காங்கிரஸ் கட்சியில் நிறைய நடிகர்கள் இணைய இருக்கிறார்கள் – ‘இதயக்கோவில்’ படத்துவக்க விழாவில் ஆர்.வி.உதயகுமார் தகவல்
புது புது கலைஞர்களை தேடி தேடி வாழ்த்துங்கள் – ’இதயக்கோவில்’ படத்துவக்க விழாவில் காங்கிரஸ் தலைவரிடம் கோரிக்கை வைத்த ஆர்.வி.உதயகுமார்
வட சென்னையை சேர்ந்தவர்கள் சினிமாவில் முன்னுக்கு வரணும் – ‘இதயக்கோவில்’ படத்துவக்க விழாவில் கே.ராஜன் பேச்சு
தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது – ‘இதயக்கோவில்’ படத்துவக்க விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு
சன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் விஜயா ராஜேந்திரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜீவன் மயில் எழுத்தி, இசை, பாடல்கள் மற்றும் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இதயக்கோவில்’. இதில் அறிமுக நடிகர் திவாகர் நாயகனாக நடிக்க அணு கிருஷ்ணா நாயகியாக நடிக்கிறார். டி.நவீன்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்ற, ராஜேந்திரன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் துவக்க விழா பிப்ரவரி 4 ஆம் தேதி பிரமாண்ட பூஜையுடன் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தயாரிப்பாளர் விஜயா ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரன் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “காங்கிரஸுக்கு உண்மையாக உழைக்கின்ற தலைவராக இருக்க கூடிய கே.எஸ்.அழகிரி இந்த படத்தை வாழ்த்த வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. ’இதயக்கோவில்’ அருமையான தலைப்பு. இதயம் உள்ளவர்கள் எலோரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். பட்டு சட்டை, பட்டு வேட்டி, உயர்ந்த ரக துணிகளை அணிவதால் அவன் நல்ல மனிதன் அல்ல, மேலாடையை விட உள்ளாடை ஒன்று இருக்கிறது. மனித நேயம், மனிதாபிமானம், மனித தர்மம் ஆகியவை அதிகமாக இருப்பவர்கள் மனிதர்கள், அவர்களுடைய இதம் தான் கோவிலாகும். மனித நேயம் ஏற்படும் போது தர்மம் செழிக்கும், ஏழைகளுக்கு உதவுபவர்கள், ஏழைகளுக்காக இறக்கம் கொள்பவர்கள் எல்லோரும் இதயதெர்ய்வம் தான். அதை தான் பேரரிஞர் அண்ணா சொன்னார், “ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்” என்று, அதுபோல இதயக்கோவில் அருமையான தலைப்பு. நல்ல தமிழ் வார்த்தை. இப்போது சினிமாவில் தமிழ் தலைப்புகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது. கதைகளுக்கு தான் பஞ்சம் என்றால் தலைப்புகளுக்கும் பஞ்சமாகிவிட்ட காலத்தில் இப்படி ஒரு நல்ல தமிழ் தலைப்பை வைத்ததற்காகவே இந்த தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தப்ப்பில்லை. ஆனால், மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம். அது போல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார், என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி என்பதெல்லாம் அமையும், அது நமக்கு தேவையில்லை. ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் ஏழைகளை இதயக்கோவிலாக பார்க்க வேண்டும். மக்களின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் ஏழைகளுக்கு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். அதுபோல் இந்த படமும் மக்களை கவர வேண்டும். இந்த படத்தின் தயாரிப்பாளர் எங்கள் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். கலைப்புலி தாணு பெரிய தயாரிப்பாளர், ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் பெரிய தயாரிப்பாளர், நான் சிறு பட தயாரிப்பாளர். எங்களை தவிர வேறு யாரும் வண்ணாரப்பேட்டையில் இருந்து வரவில்லை. இப்போ இந்த தம்பி வந்திருக்கிறார். வட சென்னையை சேர்ந்தவர்கள் முன்னாடி வரணும், அது என் சுயநலம் தான், அதுபோல் தம்பி ராஜேந்திரன் தயாரித்து, தன் மகனை நாயகனக அறிமுகம் செய்யும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.
