சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெ னெடிக் க்ளினிக் தொடக்கம
சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னா ஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகா தார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மர பணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும்.
மரபணு பரிசோதனை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சி காரணமாக, இம்மருத்துவமனை அனைத்துச் சிறப்புத் துறைகளிலும் விரிவான பரிசோதனைச் சே வைகளை வழங்கும். இதன் மூலம் மரபணு மாற்றங்கள், பரம்பரைச் சூழல்கள், குறிப்பிட்ட சுகாதார நிலைகள் தொடர்பான முன்கணிப்புகள் பற்றி அடையாளம் காணவும் உதவும். இத்தகவலைப் பயன்படுத்தித் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குவதன் மூல ம், நோயாளிகள் தங்கள் சுகாதாரத்தை மேலாண்மை செய்வதுடன், குறிப்பிட்ட நோய்கள் உருவாகும் அபாயங்களைக் குறைக்க உறுதுணையாக இருக்கும்.
அனுபவம் நிறைந்த மரபணு ஆலோசகர்கள், நோயாளிகளுடன் இணைந்து செயல்பட்டுப் பரிசோதனை முடிவுகளைப் புரிந்து கொள்ள உதவுவார்கள். மேலும் வாழ்வியல் மாற்றங் கள் அல்லது மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்பட்டால் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவர். மரபணு பரிசோதனை முடிவுகள் காரணமாக நோயாளிகள் மற்றும் குடும்ப த் தினருக்கு ஏதேனும் உணர்வு அல்லது மனநல ரீதியான சவால்கள் ஏற்பட்டால், அதைச்ச மாளிக்கத் தேவையான ஆதரவையும், கலந்தாய்வுச் சேவைகளையும், ஆலோசகர்கள் வழ ங்குவர்.
இது குறித்து எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், ‘அதி நவீன உயர்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிம்ஸ் மருத்துவமனை எப்போதுமே முன் னணியில் உள்ளது. லைஃப் செல் ஆய்வகத்துடன் இணைந்து எங்களது புதிய சிம்ஸ் ஜெ னெடிக் க்ளினிக் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நோயாளிகளுக்குத் த ங்களது ஆரோக்கியம் குறித்த ஆழமான புரிதலை வழங்குவதுடன், தங்கள் உடல்நலம் கு றித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு முடிவு எடுக்க, மேம்பட்ட மரபணு பரி சோ தனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் உதவும். எங்களது நோயாளிகளுக்கு மிக உயர்தர சிகிச்சை வழங்க உறுதியளிப்பதுடன், சுகாதாரம் மற்றும் நலத்தை மேலாண்மை செய்ய விரும்பும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, எங்கள் புதிய க்ளினிக் மதிப்புமிக்க ஆ தாரமாக விளங்கும் என்றும் நம்புகிறோம்’ என்றார்.
சிம்ஸ் மருத்துவமனை மகப்பேறியல், மகளிர் மருத்துவம் மற்றும் ஐவிஎஃப் ஆய்வக இயக் குனரும், மூத்த மருத்துவ ஆலோசருமான டாக்டர் கோபிநாத் பேசுகையில் ‘எங்கள் நோய ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, உலகத் தரமான தீர்வுகள் மற்றும் நீண்ட காலப் பாதுகா ப் பை வழங்குவதில் சிம்ஸ் மருத்துவமனை எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் மருத்துவமனை அனைத்துச் சிறப்புத் துறைகளிலும் மிகப் பெரிய சாதனை க ளைப் படைத்துள்ளது. லைஃப் செல் ஆய்வகத்துடன் இணைந்து எங்கள் நோயாளிகளுக்கு மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகி றோம்’ என்றார்.
பச்சிளம் குழந்தைகள், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்துக்குப் பிந்திய பரி சோ தனைகள், நோயறிதல் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதில் லைஃப்செல் டயாக் னா ஸ்டிக்ஸ் முன்னணி வகிக்கிறது. கூடுதலாக, ‘லைவ் ஜெனெடிக் க்ளினிக்’ என்னும் கருது கோள் வழியே, தகுதி மற்றும் அனுபவமிக்க கிளினிக்கல் மரபணு நிபுணர்கள், மரபணு ஆலோசகர்கள் மூலம், லைஃப்செல் மரபணு பிரிவில் நாட்டின் பல மருத்துவம னைக ளு க்கு ஆதரவளித்து வருகிறது. மரபணு பிரிவில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சி கார ண மாக லைஃப்செல் ஆய்வகத்துடன் இணைத்து சிம்ஸ் மருத்துவமனையில் ஜெனெடிக் க்ளி னிக் தொடங்கி உள்ளோம். இதன் மூலம் நோயாளிகளுக்கு நேரலை கலந்தாய்வு மூலம் சிறந்த ஆதரவையும், தீர்வையும் அளிக்கிறோம். நோயாளிக்குத் தேவையான பரிசோ த னைகள், எதிர்கால அம்சங்கள் ஆகியவை தொடர்பான முழுமையான வழிகாட்டுதலை ஆலோசகர் வழங்குவார்’ என்றார்.
லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) மேலாண்மை இயக்குனர் மயூர் அபயா தொடர்கையில் ‘ஆரோக்கிய நோயறிதல் தீர்வுகள் வழங்கும் எங்கள் பயண த்தில் சிம்ஸ் மருத்துவமனையிலுள்ள ஜெனெடிக் க்ளினிக் முக்கிய மைல்கல் ஆகும். ஜெ னெடிக் க்ளினிக் மூலம் மரபணு தொடர்பான பிரச்சினைகளை உரிய காலத்தில் கண்ட ரிந்து நோயாளிக்கு உதவ உறுதி அளிக்கிறோம்’ என்றார்.
சிம்ஸ் மருத்துவமனை
சிம்ஸ் மருத்துவமனை சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளுள் ஒ ன்றாகும். 345 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனை பல்லுறுப்பு மாற்றுச் சே வை கள் உள்பட ஏராளமான சிறப்புப் பிரிவுகளில் விரிவான சுகாதாரப் பாதுகாப்பு வழங் கு கிறது. 15 மாட்யூலர் அறுவை சிகிச்சை அறைகள், 3 அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர் ஆர்ட் கேத் ஆய்வகங்கள் (1 பை-பிளேன் கேத் ஆய்வகம் உள்பட), ஹெபா ஃபில்டர்களுடன் கூடிய மேம்பட்ட ஐசியூ-க்கள், புதுமையான மருத்துவத் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தொழில்நுட்பங்கள் இம்மருத்துவமனை ஒரே கூரையின் கீழ் கொண்டுள்ளது.
அனுபவம், நிபுணத்தவம், அதி நவீன தொழில்நுட்பம், சிறந்த பன்னோக்கு, நான்காம் நி லை மருத்துவப் பாதுகாப்பு வசதி, நோயாளியை மையமாகக் கொண்ட குழுப்பணி ஆ கியவற்றின் ஒருங்கிணைபுடன் பன்னாட்டுத் தரத்துக்கு இணையான மருத்துவ சேவைக ளை வழங்கச் சென்னை சிம்ஸ் மருத்துவமனை உறுதி பூண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நோய்த் தடுப்புச் சிகிச்சை, மறுவாழ்வு, வாழ்வியல் முறை சுகாதாரக் கல்வி, நோயாளி குடும்பங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல் என சிம்ஸ் மரு த்துவமனை விரிவான மருத்துவப் பாதுகாப்பை வழங்குகிறது. சிம்ஸ் மருத் துவ மனை யில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், நோயாளிக்கான சிறப்பான சிகி ச்சை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.