சிக்லெட்ஸ்- திரை விமர்சனம்

சிக்லெட்ஸ்- திரை விமர்சனம்

எஸ் எஸ்.பி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ சீனிவாசன் குரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்து இருக்கிறார். எம் முத்து இயக்கி இருக்கிறார்.

மூன்று டீனேஜ் பெண்கள் தன்னுடைய பிரண்ட்ஸின் அக்கா திருமணத்திற்குச் செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்கிறார்கள், அதையொட்டி, தங்கள் மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள். அவர்களின் பெற்றோர் அதைப் பற்றி அறிந்ததும் கதை தொடங்குகிறது.

பொதுவாக, ஏ தரப்படுத்தப்பட்ட பாலியல் நகைச்சுவை திரைப்படங்களில் பெரும்பாலானவை ஆண் கதாநாயகனைக் கொண்டவை. இத்திரைப்படத்தில் மூன்று பெண்களை மையப்படுத்தி இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த படத்தின் முடிவானது உண்மையில் தனித்துவமானது மற்றும் முக்கியமானது.

ஆணின் பார்வையில் பெண்களுடைய உடல் ஆனது, எவ்வாறாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த சிக்கலெட் படம் தரமானதாக அமையும். ஆரம்பத்தில் செக்ஸ் காமெடியாக தோன்றினாலும், நடுவில் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களின் பிரச்சனைகளையும்,வலிகளையும் சொல்கிறது.என்ன சொல்ல வருகிறோம் என்பதில் இயக்குனருக்கு இப்படத்தில் பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக சொல்லாமல்இருப்பது காட்சிப்படுத்தி இருப்பது பலவீனமாக உள்ளது.

டீனேஜ் குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் கவலைகளை சரி செய்வதில் இப்படம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை.

‘இரண்டு பேர் ஒருவரையொருவர் உடல் ரீதியாகத் தொடும்போது காதல் ஏற்படாது, அவர்களின் இதயத்தைத் தொடும் போது’ போன்ற வசனங்கள் படத்தில் உள்ளன. படத்தின் நோக்கம் படத்திற்குள் செல்லாமல் , உள்ளேயும் – வெளியேயும் செல்கிறது. படம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதில் குழப்பம் இருப்பதைப் போலவே.