தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி

தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி அடிப்படையில் இணைந்து செயல்பட முடிவு!

* இந்தியா இயற்கை வைர நகைகளுக்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்து வரும் நிலையில், வைர நகைத் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் டி பியர்ஸ் மற்றும் தனிஷ்க் வைரத்தின் மீதான அழிவில்லாத மதிப்பை இன்னும் ஏராளமான மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இணைந்து செயல்பட இருக்கின்றன.

உலகின் முன்னணி வைர நிறுவனமான டி பியர்ஸ் குழுமம் [De Beers Group] மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்ததும் இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாகவும் திகழும் தனிஷ்க் [De Beers Group] ஆகிய இரு நிறுவனங்களும் செயல்பாட்டு யுக்திரீதியாக இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்திருக்கின்றன. மிக அரிதாக கிடைக்கும் இயற்கை வைரங்களின் உயரிய தரம் மற்றும் விலைமதிப்பற்ற தன்மை ஆகியவற்றை இன்னும் ஏராளமான இந்திய வாடிக்கையாளர்களுடன் இணைக்கவும், இந்தியச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வரும் இயற்கை வைர நகைகளுக்கான தேவைகளை எதிர்கொள்ளவும் நீண்ட கால யுக்தி அடிப்படையில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட இருக்கின்றன.

உற்சாகத் துடிப்புடன் இருந்து வரும் பொருளாதாரம், வளர்ச்சிக்கண்டு வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் காலத்தால் அழியாத, என்றென்றும் நிலைத்து இருக்கும் மதிப்பு கொண்ட நகைகளைத் தேடும் விவேகமுள்ள வாடிக்கையாளர்கள், சமீபகாலமாக இந்திய சந்தையில் வைர நகைகள் மீதான ஈர்ப்பு வாடிக்கையாளர்களிடையே வெகுவாக அதிகரித்து வருவது போன்ற அம்சங்களால் இப்போது இயற்கை வைர நகைகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துவருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இப்போது இயற்கை வைர நகைகளுக்கான உலகளாவிய தேவையில் 11 சதவீதத்தை இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் மூலம், இயற்கை வைர நகைகளுக்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக திகழ்ந்த சீனாவின் இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த சந்தைகளை விட இந்தியாவில் வைரம் வாங்கும் விகிதமானது மிகக் குறைவாக இருப்பதால், இந்தியாவில் இயற்கை வைர நகைகளுக்கான வளர்ச்சியை மேலும் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கின்றன.

மிகப்பெரும் வளர்ச்சிக்கான இந்த அருமையான வாய்ப்பை செயல்படுத்தும் நோக்கத்துடன் தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் நீண்ட காலம் இணைந்து செயல்படுவதற்கான செயல்பாட்டு யுக்தி ரீதியிலான உடன்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இயற்கை வைரங்கள் பற்றிய கல்வியறிவை மேம்படுத்துவது, இயற்கை வைரங்கள் மீதான ஈர்ப்பையும், நம்பிக்கையையும் உருவாக்குவது, இந்தியா முழுவதிலும் இயற்கை வைரங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட இருக்கின்றன. மேலும் இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம், முப்பது ஆண்டுகளாக இந்திய சந்தை பற்றி தனிஷ்க் கொண்டிருக்கும் ஆழமான புரிதலையும், நீண்ட காலமாக வைர பிரிவில் டி பியர்ஸ் மொண்டிருக்கும் நிபுணத்துவத்தையும் இணைத்து இரு நிறுவனங்களும் விவேகத்துடன் செயல்படவுள்ளன. இதன் மூலம் இயற்கை வைரங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை உற்சாகப்படுத்துவதையும், அவற்றின் மீது இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதையும் மேற்கொள்ள இருக்கின்றன. இயற்கை வைரங்களுக்கு மட்டுமே இருக்கும் மிக அரிதான தன்மை மற்றும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் மதிப்பு ஆகியவற்றை இந்த கூட்டு செயல்பாடு வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

இதன் தொடர்ச்சியாக, பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கான அம்சங்களை செயல்படுத்துதல், இயற்கை வைரங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தனிஷ்கின் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு இயற்கை வைரங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவையும், திறனையும் மேம்படுத்துதல், இயற்கை வைரங்களின் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்தல், இயற்கை வைரங்கள் மற்றும் பதிக்கப்பட்ட நகைகள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் எதிர்பார்புகள் மற்றும் விருப்பங்களை பற்றி ஆராயும்போது அவர்களுக்கு மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபத்தை அளித்தல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் இணைந்து செயல்பட இருக்கின்றன. இவை அனைத்தும், 360 டிகிரி கோணத்தில் அனைத்து அம்சங்களுடனும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்துடன் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த பிரச்சாரமானது, இயற்கை வைரங்கள் பற்றிய விழிப்புணர்வையும், இந்தியாவில் இயற்கை வைரம் மீது ஆர்வம் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தளத்தை மேலும் விரிவுப்படுத்துவதையும், முதல் முறையாக வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கூட்டு செயல்பாடானது, தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ் இடையே இருந்து வரும் உறவிலிருந்து கட்டமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. தனிஷ்க் தனது தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உத்திரவாதம் அளிப்பதற்காக, டி பியர்ஸ்-சின் தனியுரிம வைர சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் [Beers’ proprietary diamond verification technology] பயன்படுத்தி வருகிறது. இரு நிறுவனங்களும் இயற்கை வைரங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை கண்டறிவதில் இணைந்து செயல்படுவது குறித்தும், தனிஷ்க்கின் வைர விநியோகத் தேவைகளை எவ்வாறு சிறப்பாகப் பூர்த்தி செய்வது என்பது குறித்தும், அடுத்தடுத்து இருக்கும் கூட்டு செய்ல்பாடுகளில் டி பியர்ஸின் தனியுரிம தொழில்நுட்பங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் ஆதரிக்க டி பீர்ஸின் தனியுரிம தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