இயக்குநர் ஜீவன்மயில், முருகனுடைய வாகனம் மயில், அதுபோல் நீ முருகனாக இருந்து தயாரிப்பாளரை காப்பாற்ற வெண்டும். ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு இயக்குநர்கள் தான் காரணம். உதயகுமார், பேரரசு போன்றவர்கள் பெரிய வெற்றி படங்களை கொடுத்து ஹீரோக்களுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தவர்கள். இயக்குநர்கள் திறமை காட்டவில்லை என்றால் ஹீரோக்கள் வெளியே தெரிய மாட்டார்கள். அதுபோல், எங்கள் ஏரியா பிள்ள திவாகர் பெரிய ஹீரோவாக வர வேண்டும். இந்த இதயக்கோவில் படம் பெரிய வெற்றி பெற்று, தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்து பல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்திற்கு பிரமாண்ட துவக்க விழா நடத்துவது, தமிழ் சினிமாவுக்கு ஒரு விடிவுக்காலம் வரப்போகிறது என்பதை காட்டுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இங்கே வந்திருப்பது சிறப்பான விசயம். காங்கிரஸ் காரர்கள் சினிமாவுக்கு வருவது போல் ஒரு பேர் வந்துவிட்டது, அது தொடர வேண்டும், அவர்களை நான் மனதார வரவேற்கிறேன். இதயக்கோவில் ஒரு வெற்றி படம், மணிரத்னம் இயக்கிய படம், பத்து ஆண்டுகளுக்கு பின்னால் மற்றொரு இதயக்கோவில் எடுக்குறாங்க. இந்த படம் அற்புதமான டைடில், அந்த படத்துல சோகமான க்ளைமாக்ஸ் இருந்தது. ஆனால், இந்த படத்தில் மகிழ்ச்சியான க்ளைமாக்ஸ் இருக்கும் என்று நம்புகிறேன். நல்ல நாயகியை தேர்வு செய்திருக்கிறீர்கள், ஒரு படத்தோட கதாநாயகன், கதாநாயகி முகத்த பார்த்தாலே பாதி வெற்றி தெரிந்துவிடும், பிறகு தலைப்பு. இது போதும். அதன் பிறகு நீங்க படத்தை நல்லா இயக்கியிருந்தால் படம் நூறு சதவீதம் வெற்றி பெறும்.
இந்த படத்தின் துவக்க விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவது என்றால் பெரிய நல்ல விசயம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். அழகிரி அண்ணன் வந்திருப்பது மகிழ்ச்சி. மூப்பனார் ஐயா என்ப டங்களுக்கு மிகப்பெரிய ரசிகர். மூப்பனார், கலைஞர், ஜெயலலித அம்மா ஆகியோர் என் படங்களை பார்த்துவிட்டு எனை பாராட்டி இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தது சந்தோஷமான விசயம். அரசிய களத்தில் இறங்கும் போது சினிமாவை விட்டுவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இதுபோன்ற தைரியம் யாருக்கும் இருந்ததில்லை. விஜயகாந்துக்கு இருந்தது. ஆரம்ப காலங்களில் இருந்து காங்கிரஸ் நாட்டை ஆனது. ஐயா காமராஜர் காலத்தில் இருந்தே பார்த்தோம் என்றால், காங்கிரஸை முறியடிக்க, திராவிட கழகம் எடுத்த ஆயுதம் சினிமா தான். பேரறிஞர் அண்ணாவின் கதை, வசனம், கலைஞர் வசனம், எம்.ஜி.ஆர் நடிப்பு என இவர்கள் மூன்று பேரும் ஒரு அணியில் இருந்தால் எப்படி இருக்கும், அது தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அசைக்க முடியவில்லை. அதே போல், காங்கிரஸில் சிவாஜி இருந்தார், அவர் பல மேடைகளில் காங்கிரஸுக்காக பேசுவார், அங்கேயும் ஒரு நடிகர் தேவைப்பட்டார். பிறகு எம்.ஜி.ஆர் தனிகட்சி ஆரம்பித்தார். பிறகு ஜெயலலிதா, இப்போது இருக்கும் முதல்வர் கூட சினிமா துறையில் கால் பதித்தவர் தான். கலைஞர்கள் இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை இப்போது இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் சிவாஜியை விட்டுவிட்டது, அதனால் தான் அந்த கட்சி தனது வெற்றியை இழந்துவிட்டது. கலைஞர்களை யார் கெளரவிக்கிறார்களோ அவர்கள் தான் நல்ல ஆட்சியாளர்களாக இருக்க முடியும். இது இப்போது மட்டும் அல்ல, மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அப்படி இருந்ததால் தான் இராஜராஜ சோழனின் புகழ், பெருமை இன்றும் போற்றப்படுகிறது. கலைஞர்களை அரவணிப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும். எப்போது சிவாஜியை காங்கிரஸ் விட்டதோ அப்பவே தென்னிந்தியாவில் மங்கிவிட்டது. அந்த தப்பை இப்போது செய்யாமல், அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் காங்கிரஸார் கலந்துக்கொண்டு கலைஞர்களை கெளரவிக்க வேண்டும். உங்க கட்சிக்கு நடிகர்கள் யாராவது வந்தால், அவர்களை அலட்சியமாக பார்க்காமல் அரவணியுங்கள். அவர்களை பயன்படுத்திக்கொள்ள தவறாதீர்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது அரசியல் கட்சிகளுக்கு தான் இழப்பு. இது காங்கிரஸுக்கு மட்டும் அல்ல, அனைத்து கட்சிக்கும் தான் சொல்கிறேன்.
