கவிஞர் நா.முத்துகுமார் புத்தகங்கள் பதிப்புரிமை பெற்றது தொடர்பான அறிவிப்பை,

கவிஞர் நா.முத்துகுமார் புத்தகங்கள் பதிப்புரிமை பெற்றது தொடர்பான அறிவிப்பை,  

  கவிஞர் நா.முத்துகுமார் புத்தகங்கள் பதிப்புரிமை பெற்றது தொடர்பான அறிவிப்பை, ஊடங்களுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பாக

வணக்கம்!

நமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. கலை இலக்கியத் துறையில் நா.முத்துகுமார் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது. இந்நிலையில் நா.முத்துக்குமாரின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவர் எழுதிய நூல்களைக் கொண்டு சேர்க்கவேண்டிய பெரும்பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

சென்னையின் முக்கியமான இலக்கிய அடையாள ங்களில் ஒன்றான டிஸ்கவரி புக்பேல ஸ் நிறுவனம், நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரி மையை, முறையாக பெ ற்றுள்ளது. இதுசார்ந்து தக வலை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ளவும், இதை ஒரு அறிவி ப்பாக வெளியிடும்பொருட்டும், அனை த்து வகையான ஊடகங்களையும் சந்திக்க முத்து க்குமாரின் நலம் விரும்பிகள் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் விஜய், இயக்குநர் ராம், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அஜயன் பாலா, வழக்கறிஞர் சுமதி ஆகியோருடன் நா.முத்துக்குமாரின் மனைவி திருமதி ஜீவா மற்றும் அவரின் மகன் திரு.ஆதவன் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொள்ள இருக் கின் றனர்.ஊடக நண்பர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, நா.முத்துகுமார் அவ ர்கள் மறைவுக்குப் பிறகு நடக்கும் மிக முக்கியமான இம்முன்னெடுப்பினை செய்தியாக வெளியிட்டு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.