டிஜினூர் பொழுது போக்கு இணையதளம், புகழ்பெற்ற பாடகர்
டிஜினூர் பொழுது போக்கு இணையதளம், புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசு ப்ரமணிய த்தின் வெளியிடப்படாத கடைசி பாடலின் ஒரு பகுதியை வெளியிட உள்ளதாக அறவித் துள்ளது!
- 30 நிமிட நேரமுள்ள டிராக் ஏப்ரல் 9 தேதியில் ஏலம் விடப்பட உள்ளது
- இசைரீதியான மாஸ்டர்பீஸூக்கு 51 சதவீத பதிப்புரிமை பெறுவதற்கான ஏலத்தை வென்றுள்ளது
சென்னை, 28, மார்ச் 2022 : டிஜிட்டல் கலை சேகரிப்பாளர்கள், இசை ஆர்வலர்கள், மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு பிரபல இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிய த் தின் வெளியிடப்படாத கடைசி பாடலை சொந்தமாக்கிக் கொள்ள ஓர் வாய்ப்பு. இந்தி யாவின் முன்னணி பொழுதுபோக்கு என்எஃப்டி இணையதளமான டிஜினூர், இந்த பாட லை நான் பியூன்ஜியபிள் டோக்கனாக (NFT) விற்பனை செய்வதற்கான மற்றும் வெளியி டுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி 30 நிமிட டிராக்கை ஏலம் விடப்ப டஉள்ளது. என்.எஃப்டியின் மூலம் பாடலை வாங்குபவருக்கு பதிப்புரிமையின் 51 சதவீதம் மாற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். என்எஃப்டி வைத்திருப்பவருக்கு பாடலை மிகவும் பரந்துபட்ட அளவிலான பொது மக்களுக்குக் கிடைக்க செய்வதற்கும், அதை எந்த விதத்திலும் மாற்றியமைக்கவும் அல்லது மறுஉருவாக்கம் செய்வதற்குமான உரிமையை வழங்குகிறது.
செப்டம்பர் 2020-ல் கோவிட் தொற்று காரணமாக அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு எஸ்பிபி அவர்களால் பதிவு செய்யப்பட்ட இந்த கடைசி பக்தி பாடல், தமிழில் பாட ப்பட்டு வெளியிடப்படாத பாடலாகும். விஸ்வரூப தரிசனம் என்ற பெயரிடப்பட்ட அந்த ஆல்பம், முன்னணி இசை நிறுவனமான சிம்பொனி ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து எஸ்பிபி அவர்களால் பதிவு செய்யப்பட்டதாகும். என்எஃப்டி பகுதிக்கு 150000 டாலருக்கு முன் ஏலச் சலுகைகளை வழங்குகிறது. ரசிகர்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்க, டிஜினூர் ஏப்ரல் 2-ம் தேதி தனது தளத்தில் பாடலின் ஒரு நிமிட டிரெய்லரை வெளி யிடுகிறது.
ஆறு முறை தேசிய விருது பெற்றவரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான எஸ்பிபி யின் புகழ்மிக்க இசை வாழ்வு 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பரந்து விரி ந்துள்ளது.
என்எஃப்டி பகுதி குறித்து எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் கூறுகையில், “என் தந்தையின் கடைசியாக வெளியிடப்படாத பாடலின் என்எஃப்டி பகுதியை வெளியி டுவ தில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த என்எஃப்டியை உருவாக்கி, திரு.எஸ் .பி.பாலசுப்ரமணியத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதற்காக டிஜினூருக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான என்எஃப் டியை அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
டிஜினூர் என்பது சென்னையைச் சேர்ந்த 18 வயது தொழில் முனைவோர்களான ஷமீல் கரீம் மற்றும் யாஷ் ரத்தோட் ஆகியோரால் நிறுவப்பட்டது.
