கதைக்கு இன்னும் சிரத்தையுடன் இரண்டாம் பாதியை அமைத்திருந்தால், ‘பட்டாம்பூச்சி’ தன் சிறகை இன்னும் மிரட்டலாய் விரித்திருக்கும். அதே சமயம், இது எல்லோருக்குமான சினிமா அல்ல. வன்முறைக் காட்சிகள் சற்று அதீதம் என்பதால், அதை உணர்ந்து இந்தப் படத்துக்குச் செல்வது யாவருக்கும் நலம்.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரைப்ப டத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5