தநைரா கைத்தறி தினத்தை முற்றிலும் மேம்படுத்தப்பட்ட காதி புடவைகளுடன் கொண்டாட அழைக்கிறது!

தநைரா கைத்தறி தினத்தை முற்றிலும் மேம்படுத்தப்பட்ட காதி புடவைகளுடன் கொண்டாட அழைக்கிறது!

* அழகிய இயற்கை மற்றும் நினைவுகளைத் தூண்டும் ரெட்ரோ-இம்ப்ரெஷனிசத்தால் [Retro-Impressionism] ஈர்க்கப்பட்டு, கையால் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட காதி புடவைகளில் புத்துணர்வுடன் கூடிய மகிழ்ச்சியைக் கொண்டாட அழைக்கிறது தநைரா.

சென்னை 8 ஆகஸ்ட், 2024: பாரம்பரியம் மற்றும் சமகால பாணி இவை இரண்டையும் அழகியலுடன் கூடிய பொருத்தமான கலவையில் ஒருங்கிணைத்து, டாடா குழுமத்தின் தயாரிப்பாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தநைரா [Taneira], தேசிய கைத்தறி தினத்தை [National Handloom Day] கொண்டாடும் வகையில் தனது காதி புடவை தொகுப்பை பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பண்டைய கால பாரம்பரியங்களிலிருந்து உருவாகி மூடுப்பனியைப் போல் எங்கும் இருக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் காதி பல நூற்றாண்டுகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து, காலத்தின் வரலாற்றின் மூலம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. பழங்கால சிந்து நாகரிகத்தின் தோற்றத்திலிருந்து, அது முதன்முதலில் திறமைமிக்க கைகளால் லாவகமாக சுழன்று சுழன்று நெய்யப்பட்டது. இப்பேர்ட்ட காதி வரலாற்றில் தொடர்ந்து பயணித்து, சுதந்திரத்திற்கான போராட்டத்தின் போது சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக மாறியிருக்கிறது. பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் கலப்பதுடன், சமகால நாகரீகத்தின் சாம்ராஜ்யத்துடன் அழகுற ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த புதிய காதி தொகுப்பு. இதன்மூலம், கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தின் செழுமையான உணர்வை உள்ளடக்கிய ஒரு முத்திரைப் பதிக்கும் துணி வகையை இந்த புடவைத் தொகுப்பு மறுவரையறை செய்திருக்கிறது.

புதுமையை மையமாகக் கொண்டு, தநைரா அவர்களின் காதி தொகுப்பில் ‘இம்ப்ரெஷன் பிரின்டிங்’ நுட்பத்தை [‘Impression Printing’ technique] அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்தொகுப்பானது இயற்கையின் எழில்மிகு கலைத்திறன் மற்றும் சமகால அழகியல் ஆகிய இரண்டும் மிக நேர்த்தியாக கலக்கப்பட்ட வசீகரிக்கும் கலவையாகும். இயற்கை மற்றும் ரெட்ரோ-இம்ப்ரெஷனிசத்தால் ஈர்க்கப்பட்டு, இத்தொகுப்பானது மிகவும் நுட்பமாக இலைகளினால் பதிக்கப்படும் லீஃப் இம்ப்ரிண்ட்கள் [leaf imprints], மிகவும் நுணுக்கமான ப்ளாக் ப்ரிண்ட்கள் [block prints], கைகளினால் வரையப்படும் ஓவியம், ப்ரிண்ட்கள் மற்றும் நெய்யப்பட்ட வடிவமைப்புகளினால்பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேலையும் ஒரு அழகிய ஓவியத்தின் கேன்வாஸ் போல் தயாராகி இருக்கிறது. இப்புடவைகளில் இயற்கையின் அழகு ஜவுளி பாரம்பரியம் மற்றும் சமகால அழகியல் ஆகியவை ஒத்திசைந்து செவ்வியல் கலவையை உயிர்ப்பிக்கின்றன. மேலும், வண்ணங்கள் மற்றும் ஜவுளியின் டெக்ஸ்ஷர் ஒன்றோடு ஒன்று இணைந்து நம் மனதை மயக்கும் வகையில் உருவாகி இருக்கின்றன. இந்த தொகுப்பில் பாகல்பூரில் இருந்து பெறப்பட்ட டஸ்ஸர் சில்க் [Tussar silk]-ல் இருந்து வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான டிசைன்களும், மேற்கு வங்காளத்தில் இருந்து மிகவும் நுணுக்கமாக அச்சிடப்பட்ட கருத்துருவாக்கங்களினால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தனித்துவமான டிசைன்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய தொகுப்பு பற்றி, தநைராவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அம்புஜ் நாராயண் [Mr. Ambuj Narayan, CEO of Taneira,] கூறுகையில், “காதி என்பது நாம் அணியும் வெறும் துணி மட்டுமல்ல, நமது தேசத்தின் ஆத்மார்த்தமான உணர்வு மற்றும் மன உறுதியின் சின்னம் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் முக்கியத்துவம் நாகரிகங்கள் முழுவதும் காலம் கடந்து பரவியிருக்கிறது. கலாச்சார பாரம்பரியத்தின் வளமைமிக்க ஒரு ஆடையாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காலம் கடந்தும் நிலைத்திருக்கும் இத்துணியில் தற்காலத்தின் நவீன வடிவமைப்பு அம்சங்களை நெசவு செய்வதன் மூலம், தநைராவில் நாங்கள், ஆழமாக வேரூன்றியிருக்கும் எங்களது பாரம்பரியங்களை கெளரவப்படுத்துவதோடு, எங்களது விவேகமான வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளையும் பூர்த்தி செய்கிறோம். இந்த தொகுப்பு, நமது பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் கைவினைஞர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான மரியாதையாக வெளிப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களின் கைவினைத்திறன் மற்றும் காதியின் மீதிருக்கும் காலம் கடந்த கவர்ச்சியையும் கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது’’ என்றார்.

