க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பூ” ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவா னி ஸ்ரீ,அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், டி.சிவா, இயக்குநர் ம னோ ஜ் குமார், நமோ நாராயணா, ஜூனியர் பலையா, மோகன் ராமன்,அபிஷேக் சங்கர், சரவண சக்தி, மற்றும் பலார் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
தயாரிப்பு நிர்வணம் – கே.ஜெ.ஆர். ஸ்டூடியோஸ் ,தயாரிப்பு – கோடபாடி .ஜெ. ராஜே ஷ்,எ ழுத்து இயக்கம் – விருமாண்டி. இசை-ஜிப்ரான், சண்டை-பீட்டர் ஹைன், ஒளிப்பதிவு -சுத ர்சன் ஸ்ரீPனிவாசன், பாடல்கள்-வைரமுத்து, வசனம்- சண்முகம் முத்துசாமி, நிர்வாக தயா ரிப்பு-டி.ஏழுமலையான், மக்கள் தொடர்பு-நிகில், படத்தொகுப்பு -டி.சிவனதீ ஸ்வரன்,விநி யோகஸ்தர் – ஜீ ஸ்டூடியஸ்*ஜீ பிளக்ஸ் *ஜீ 5 ,வெளியாணா தேதி – 2 அக்டோபர் 2020,நாடு – இ ந்தியா மொழி – தமிழ் மற்றும் பலார் பண்ணியாடிற்றினார்.
திரை கதை-;
இராமநாதபுரத்தில் தண்ணீர் பிரச்சனைக்காக போராடும் விஜய்சேதுபதி சமூக அக்கறை யோடு வலம் வருபவர். ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஊர் நலனில் அக்கறை காட்டும் கணவர் விஜய் சேதுபதியின் எண்ணத்தை மாற்றி குடும்பத்தை மேம்படுத்த வளைகுடா நாட்டிற்;க்கு வே லைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி எதிர்பாராத துப்பாக்கி சூட்டில் இறந்து விட, அவரின் உடலை வளைகுடா நாட்டிலிருந்து தன் சொந்த ஊருக்கு பல போராட்டங்களை சந்தித்து கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக எப்படி மீட்டு கொண்டு வருகிறார்?என்பதே மீதிக்கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
படத்தின் நாயகன் விஜய் சேதுபதி கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார். கதையில் வரும் முதல் பாதியில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான கிராமத்துக் காதல் கா ட்சிகள் அழகாக கண்முன் காட்சி படுத்திருக்கிறார் இயக்குநர். மக்களின் பிரச்சி னைக ளுக்கு குரல் கொடுக்கும் துடிப்பான இளைஞராக விஜய் சேதுபதி. ஆனால் இவரை விடவும் இந்த படத்தில் அதிகம் பேசப்படுகிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.தற்போது வெளிவந் திருக்கும் க/பெ ரணசிங்கம் மக்கள் பிரச்சினையும் ஒரு மனைவியின் பிரச்சினையையும் ஒன்றாக இணைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் செய்து இன்றைய அரசியல் நிலவரத்தை க தையில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் விரும்பாண்டி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் .
ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையில் தள்ளாடும் ஒரு கிராமத்தில் மக்க ளின் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஒரு இளைஞனாக வருகிறார் விஜய் சேதுபதி. இ வருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு குடு ம்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இட த்தில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வருகிறது. தனது கணவர் விஜய் சே துபதியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர போராடுகிறார் ஐஸ்வர்யா. அந்தப் போ ராட்டம் பத்து மாதங்கள் வரை நீடிக்கிறது. கடைசியில் அவரது போராட்டத்தில் அவ ருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த திரை ப்படத் தை அறிமுக இயக்குநர் பெ. விருமாண்டி அவர்கள் இயக்கியிருக்கிறார்.
மண்ணையும் மக்களின் உணர்வுகளையும் பதிவு செய்ததில் விருமாண்டி இயக்குநரும் ,மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் சண்முகமும் வெற் றியை அடைந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி இருவரின் நடிபை யு ம், எடுத்துக் கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பே சுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதி காட்சி தான் முக த்தில் அறைகிறது. மக்களை திசை திருப்ப அரசியல் எது வேண்டுமானாலும் செய்யும் என சொல்கிறது. அதுவே படத்தின் பலம். நீளம் அதிகம் என்பது பலவீனம்” என்று தனது வலைதள பக்கத்தில் வாயிலாக இந்த திரைப்படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக மக்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த சூழ்நி லையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி இது ஜி பிளக்ஸ் ஓ டி டி தளத்திலும் டிடிஹச் தளத்திலும் வெளியானது. தனது கணவர் ரணசிங்கத்தின் உடலை பல போராட்டங்கள் வந்தாலும் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் விடாது போராடும் சிங்கப் பெண் ணா க ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு க.பெ.ரணசிங்கம் பெய ரை விட கதாபாத்திரப் பெயரான அரியநாச்சி என்றே வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அரியாநாச்சி படத்தில் வாழ் திருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா தவிர படத்தில் ரங்கராஜ் பாண்டே மாவட்ட க லெக்டராக நடித்திருக்கிறார். விஜய்க்கும், ஐஸ்வர்யாவுக்கும் அவர் உதவி செய்வது போ லவே ரசிகர்களுக்கு தோன்றினாலும் படத்தின் முடிவில் அவரும் சேர்ந்து அவர்களுக்கு து ரோகம் செய்கிறவராக தோன்றுகிறது. விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். காட்சிகளின் அழுத்ததைக் கூட்டியிருக்கிறது ஜி ப்ரான் பின்னணி இசை. பாடல்கள் பேசப்பட்டிருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக இரு ந்திருக்கும். ராமநாதபுர வறட்சியை தெளிவாக காட்சியில் பதிவு செய்கிறார் ஒளிப்ப திவாளர் என்.கே.ஏகாம்பரம். இந்த படம் ஆக்டோபர் 2ஆம் தேதி ஒடிடியில் வெளி வந் தது. இந்தப் படத்தை முதல் நாள் மட்டுமே 70 ஆயிரம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து ஜீ ஸ்டூடியஸ்*ஜீ பிளக்ஸ் *ஜீ 5 , ,ஒ.டி.டி . வில் திரை ப்படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 4/5