தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவு சைக்கிள்பேரணி.

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவு சைக்கிள்பேரணி.
சாத்தூரில் மாநிலத்தலைவர்  மகாத்மா சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு.
சாத்தூர், ஜூலை-23
மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவு சார்பில்  மாநிலத்தலைவர்  மகாத்மா சீனிவாசன் தலைமையில் 56 நபர்கள் சைக்கிள் பேரணியாக சாத்தூர் வந்தடைந்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் டி.எஸ். அய்யப்பன்  தலைமையில் ,விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ஜோதி நிவாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
மாநில பொது செயலாளர் முருகன், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலையில் சைக்கிள் பேரணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.   விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், நகர பொருளாளர் சிந்தியப்பன்,பூக்கடை கருப்பசாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம்,  சங்கரபாண்டியன், ஒன்றிய மாணவரணி தலைவர் மணிவண்ணன் ,அண்ணாநகர் இளங்கோவன் ,ஹரிகிருஷ்ணன், பரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ‌.