நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சி மிக அவசியம்..!
டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி பேச்சு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நல வாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம்வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியா ளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம்.
உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவி யாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..”என திரைப்பட இயக்குநரும், விழாவின் தலைமை விருந்தினருமான திரு.என்.லிங்குசாமி குறிப்பிட்டார். நம் சொந்த வீடுகளில், இதை அனுபவிக்க முடியும். நீங் கள் அனுபவித்தவுடன், உங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் என்றென்று ம் உதவும் என்றும் கூறினார்.
‘ஒன்றிணைவோம்வா’ பற்றிய குறிப்பு
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள், 27 இலட்சம் ம க்கள்தொகை கொண்ட விவசாயிகள் பெல்ட்டை உள்ளடக்கிய சிறப்பு 45 நாட்கள் சிறப்பு த் திட்டம் செப்டம்பர் 6 முதல் 2023 அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது.
இன்றைய உலகில், பரபரப்பான வாழ்க்கை முறை, போட்டி நிறைந்த வணிக உலகம், அதி க எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் சமூகம், தயவு, ஒற்றுமை, தனிநபர் நலன் மீறிய கூட் டு மனித நலன் மற்றும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை குறைந்து வருகிறது. தூக் கமின்மை, மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பல குடும்பங்களில் அழிவை உருவாக் குகிறது. கேட்ஜெட்டை மையமாகக் கொண்ட இளைஞர்களின் உடல் மனநலம் சார்ந்த வா ழ்க்கை முறை அவர்களின் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும். எனவே மக்களைப் பா துகாப்பதற்கான இந்த முயற்சியானது நமது சொந்த மக்களுக்குச் செயல்படுவ தற்கு ம் சேவை செய்வதற்கும் / பாதுகாப்பதற்கும் காலத்தின் தேவையாகும்.
மனநலம், குணநலம், உணர்வுசார்ந்த முழுமையான ஆரோக்கியத் திட்டத்துடன் சிறப்பா க வடிவமைக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள், உ ழை க்கும் மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய, [ஹார்ட்ஃபுல்னெஸ் என்ற 75 வருடமா க இ லாப நோக்கற்ற மக்கள் நல அமைப்பு] சேவை செய்ய செங்கல்பட்டு மாவட்டத்தை தேர்ந் தெ டுத்துள்ளது.
அறிவியல் பூர்வமாக நேர சோதனை செய்யப்பட்ட நிரூபிக்கப்பட்ட நடைமுறைகள் மூலம் உடல்நலம் மற்றும் மன நலத் திட்டங்கள் அரசு பள்ளி குழந்தைகள், தனியார் நிறுவன ங்க ள், சுயஉதவிக்குழு, களத்தில் உள்ள விவசாயிகள், 100 நாள் பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், இளைஞர்கள், கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், தொகுதி வளர்ச்சி அலுவலகம், கிராம பங்குதாரர்கள் ஆகியோரை சென் றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சமுதாயத்தின் அனைத்து தரபட்ட மக்களை, ஒ வ்வொரு கிராமத்திலும் அவர்கள் இல்லம் தேடி சென்று சேவை செய்ய இருக்கிறோம்.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 தன்னார்வத் தொண்டர்கள் தங்களுடைய நேரத் தையும், முயற்சியையும் அர்ப்பணித்து, இந்த கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் த ங்கி, இந்த நுட்பங்கள் மூலம் அவர்களுக்கு அனுபவத்தை அளித்து, அவர்களின் தனிப்பட் ட நலனுக்கான வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்துடன் மனதளவில் இணைய ஒரு சிறு மு ய ற்சியாகும். குடும்பங்கள், சமூகம் மற்றும் வாழ்க்கையைச் சுற்றிலும் கட்டமைக்க சுற் று ச்சூழல் நல்வாழ்வு அமைய ஹார்ட்ஃபுல்னெஸ் இயக்கத்தின் இந்த தன்னலமற்ற நடை மு றையானது 160 நாடுகளில் உள்ள பல கோடி கணக்கான உயிர்களைத் தொட்டு, தூய அன் பு மற்றும் கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் ஆழமான உணர்வுடன் அவர்களை அரவணைத்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர், மகளிர் அதிகாரமளித்தல் துறை – சுய உதவி குழு அனைத்து கிராமங்களிலும் உள்ள இதயம் நிறைந்த தன்னார்வலர்களுக்கு ஒப்புதல் அளித்து கடிதம் வழங்கியுள்ளது, மேலும் இது “சமூகம் மற்றும் மனிதநேயம் முத ன்மை” என்ற ஒரே நோக்கத்துடன் ZERO செலவில் / இலவச அடிப்படையில் வழங்கப்படுகி றது. எனவே, உடல், மனம், இதயத்தை வாழ்க்கையின் மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி க் கு “ஒன்றினைவோம்வா” என்று பெயரிடப்பட்டது.
சமுன்னதி அக்ரி ஃபண்டிங் அமைப்பின் எம்.டி மற்றும் சி.இ.ஓ மற்றும் விவசாய நிதி இ டைநிலை மற்றும் வேளாண் ஆலோசனை அமைப்பின் முன்னோடி, டிரெண்ட்செட்ட ரனா திரு.அனில் குமார் கூறுகையில், இந்தியா முழுவதும் உள்ள எஃப்.பி.ஓ.க்கள்(FPOs) மற்றும் பல விவசாய பங்குதாரர்களுக்கு இந்த ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்று மேலும் கூறினார். தன் நம்பிக்கை, சிறந்த வாழ்க்கைக்கான இலட்சியம் போன் ற வை மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே சாத்தியபடும், வேலை பயனுள்ளதாக அமை ய, உறவுகள் சீராக இருக்க, இந்த பயிற்சி மிக மிக அவசியமான ஒன்றாகும். அது விவசாயி கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் முழுமையான நலனுக்கு உதவுகிறது. அது தனக்கும் நாட்டில் விவசாய சூழல் அமைப்புக்கும் எப்படி உதவியது என தனது அனு பவத்தை விவரித்தார்.
இந்த நிகழ்ச்சி் அறிமுக தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினரகளோடு, அரசாங்க அ திகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பெரும் திறளா னவர்கள் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர்கள் மற்றும் அழைப்பாளர்களுடன் ஒரு த னித்துவமான அனுபவத்துடன் வெளியீட்டு நிகழ்வு இனிதே நடைபெற்றது,
செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த நடைமுறையை பொதுமக்கள் அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாகும், மேலும் அவர்கள் அனைவருக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக கிராம அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மூலம் தன்னார்வலர்களை இல்லம் தேடி செல்லவுள்ளனர்.
ஹார்ட்புல்னெஸ் பயிற்சியை பொதுமக்கள் அனுபவிக்க இது ஒரு பெரும் வாய்ப்பாகும், மேலும் அவர்கள் அனைவருக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக கிராம அதிகாரிகள் ம ற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மூலம் தன்னார்வலர்களை சந்திக்கலாம்.
உதவிக்கு, தொடர்பு கொள்ளவும்:
+916366527001|chengalpattu@heartfulness.orgw