சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்

                       சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்

வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்க,ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி சிறிய வயது முதல் அந்த ஊரில் முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் லாலை தனது ரோல் மாடலாக கொண்டு, எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த முடி திருத்தும் வல்லுனராக வருவேன் என்ற இலக்குடன் இருக்க, இதற்காக பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு முடி திருத்தும் வல்லுனராக மாறுகிறார். இறுதியில் தனது இலட்சிய கனவான சிங்கப்பூர் சலூன் என்ற பிரம்மாண்டமான கடையை தொடங்குகிறார்.இந்த கடை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கார்ப்பரேட்டுகளின் சதியை முறியடித்து அதில் இருந்து மீண்டாரா……? மீண்டும் சிங்கப்பூர் சலூன் கடையை தொடங்கினாரா…..? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களுக்குப் பிறகு கோகுல் அவர்கள் இயக்கி இருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். குலத்தொழில், அந்தஸ்து இல்லாத தொழில் என இகழப்பட்ட முடி திருத்தும் தொழிலை மையமாக வைத்து, இத் திரைப்படத்தை எடுத்ததற்காகவே கோகுல் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த கதைக்கு ஏற்றவாறு ஆர்ஜே பாலாஜி தன்னுடைய கேரக்டரை மாற்றிஇருக்கிறார். ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் எப்படி இருப்பார்களோ, அதற்கு ஏற்றார் போல தன்னை வடிவமைத்து இருப்பது மிகச் சிறப்பு.

வழக்கம்போல கதாநாயகிக்கு பெரிய நடிப்பு எல்லாம் ஒன்றுமில்லை.

சும்மா கதாபாத்திரத்தை நிரப்பும் வேலை மட்டும் தான். சத்யராஜ் – ரோபோ சங்கர் ஓட காமெடி சிறப்பு. இப்படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தனது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். குறிப்பாக ஜான் விஜய் அவரின் நடிப்பு சிறப்பு. இப்ப படத்திற்கு

ஏற்ற ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சிறப்பு.

மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன் A1 சலூன்.

விமர்சனம் :ராஜு.