சிம்பொனி ரெக்கார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹரி (Sri Hari, CEO, Symphony Records) பேசுகையில், “புகழ்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் அவர்களின் பாடலைப் பாடும் ஈடுஇணையற்ற அவரது பாணி, மிகவும் செவ்வியல் தன்மை கொண்ட இசையை கூட மிகவும் மனதைத் தொடுவதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஆக்குகிறது. என்றென் றும் நம்மிடையே நிலைத்திருக்கும் அவரது இனிய குரலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அரிய இசை ஆல்பத்தை தொகுத்து தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எஸ்பி பியின் கடைசிப் பாடலை என்எஃப்டியாக வெளியிட டிஜினூருடன் கூட்டு சேர்ந்திருப்பதில் சிம்பொனி நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இது அவரது ரசிகர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் எஸ்பிபி சாரின் மகத்தான படைப்பு மற்றும் பதிப்புரிமையின் இணை உரிமையை பெற வாய்ப்பளிக்கிறது” என்றார்.
டிஜினூர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷாமில் கரீம் (Shaamil Karim, Founder and CEO, Diginoor) பேசுகையில், “எஸ்.பி.பாலசுப்ரணியம் சாரின் மரபு என்றென்றும் பிளாக் செயினில் வாழ வேண்டும் என்பதற்காக அவரது மகத்தான படைப்பை டிஜினூரில் பிரத் யேகமாக வெளியிடுவதில், ஒரு தமிழனாக, பெருமிதம் அடைகிறேன். இந்த தலைசிறந்த இசை படைப்புக்கான பதிப்புரிமையில் 51 சதவீதத்தை ஏலத்தில் வெற்றி பெறுபவர் களு க்கு மாற்றுவதற்கு என்எஃப்டி உதவும். இந்த துறையில் இது போன்ற முயற்சி இதுவே முதல் முறையாகும்” என்றார்.
சினிமா மற்றும் இசை ஆர்வத்தில் டிஜினூர் ஒரு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இது என்எஃப்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு சில பெரிய பிரபலங்கள் மற்று ம் தயாரிப்பு நிறுவனங்களின் நம்பகமான பங்கு நிறுவனமாக மாறியுள்ளது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட், YNOT புரொடக்ஷன்ஸ், ஏவி எம் புரொடக்ஷன்ஸ், தேனாண்டாள் ஸ்டுடியோ உள்ளிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவன ங்கள் டிஜினூருடன் கூட்டு சேர்ந்துள்ளன. சிவாஜி: தி பாஸ், சந்திரமுகி மற்றும் கபாலி போ ன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னணி படங்களின் டிஜிட்டல் தொகுப்புகளை மிகப் பெரிய பொழுதுபோக்கு என்எஃப்டி தளமான டிஜினூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
என்எஃப்டி தயாரிப்புகளை வாங்குவதற்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும் நாட்டிலேயே முதன்மையான இணையதளம் இதுவாகும்.
டிஜினூர் தளத்துக்கு கிரெட்டின் குணால் ஷா, துபாய் ஹோல்டிங்கின் முன்னாள் தலை மை நிர்வாக அதிகாரி அப்துல் வஹாப் அல் ஹலாபி, கலிபோர்னியாவை தளமாகக் கொ ண்ட கான்ட்ரரி கேப்பிட்டல் மற்றும் பாலிகான் நிறுவனத்தின் சந்தீப் நெய்வால் ஆகியோ ர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
டிஜினூர் குறித்து
டிஜினூர் இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி பொழுதுபோக்கு என்எஃப்டி சந்தையா கும், தென்னிந்திய திரைப்படங்களின் என்எஃப்டிகளுடன் தொடங்கி, இப்போது பரந்துப்ப ட்ட இந்திய அளவில் என்எஃப்டி உள்ளடக்கத்தை கொண்டதாக விரிவடைந்துள்ளது. மே லு ம் சினிமாவிலிருந்து இசை என்எஃப்டி கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கும் விரி வடைந்துள்ளது. டிஜினூர் இந்திய முதலீட்டாளர்களுக்கு வெப் 3.0 ஸ்பேஸில் முதலீடு செய் வ தற்கான வழியை வழங்குகிறது. அதே நேரத்தில் பிளாக்செயின் தொழில் நுட்பத்தில் இந்திய சினிமாவுக்கான இடத்தையும் உருவாக்குகிறது. மேலும் அறிய இல் www.diginoor.io இணையதளத்தில் லாக் இன் செய்து தெரிந்து கொள்ளலாம்.