நமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான
நமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. கலை இலக்கியத் துறையில் நா.முத்துகுமார் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது. இந்நிலையில் நா.முத்துக்குமரின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவர் எழுதிய நூல்களைக் கொ ண்டுசேர்ப்பது நமது கடமையாகிறது.
25/12/2020 மாலை சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெ ற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரின் மனை வி ஜீவா மற்றும் அவரது மகன் ஆதவன் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து, நா.முத்துக் கு மாரின் புத்தகங்களுக்கான பதிப்புரிமை ஒப்பந்தத்தை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவ னம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சந்திப்பில் முத்துகு மா ரின் குடும்பத்தாரிடம், டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங் கப் பட்டது. முத்துகுமாரின் மகன் ஆதவன் முத்துக்கு மார் தன் அப்பாவைப் பற்றி வாசித்த கவிதை பார்வையாளர்களை உருக்குவதாக அமை ந்தது.
இந்நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோருடன், எழு த் தாளர் அஜயன்பாலா, வழக்கறிஞர் சுமதி மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நிருவனத்தின் இயக்குநர்கள் மு.வேடியப்பன் மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொ ண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், கொரோனா சூழல் சரியா னதும், சென் னையில் முத்துகுமாருக்காக திரை உலகமே ஒன்றிணைந்து பிரமாண்டமான விழா எடுக் கப்படும் என்று அறிவித்தார்.