காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மெகா தூய்மை பணியினை செயல் அலுவலர் முருகன் துவக்கி வைத்தார் 

காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மெகா தூய்மை பணியினை செயல் அலுவலர் முரு கன் துவக்கி வைத்தார் 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் 26-ம் தேதி முதல் 29-ந் தேதி வரை ஒட்டுமொத்த துப்புரவுபணிகள் செய்திட வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார், அதனடிப்படையில், காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் 15 வார்டுகளில் மெகா தூய்மை பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் துவக்கி வைத்தார்.இ தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிலையங்கள், பொதுக் கழிப்ப றை கள், மகளிர் சுகாதாரவளாகம், குப்பைகள் அதிகம் சேகரமாகும் இடங்களான பொது இடங்கள், நீண்ட நாட்களாக அள்ளப்படாத குப்பைகள் சேகராமாகியுள்ள இடங்களில் குப் பைகள் அகற்றப்பட்டன. மேலும் காரியாபட்டி பேருராட்சியில் செவல்பட்டி மயானப் பா தையில் உள்ள வரத்துக்கால்வாயில் பல நாட்களாக அள்ளப்படாத குப்பைகளை பேரூ ராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு குப்பைகள் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் ராம் குமார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.