சினிமாக்காரர்களுக்கு ஏமாற்ற தெரியாது. அயோக்கியத்தனம் பண்ண தெரியாது, அவனுக்கு உழைப்பு தான் முக்கியம். உழைப்பாலும், திறமையாலும் வளர்பவர்கள் சினிமாக்காரர்கள், அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் நிறைய விசயங்களை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்க்கலாம், கொள்கைகளை கொண்டு போய் சேர்க்கலாம். காங்கிரஸில் நிறைய நடிகர்கள் சேர இருக்கிறார்கள், அவர்களை அரவணித்துக்கொள்ள வேண்டும் என்பதையும், புது புது கலைஞர்களை நீங்க தேடி தேடி வாழ்த்த வேண்டும் என்பதையும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
ஹீரோ, ஹீரோயின் நன்றாக இருக்கிறார்கள், அவர்களுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருப்பது படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமா என்பது மிகப்பெரிய் பவர்புல் மீடியம். இங்கு புதியவர்கள் சேர்ந்து, அறிமுக நாயகனை வைத்து படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதார நெருக்கடி வந்துவிட கூடாது. இந்த படத்தைஉ ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “திரைப்பட இசை வெளியீட்டு விழா தான் அதிகம் நடக்கும், திரைப்பட பூஜை என்பது குறைந்துவிட்டது. ஆனால் இது தான் முறை, இப்போ அதுவெல்லாம் இல்லை. இதயக்கோவில் அழகான தலைப்பு, பெரியவர்களின் அசியுடன் தொடங்கப்பட்டுள்ளது, அதற்காகவே பாராட்ட வேண்டும்.
இந்த மேடையின் சிறப்பே தமிழக காங்கிரஸ் தலைவர் ஆரம்பித்து வைத்தது தான். ஆறு வருடங்களாக காங்கிரஸில் தலைவராக இருக்கிறார் என்றால், அது தான் அவரது பன்பு. யார் கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஏற்கனவே கட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்பது தான். அப்படி என்றால் இதுவரைக்கும் ஆண்ட முதல்வர்களில் காமராஜர் தான் உருப்படியாக ஆண்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. விஜய் சார் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றால், அவர் கூட காமராஜரை தான் உதாரணமாக காட்டியிருக்கிறார், வேறு யாரையும் சொல்லல. இது தான் காங்கிரஸுக்கு பெருமை. எனக்கு என்னனா, யார் யாரோ காமரஜர் ஆட்சி பற்றி பேசுகிறார்கள், ஆனால் இதை காங்கிரஸ் தான் பேச வேண்டும். சினிமாக்காரர்களை நம்பி தான் கட்சி நடத்த வேண்டும் என்று காங்கிரஸுக்கு இல்லை. அதன் பிறகு தான் அண்ணா, கலைஞர், ஸ்டாலின், ஜெயலலிதா என எல்லோரும் வந்தார்கள். அதன் பிறகு தான் சினிமாவையும், அரசியலையும் தமிழ்நாட்டில் பிரிக்க முடியாதாகிவிட்டது. இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா என்று தெரியவில்லை.
சினிமாக்காரர்கள் நிறையா பேர் தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்திற்கு போவார்கள், அது கொள்கைக்காக அல்ல கூலிக்காக. சில நடிகர்கள் மட்டும் தான் கொள்கைக்காக கட்சிகளில் பயனிப்பார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை அரசியல் கட்சிகள் அடையாளம் காணவில்லை என்றாலும், மக்கள் அடையாளம் கண்டுக்கொள்வார்கள். தற்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சியில் கூட சலசலப்புகள் வருகிறது. ஆனால், தமிழக காங்கிரஸில் எந்தவித சலசலப்பும் வரவில்லை. அதற்கு அழகிரி சார் தான் காரணம். அவர் வந்து இந்த படத்தை வாழ்த்தியிருப்பது பெரிய ஆசிர்வாதம்..
சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது. இதயம், நெஞ்சம் என்று தலைப்பு வைத்தாலே அது காதல் படங்களாகத்தான் இருக்கும். நெஞ்சில் ஒரு ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, என எல்லாமே காதல் கதைகளாக வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால், இதயம் என்றால் அம்மாவை நேசிக்கனும், நண்பனை நேசிக்கனும், தங்கையை நேசிக்கனும். சினிமாவில் அப்படி இல்லாமல், இதயம் என்றாலே அதை காதலாக மட்டுமே சொல்கிறார்கள், இதை முதலில் மாற்ற வேண்டும். இதயக்கோவில் பழைய படம் ஒன்று இருக்கிறது. மணிரத்னம் சார் படம். இந்த படத்தின் இயக்குநருக்கும் மணிரத்னம் சாருக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கிறது. மணிரத்னம் சார் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக படம் இயக்கியவர், அதுபோல் இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் மயிலும் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் படம் இயக்குகிறார். அதற்கு அவர்களுடைய திறமை தான் காரணம். சினிமாவை அதிகமாக நேசிக்கிறார்கள், சினிமா மீது வெறியாக இருக்கிறார்கள். அப்படி சினிமாவை நேசிக்கும் ஜீவன் மயில் இந்த ‘இதயக்கோவில்’ படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுப்பார் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.