டி பியர்ஸ் ப்ராண்ட்ஸ்-ன் தலைமை செயல் அதிகாரி திரு. சாண்ட்ரின் கான்செல்லர் [Sandrine Conseiller, CEO of De Beers Brands] கூறுகையில், “இந்தியாவின் வைரங்கள் மீதான காதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு கொண்டாட்டமாக வளர்ச்சியடைந்து கொண்டே வந்திருக்கிறது. மேலும் இந்த துடிப்புமிக்க இந்தியச்ச் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த தனிஷ்க் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டி பியர்ஸை போலவே, தனிஷ்க்கும் இயற்கை வைரங்களுக்கு இருக்கும் மாபெரும் சக்தியையும், விலைமதிப்பற்ற உயரிய தன்மையையும், கௌரவத்தையும் அங்கீகரித்து வருகிறது. மேலும் எங்களுடைய ஆழ்ந்த நிபுணத்துவத்தை, இந்திய சந்தை பற்றி தனிஷ்க் கொண்டிருக்கும் ஆழமான புரிதலுடன் இணைத்து செயல்பட இருக்கிறோம். இதன் மூலம், இந்த இயற்கை பொக்கிஷங்கள் மற்றும் அவற்றின் நீடித்திருக்கும் மதிப்புடன், பெரும் எண்ணிக்கையிலான இந்திய வாடிக்கையாளர்களைச் சென்றடைய உதவும் சிறப்பான யுக்தியை செயல்படுத்த இருக்கிறோம்’’ என்றார்.

டைட்டன் கம்பெனி லிமிடெட் ஜூவல்லரி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஜோய் சாவ்லா [Ajoy Chawla, CEO, Jewellery Division, Titan Company Limited] கூறுகையில், “உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து வரும் சூழலில், கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் இன்னும் முழுமையான அளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடையாத நிலையில், இந்தியாவில் வைர சந்தைக்கான வாய்ப்பு மிகப்பெரியளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனிஷ்க் முப்பது ஆண்டுகளாக சந்தையில் உயர் தரத்திலான வைர நகைகளை அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைக்கச் செய்திருப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நவீன முற்போக்கு பெண்களை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது. தனிஷ்க் வைரங்கள் உயர் தரத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக எப்பொழுதுமே மிகக் கடுமையான தரநிலைகளை கடைபிடிக்கிறது. இங்குள்ள அனைத்து வைரங்களும் ’கிம்பர்லி ப்ராசஸ் சர்டிஃபிகேஷன் ஸ்கீம்’ (Kimberley Process Certification Scheme (KPCS))-யையும் மற்றும் தனிஷ்க் சப்ளையர்ஸ் என்கேஜ்மென்ட் புரோட்டோகால் (Tanishq Suppliers Engagement Protocol (TSEP)-யும் பின்பற்றி மிகுந்த பொறுப்புணர்வோடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

“நாங்கள் எங்களது தனிஷ்க் வைர உத்தரவாத சான்றிதழையும் [certificate of Tanishq Diamond guarantee] நம்பகத்தன்மைக்காக வழங்குகிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மற்றும் மன அமைதியை செயல்படுத்தும் வகையில், இந்தியாவில் மிகவும் வெளிப்படையான பை-பேக் கொள்கையைக் கொண்டுள்ளோம். நாளுக்கு நாள் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகத்தில், மெய்நிகர் வாழ்க்கை முறை என்பது யதார்த்தமான வழக்கமாகி வருகிறது. இதனால் மக்கள் உண்மையான பிராண்டுகள், உண்மையான அனுபவங்கள் மற்றும் இயற்கையை கொண்டாடுதல், ஆரோக்கியமான தயாரிப்புகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தனிஷ்க்கின் அனைத்து வைரங்களும் இயற்கையானவை. கிடைப்பதற்கு மிகவும் அரிதானவை. பெரும் மதிப்புடையவை. இத்தனை அம்சங்களுடன் புதுமையான நவீன வடிவமைப்புகளில் இந்த வைரங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. டி பியர்ஸ் உடனான கூட்டு செயல்பாடு, தனிஷ்க்கிற்கும், வைர துறைக்கும் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் இனி வாடிக்கையாளர்கள் இயற்கையின் இந்த ஆச்சர்யமூட்டும், காலம் கடந்தும் அழிவில்லாமல் நிற்கும் அழகை கொண்டாடுங்கள்’’ என்றார்.