கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம்  “இங்க நான் தான் கிங்கு”. இசை இமான்

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிப்பில்
ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம்  “இங்க நான் தான் கிங்கு”.
இசை இமான்

 

 

கதை

மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். பல பெண்கள் பார்த்து கடைசியாக அவருக்கு ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்தபின்தான் தெரியவருகிறதுஅவர்களும் கடனில் இருப்பது. சந்தானத்திற்கு கடன் கொடுத்த விவேக் பிரசன்னாவுடன் ஏற்படும் பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார். ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே விவேக் பிரசன்னா சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. சந்தானத்தின் கடன் பிர்ச்சினை எப்படி தீர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சந்தானம் நடிப்பு, சண்டைக்காட்சி பாடல்காட்சியில் ரொமான்ஸ் என புகுந்து விளையாடியிருக்கிறார். கதாநாயகி பிரியாலயா சிறப்பாக நடிப்பிலும் பாடல் காட்சிகளிலும் நன்றாக நடனம் ஆடி அசத்தியுள்ளார்.தம்பிராமையா, பாலசரவணன் இருவரது நடிப்பும் அசத்தல். விவேக் பிரசன்னா வரும் இடங்கள் நல்ல காமெடி. மற்றும் இதில் நடித்த
மனோபாலா, முனீஸ்காந்த், , லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன் என அனைவருமேகொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். ஒளிப்பதிவு அருமை. இமான் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.ஓம் நாராயணன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

எழிச்சூர் அரவிந்தனின் கதையை
காட்சிக்கு காட்சி நகைச்சுவையை அள்ளித் தெளித்து எல்லோரும் ரசித்து சிரிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் ஆனந்த் நாராயணன். பாராட்டுக்கள்