தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !
வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சம ந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக தனி ப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வேளையிலும், அதை கடந்து த னது கேரியரில் கவனம் கொண்டுள்ளார். இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரி ட படாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறி வித் துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.
சமந்தா நடிக்கும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக தசரா பண் டிகை நன்னாளில் வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, பி ரபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உரு வாகும் படம் வித்தியாசமான திரைக் கதையாக உருவாகிறது. மற்றொ ரு படம் நாயகிக்கு க தை யில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரி ஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தை தயாரித்தவர்.
தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் அவருடைய படத்தை பற்றி கூறுகையில்,
“ சமந்தாவை இந்த படத்தில் ஒரு புது அவதாரத்தில் காண நாங்கள் மிகுந்த ஆவலாக உள் ளோம். இந்த படத்தை பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது, ஆனால் இந்த ப ட த்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என் னா ல் நிச்சயமாக கூற முடியும். இய க்குனர் ஹரி சங்கர் மற்று ம் ஹரிஷ் நாராயணன் இந்த கதையை என்னிடம் கூறிய போ து, நான் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளானேன். அவர் கள் கதை சொன்ன விதமும், அதை உரு வாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது. இருவரும் இணைந்து இ ந்த கதையை எழுதியுள்ள போது, அவர்கள் இருவரும் இணைந்து, இதை திரையில் அழ கா க கொண்டு வரவும் முடியும் என நான் நம்புகிறேன். அதே போல் இரு இயக்கு னர்க ளு க் கும், அவர்க ளு டைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது என் றார்.
சமந்தாவை நயாகியாக இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற யோசனை யா ருடையது என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் கூறி யதா வது……..
இது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. சமந்தாவை இந்த திரைப்படத்திற்கு அழைத்து வரு வது, படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என நான் நம்பினேன். இயக்கு நர் களும் அதை தான் நினைத்தார்கள். கதை தயாரான உடன் நாங்கள் சமந்தாவிடம் கூறி னோ ம். அவரும் கதை பிடித்து உடனே ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படபிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.