காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை

காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை

காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலை வாய்ப்புக்கான நேர்க்காணல் நடத்தி, தனியார் நிறுவனங்களில் காவல் ஆளிநர்களின் படித்து முடித்த 81 வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை சென் னை பெருநகர காவல் ஆணையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் இணைந்து வழங்கினார்கள் (04.12.2020)

பொதுமக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்புப் பணியிலும், இரவு பகல் பாரா து பணி செய்து வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது குடும்பத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் சென் னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் சிறப்பான முயற்சியில், செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஒருங்கி ணைந்து 03.11.2020 முதல் 05.11.2020 வரை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் 10 மற் றும் 12ம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்கல்வி மற்றும் இதர கல்வி தகுதிகளுடன் கூடிய வாரிசுகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 17 வேலை அளிக்கும் நிறுவனங்கள் 3 திறன் பயிற்சி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பங்கு பெற்றனர். வேலைவாய்ப்பு வழங்க இசைந்த Ventura Security Ltd., Adyar Ananda Bhavan, Eureka Forbes, Ads for Needs, Wealth house, மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.

மேற்கண்ட நேரடி பணிநியமன ஆணையை திரு.வீரராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை, சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (04.12.2020) காவல் ஆணை யரகத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் காவல் ஆளி நர்களின் 81 வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களின் பணிநியமன ஆணையை வழ ங்கி, வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஏ.அமல்ராஜ், இ.கா.ப., (தலைமையிடம்), முனைவர் R.தினகரன்,இ.கா.ப., (தெற்கு மண் டலம்), திருமதி.P.C.தேன்மொழி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., (வடக்கு), திரு.A.G.பாபு, இ.கா.ப., (தெற்கு), திருமதி .S.மல் லிகா, இ.கா.ப., (தலைமையிடம்), திரு.M.பாண்டியன், இ.கா.ப., (போக்குவரத்து வடக் கு) மற் றும் துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (நிர்வாகம்) மற்றும் து ணை ஆணையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.