சாயம் திரைப்பட விமர்சனம்

சாயம் திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

விஜய் விஷ்வா , ஷைனி  , பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, , செந்தி, எலி செபத், பெஞ்சமின் , ஆதேஷ் பாலா ,, மற்றும் பலர் .

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பு நிறுவனம் –  ஒயிட் லேம்ப் புரொடக்சன் , இயக்குனர்  -ஆண்டனி சாமி , தயாரி ப்பு – ஆண்டனி சாமி * எஸ்பி ராமநாதன் , இசை – நாகா உதயன் ,     ஒளிப்பதிவு –  கிறிஸ் டோ பர் மற்றும் சலீம் ம் ,  மக்கள் தொடர்பு –  கே செல்வகுமார் , படத்தொகுப்பு – முத்து முனு சாமி  ,  பாடல்கள்    –  யுகபாரதி * விவேகா*அந்தோனிதாசன்* பொன் சீமான் *   மற்றும் பலார் பண்ணியாடிற்றினார் .

திரை கதை-;

 தென் மாவட்ட சிறு நகரம் ஒன்றில் உள்ள கல்லூரி,  அங்கு படிக்கும் மாணவ மாணவி யரு க்கு இடையே இருக்கும் சாதி வெறி , பக்கத்தில் உள்ள கிராமங்களில் வாழும் அவர்க ளது பெற்றோர், உறவுகள் , அவர்கள் சுய நலத்தாலும் ஆணவத்தாலும் ஊட்டி வளர்க்கும்  சாதி வெறி,சாதாரண பிரச்சினையை, சாதி வெறியர்கள் எப்படி திசை திருப்பி, விவகா ரம் ஆ க்குகிறார்கள் என்பதை அதிரடியாக கூறும் படம் இது.

ஊரில் பெரிய மனிதர் பொன்வண் ண ன், இவரது நண்பர் ஆசிரியர் இளவரசு. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் இ ணை ந்து செயல்பட்டு, ஊருக்கு நல்லது செய்கிறார்கள். இ வர்களது மகன்களும் நண்ப ர்க ள். கல்லூரியில் ஒன்றாக படிக்கிறார்கள்.சாதி வெறியர் ஒருவர், இந்த நண்பர்களு க்குள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார். அதில் ஒருவர் கொல் லப்படுகிறார். பிறகு என்ன நடக் கிறது என்பதே கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

தமிழ் சினிமாவில் சாதிப் பஞ்சாயத்துக் கதைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அந்த வரிசையில் இந்த சாயம் படமும் வந்து நிற்கிறது. பொன்வண்ணன், போஸ் வெங்கட் கொ டுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். ஆண்டனி இப்படத்தை இயக்குவதோடு இல்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாக உதயனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செ லுத்தியிருக்கலாம்.நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது நண்ப ர்க ள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சாதியப்பாகுபாடு தலைவிரித்தாடும் அக்கல்லூரி சாதி கடந்து விஜய்விஷ்வாவும் அவரது நண்பர்களும் நட்பாக இருக்கின்றனர்.

புற உலகின் சூழ்ச்சி அவர்களை எப்படி மாற்றுகிறது? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிற படம்தான் சாயம்.விஜய்விஷ்வா கல்லூரி மாணவர் பாத்திரத்துக்குத் தேவையான அளவு இருக்கிறார்.கதையில் அவருடைய மாற்றத்துக் கே ற்ப நடிப்பிலும் மாற்றம் காட்டியிருக்கிறார்.நாயகனை நினைத்து உருகும் வேடத்தில் நா யகி ஷைனி நடித்திருக்கிறார். பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் மட்டும் அவரைப் பய ன்படுத்தி வழக்கமான நாயகிகள் வரிசையில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.வில்லனாக ந டித்திருக்கும் ஆண்டனிசாமி, ஆதிக்கசாதியினரின் தவறான போக்குகளை அம்பலப்ப டுத்தியிருக்கிறார்.பொன்வண்ணன், இளவரசு, சீதா, போஸ்வெங்கட் உள்ளிட்டோர் தத்தம் வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோரின் ஒளிப்பதிவில் சிறுநகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் ஆகியன அளவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாக உதயன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னனி இசை கதைக்களத்தை மீறாமல் இருக்கிற து.சாதி ரீதியான பாகுபாடு நாட்டுக்கு நல்லதன்று என்கிற நல்ல கருத்தைச் சொல்ல மு னை ந்திருக்கும் இயக்குநர் .திரைக்கதை மற்றும் காட்சிகளில் அதை முழுமையாக வெளி ப்படுத்தவில்லை என்பது ஒரு சிறிய குறை. மற்றபடி ஒருமுறை பார்த்துவைக்கலாம்.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்
திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு -3.5 / 5