கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம் 

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம் 

  1. சத்யஜோதி பிலிம்ஸ், டிஜி தியாகராஜன் தயாரிப்பில்,இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் சிவராஜ்குமார், சந்திப் கிஷன்,பிரியங்கா மோகன், ஜெயபிரகாஷ்,அதிதி பாலன், இளங்கோ குமாரவேல்,காளி வெங்கட் இவர்களின் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் கேப்டன் மில்லர்…

சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அவர்களின் அரசன் ஒருபுறம். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என மறுபுறம். இருபுறமிருந்தும் வரும் தொல்லைகளால் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதற்கிடையில் பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன். போக வேண்டாம் என தடுக்கும் நண்பர்கள், உறவினர்கள் ஒருபுறம். எல்லாவற்றையும் மீறி பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைகிறார் ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி, ஊர் திரும்புகிறார் ஆனால் ஊரார் அவரை கொலைகாரன் என கூறி துரத்துகின்றனர். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அவர் இருவரிடம் இருந்தும் தனது மக்களை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை மீதி கதை.

அரசனின் சாதி வெறியையும், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்கு முறையையும் இணைத்து ஒரு அருமையான கதை களத்தை உருவாக்கி இருக்கிறார்.

கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து பக்கங்களையும் காட்டுகிறார்.

தனுஷ் பேசக்கூடிய வசனங்களாகட்டும், அதிதிபாலன் பேசக்கூடிய வசனங்கள் ஆகட்டும் அனைத்தும் சிறப்பு. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சிறப்பு. மாஸ் பிஜிஎம்.

நிறைய பிளஸ் ஆன விஷயங்கள் இருந்தாலும், மைனஸ் ஆன விஷயங்கள் நிறைய இருக்கு. பிரிட்டிஷ் ஆர்மி ல போய் சேர நினைக்கிற தனுஷுக்கு, பிரிட்டிஷ் ஆர்மி ல போய் சேர்ந்தா,இந்தியர்களுக்கு எதிரா போராட வேண்டி இருக்கும்

அப்படிங்கற விஷயம் தெரியாதா…?

அடுத்தது கொள்ள கூட்டம் ஒன்னு காட்றாரு…..ஒரு ஆறு,ஏழு பேர தவிர மத்தபடி அங்க ஆளைக் காணோம். யாரை வச்சு எதை கொள்ள அடிச்சாரு?

அடுத்து பிரிட்டிஷாரை எதிர்த்து போரிடும் போது, நவீன ஆயுதங்களை எல்லாம் பயன்படுத்துகிறார். மெஷின்கன், பாம் , மினி ராக்கெட் லாஞ்சர் இவற்றையெல்லாம் பயன்படுத்துகிறார். கண்ணி வெடிய மட்டும் தான் பயன்படுத்தவில்லை.

இதெல்லாம் அப்ப பிரிட்டிஷ்காரன் கிட்டயே கிடையாது. பிரிட்டிஷ் ஆர்மி ஆகட்டும்,இந்தியன் ஆர்மி ஆகட்டும் முதன்முதல் மிஷின் கன் பயன்படுத்தின ரெஜிமென்ட் – மகர் ரெஜிமெண்ட், ஆண்டு 1956. அதேபோல ஏகே47 கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1946 ஆக இருந்தாலும், பயன்படுத்தப்பட்ட ஆண்டு 1949 அதுவும் அந்த ak 47 கண்டுபிடிக்கப்பட்ட நாடான ரஷ்யாவில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் படத்தில் நவீன ஆயுதங்கள்

பயன்படுத்தப்பட்டது எப்படி ….? இது போன்ற லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கின்றன….

அதேபோல இப்படத்தில் தனுஷை தவிர்த்து,மற்ற அனைவரையும் சரியாக பயன்படுத்தப்படவில்லை… குறிப்பாக சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்,பிரியங்கா அருள் மோகன், போன்ற பலர்.

லாஜிக் மீறல்கள் ,வன்முறை காட்சிகள் என்ன பல இருந்தாலும் ஜாதிய ஒடுக்கு முறையையும், பிரிட்டிஷ் ஒடுக்கு முறையையும் சுட்டி காட்டி இருப்பதால், நாம் இப் படத்தை பலமுறை பாராட்டலாம்.

மொத்தத்தில் தரமான பட வரிசையில் சேர்க்க வேண்டிய திரைப்படம்.

விமர்சனம் -ராஜு.