கொரோனா விழிப்பணர்வு வாரம் 

கொரோனா விழிப்பணர்வு வாரம் 
காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தடுப்பூசி போடு வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.
காரியாபட்டி,ஆக-02
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பொதும க்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வருவாய் துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை , தன்னார்வ அமைப்பு சார்பில் கொரோனா விழி ப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அனுச ரிக்கப்பட்டு, மாவட்டத்தில் தினந்தோறும் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு அரசு துறைகள் மூ லம் ஒருங்கிணைந்து நடத்த மாவட்ட ஆட்சத் தலை வர் மேக நாதரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதில் துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முக நூல் மற்றும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவளை தளங்களிலும் தொலைக்காட்சி நேர் காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடைவீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலை யம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இ டைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வியாபாரிகள் நலச்சங் கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் மற் றும் இந்திய மருத்துவசங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மாணவர் களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஒவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுரகுடிநீர் வழங்கவும், கிரா மஅ ளவில், நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவும், அ னை வரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடை பிடி ப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவ ற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்ப ட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் எனவும் இதுபோன்ற விழிப்புணர்வுகளை பொதுமக் களிடம் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காரியாபட்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற கொரோனா தடு ப்பூசி  யான கோவிஷீல்டு போடும் சிறப்பு முகாமில் விருதுநகர் நேரு யுவ கேந்திராவுடன் இணை க்கப்பட்ட காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பொ து மக்களை தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் தடுப்பூசி குறித்து விழிப் பு ணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட வைத்தனர். மேலும்,பேருந்து நிலையத்தில் பொது மக் களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வருவாய் வட்டாட்சியர் தனக்குமார், காரி யாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், சார்பு ஆய்வாளர் ஆனந்தஜோதி, சுகாதா ர ஆய்வாளர் கருப்பையா, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், எஸ்.பி .எம் ட்ரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார் ஒலிபெருக்கி மூலம்  தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத் தினார்.