சென்னை சின்னப்போருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவல கத்தில்
சென்னை சின்னப்போருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலு வல கத்தில் தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணை ப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தமிழன் சீமான் விடு தலை போ ராட்ட வீரர் ந மது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றுகின்ற நாள் இன்று. வீரமிக்க எமது மூதாதைகளில் தீரன் சின்னமலை வித்தியாசமானவர். தீரன் சின்னமலை மன்னரோ , மன்னரின் வாரிசோ இல்லை. அரசர் அழைத்தால் மக்கள் போரிட வருவா ர்க ள். ஆனால் தீரன் சின்னமலை ஒரு சாதாரண குடிமகன். அவர் மக்களை ஒன்று திரட்டி படைகட்டி போராடியதுதான் புரட்சி. அப்படிபட்ட வீரமிக்க எமது பெரும்பாட்டன் தூக்கு க யிற்றை வெள்ளைக்காரன் கொண்டுவந்தபோது , அவனை தள்ளிவிட்டு தூக்குகயிற்றை தானே மாட்டிக்கொண்டு, நீ என் எதிரி எனக்கு மரணத்தைகூட பரிசாக தரக்கூடாது என்று முழங்கிய பெருந்தகை. அப்படிப்பட்ட நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நி னைவை போற்றுகின்ற இந்நாளில் மானமும் வீரமும் உயிரென நினைக்கின்ற தமிழ்ப் பி ள்ளைகள் தமிழ்ப்பெரும்பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ளபடியே பெரு மை அடைகிறோம்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று தெரி வித்தார். மேகதாது அணையை கட்ட கர்நாடக பாஜக அரசு தீவிரமாக உள்ள நிலையில், தமிழக பாஜக மேக தாது அணைக்கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்துபோவதாக அறி வித்து நாடக மாடு வதாக கூறிய திரு சீமான் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கு முன்பி ருந்தே என்னை உ ளவு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். இறையன்பு, சைலேந்திர பா பு உள்ளிட்ட அதி கா ரிகள் நியமனம் நம்பிக்கை அளித்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிற குதான் திமுக அரசின் உண்மை முகம் வெளியே தெரிய வரும் என்றார். வேளாண்மை நிதி நிலை அறிக் கை வந்த பிறகு அதில் அறிவிக்கப்படும் திட்டங்களை பார்த்த பிறகே அ து ப் பற்றி கரு த்துக்கூற முடியும். எங்களுடைய கொள்கை வேறு. நாங்கள் வே ளாண் மை யை அடிப் ப டை யாக கொண்டு தற்சார்பு பொருளாதாரம் என்பதை முன்னி றுத்து வதாக வும், இயற் கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.