சென்னை சர்வதேச திரைப்பட விழா

 சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.                           செப்டம்பர் 27, 2024- சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது.

இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு,
3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது.

சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான திரு. அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் இருவருமே இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பிற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மேலும், உலகளாவிய திரைப்படத் துறையில் ரஷ்ய சினிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

முதல் நாள் காட்சிகள்

ரெண்ட் எ ஹவுஸ் வித் ஆல் தி இன்கன்வீனியன்ஸஸ் (2016) என்ற நகைச்சுவை திரைப்படத்துடன் துவங்கியது, இந்த நகைச்சுவை கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, அதைத் தொடர்ந்து அன்னா கரேனினா: வ்ரோன்ஸ்கியின் கதை (2017), இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படும் காவிய காதலான இப்படம் பார்வையாளர்களை வியத்தகு மறுபரிசீலனைக்கு அழைத்துச் சென்றது.

ரஷ்ய சினிமாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பை பார்வையாளர்களுக்கு இந்நிகழ்வு வழங்கியது.

மாஸ்ஃபில்மின் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களை திருவிழாவில் திரையிட உள்ளோம். திரையிடல்கள், ஆங்கில வசனங்களை உள்ளடக்கியவை என்பது குறிப்படத்தகுந்தது.

சென்னையின் திரைப்பட ஆர்வலர்கள் சர்வதேச திரைப்படங்களைப் பாராட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.

மாஸ்ஃபில்ம் 100 வது கொண்டாட்ட விழா செப்டம்பர் 29 ஆம் தேதி வரை ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

தி வானிஷ்ட் எம்பயர் (2007), தி ஸ்டார் (2002), வார்டு எண் 6 (2009), மற்றும் டிசிஷன்: லிக்விடேஷன் (2018) போன்ற படங்களை திரையிட உள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றின் இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிகழ்வு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

விழா அட்டவணை மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய

கூடுதல் விவரங்களுக்கு,

www.chennaifilmfest.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.