வரலாற்றில் ஆழமாக வேரூன்றியிருக்கும், காதியின் அபரிதமான மென்மை மற்றும் காற்றோட்டமுள்ள அதை டெக்ஸ்ச்சர் இவை இரண்டும் சேர்ந்து, காதியினால் நெய்யப்பட்ட ஆடைகளை எந்த பருவத்திற்கும் அணிய ஏற்ற மிகச்சிறந்த தேர்வாக மாற்றியிருக்கின்றன. காதியின் இயற்கை இழைகள் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருப்பதால் எந்த பருவத்திற்கு அணியலாம். மேலும் ஆடையை அணிவதற்கான சௌகரியத்திற்கு அப்பால், காதி இதுவரை அதிகம் பேசியிராத நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. தனால் காதி வழக்கமான தருணங்களாக இருந்தாலும் சரி, அல்லது தொழில்முறையாகவோ அல்லது வைபவங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்களாகவோ இருந்தலும் சரி மிகச்சிறந்த பல்வகை பயன்பாடுகளுக்கான தேர்வாக அமைகிறது. ஹேண்ட்ஸ்பன் [Handspun] மற்றும் கையால் நெய்யப்பட்டதாக [handwoven] இருந்தாலும் காதியின் ஒவ்வொரு பகுதியும் அன்பினை வெளிப்படுத்துவதற்கான உழைப்பு, பெரும் ஆர்வத்துடனும் பெருமையுடனும் தங்கள் அர்ப்பணிப்பை காட்டும் கைவினைஞர்களின் அசைக்க முடியாத ஆத்மார்த்தமான உணர்வை இரண்டற கலந்த ஒன்றாக வெளிப்படுகிறது.. தநைரா இந்த செழுமைமிக்க பாரம்பரியத்தை தொடர்ந்து கெளரவப்படுத்தி மரியாதை காட்டி வருகிறது. அதே நேரத்தில் வடிவமைப்பின் புதிய எல்லைகளை உருவாக்கி, இன்றைய நவநாகரீக பெண்களுக்கு பொருத்தமானதாகவும், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அறிமுகப்படுத்தி வருகிறது.

40 தனித்துவமான டிசைன்களிலான தயாரிப்புகளுடன், நமது தேசத்தின் சுதந்திரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதியின் இழைகளைப் போலவே, இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தின் பல்வேறு வகையான ஜவுளிகளை ஒன்றாக இணைத்து நெய்து வருகிறது. தநைரா. ஆடை தொகுப்புகள் 7,999 ரூபாயில் ல் தொடங்குகிறது. தநைராவின் காதி ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களிலும் ஆன்லைன்னில் Taneira.com. என்ற இணைய முகவரியிலும் கிடைக்கின்றன. சமகால நேர்த்தியுடன் பாரம்பரியத்தின் காலம் கடந்து நிலைத்திருக்கும் இழைகளை அழகாக ஒன்றோடு ஒன்று நெய்வதன் மூலம் ஒவ்வொரு ஆடையும் மனம் மயக்குவதோடு, கவர்ந்திழுப்பதாகவும் இருக்கிறது.