நதி: திரை விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன், முனிஷ்காந்த் , A வெங்கடேஷ் , வடிவேல் முருகன் ,‘மைக்செட்’ ஸ்ரீராம், கொடங்கி வடிவேலு, ராம்நிஷாந்த் மற்றும் பலர் .
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குநர் : K.தாமரைசெல்வன் ,தயாரிப்பாளர் : சாம் ஜோன்ஸ் , ஒளிப்பதிவு : எம்.எஸ். பிரபு இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ் , எடிட்டர்: ஆர்.சுதர்ஷன் , வசனங்கள் : லக் ஷ்மி சரவ ணகுமார் , கலை இயக்குனர் : விஜய் தென்னரசு , நடன இயக்குனர் : தினேஷ், விஜயா ராணி மக்கள் தொடர்பு : சதீஷ் AIM . மற்றும் பலர் ,
திரை கதை-;]
மதுரையில் நடக்கிறது கதை. ‘நேட்டிவிட்டி’யுடன் கூடிய உள்ளூர் அரசியல், வர்க்கம், சாதி, உறவினர்கள் செய்யும் உள்ளடி துரோகம் ஆகியவற்றோடு விளையாட்டையும் திரைக் க தையில் நேர்த்தியாக நுழைத்து விறுவிறுப்பு குன்றாமல் படத்தை தந்திருக்கிறார், எழுதி, இயக்கியுள்ள தாமரைச் செல்வன்.ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, விளையாட்டுத் திறமை மூலம் தனது எளிய குடும்பத்தை அடுத்த கட்ட த் துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறார் கல்லூரி மாணவர் தமிழ் (சாம் ஜோன்ஸ்). அதே கல் லூரியில் பயிலும் பாரதி (கயல் ஆனந்தி), தமிழின் தனித்திறன் பார்த்து அவருடன் நட் பா கிறார். ஆனால், உள்ளூரின் மூத்த அரசியல்வாதியும், பாரதியின் பெரியப்பாவுமான மு த்தையா (வேல.ராமமூர்த்தி), அவரது தம்பி (ஏ.வெங்கடேஷ்), மகன் (பிரவீன்குமார்) ஆகி யோர் தமிழும், பாரதியும் காதலிப்பதாக தவறாக கருதுகின்றனர். அதனால், தமிழை அ வர்கள் என்ன செய் தார்கள்? அதன்பிறகு தமிழ் எதிர்கொண்ட வாழ்க்கை என்ன என்பது கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
பேட்மிண்டன் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர் தான் கதையின் நாயகன் தமிழ். இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வே ண் டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்… கதையின் நாயகி பா ரதியும் தமிழும் கல்லூரி நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் காதலிக்கிறார்கள் எ ன் று தவறாக புரிந்து கொள்கின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் குடு ம்பத்தின ர் தமிழை சம்மந்தமில்லாத ஒரு வழக்கில் மாட்டி விடுகின்றனர். நண்பர் பாரதி தமி ழை அந்த வழக்கிலிருந்து வெளியே எடுக்க போராடுகிறார்.
அப்படி பாரதி போராடும் போது தான் தமிழ் மீது உள்ள காதலை பாரதி சொல்கிறார். பா ரதியின் குடும்பத்தினர் த மிழை ஒதுக்க, தமிழ் இவர்களை விட கீழ் ஜாதியினர் என் பதும் ஒரு காரணம்….பிறகு பா ரதி தமிழை வழக்கிலிருந்து காப்பாற்றினாரா? தமிழ் தன் பா ர தியுடன் சேர்ந்தாரா? பார தியின் குடும்பத்தினர் என்னென்ன செய்தார்கள்? என்பது பட த்தின் மீதி கதை…படத்தில் ‘மைக்செட்’ ஸ்ரீராம், கொடங்கி வடிவேலு, ராம்நிஷாந்த் ஆகி யோருக்கு அளிக்கப்பட்ட வா ய்ப்புகளும், அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட வித மும் வரவேற்க வேண்டியது. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு பலம். ஒரு காட்சியில் நாயகன், ‘ச்சீ இங்கையும் வந்துட் டீங் ளா?’
என கேட்கும் காட்சிக்கும், வசனத்திற்குமான நோக்கம் என்ன? என்பது தெரியவி ல் லை…. காதல் காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.இந்த காதலையும் ஜாதியை யும் வைத்து பஞ்சாயத்து பண்ணுகிற கதைகள் காலகாலமாய் கைகோர்த்து வந்துகொ ண்டேயிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ‘நதி’.ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும், அரசியல்வாதி குடும்பத்துப் பண க் காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் கொஞ்சம்பழை ய கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி. நாயகனாக நடி த்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொரு த்தமாக இ ருக்கிறார்.
காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் நடிப்பில் இன்னும் கொஞ்சம் பயிற்சியும் முயற் சியும் வேண்டும்.நாயகி ஆனந்தி படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார். காதலில் வி ழும் காட்சிகள், கடைசியில் காட்டும் உறுதி ஆகியன அவருக்கு மேலும் சிறப்புச் சேர் க்கி ன்றன.நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த்துக்கு நல்லவேடம். அவரும் அ தைப் பொறுப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.நாயகியின் அப்பா இயக்குநர் ஏ. வெங்கடேஷ், நாயகியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் உயர்சாதித் திமிர் மற்றும் அரசியல்வாதிகளின் அழிச்சாட்டியத்தை அழகாக வெளிப்படு த்தியி ருக்கி றார் கள்.
அதிலும் நரித்தனமான வேலைகள் செய்யும் அரசியல்வாதி கேரக்டரில் கரு பழனி ய ப் பன் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார்.எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் மதுரை ம ற் றும் சுற்றுவட்டாரங்கள் தத்ரூபமாக இருக்கின்றன. திபுநினன்தாமஸ் இசையில் பா ட ல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.ஆனாலும் ஒருமுறை பா ர்த்து ரசிக்கலாம்
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்ப டத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5