கலவரத்தைத் தடுத்த காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் –

கலவரத்தைத் தடுத்த காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் –

கலவரத்தைத் தடுத்த காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

இராமநாதபுரம் மாவட்டம் வசந்தம் நகரில் வசித்து வந்த அருண் பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சிலரால் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந் தக் கொலை நடைபெற்றது என அந்தப் பகுதி மக்கள் அறிந்திருந்த நிலையில் இதை வை த்து இராமநாதபுரம் மாவட்டத்தில் மதக் கலவரத்தை தூண்டி விடுவதற்கு சங்பரிவார சக்திகள் முயற்சி செய்தார்கள்.

இந்தப் படுகொலை விவகாரம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித் திருந்த பாஜகவின் எச். ராஜா, அருண் பிரகாஷை இஸ்லாமியர்கள் படுகொலை செய்து வி ட்டார்கள், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்முறையைத் தூ ண்டிவிடும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்தப் படு கொலை மதமோதலால் நடைபெற்றது, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்து விட்டார்கள் என்று வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட்டு மக்களிடம் பதட்டத் தையும், கலவர பீதியையும் உண்டாக்கினார்கள்.

இந்த நிலையில் இந்தப் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்ப ட்டனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் அதிகரித்திருந்த நிலையில், இந்தக் கொ லை மத மோதலால் நடைபெற்றது அல்ல!, தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெ ற்றது, இதை வைத்து மத மோதல்களைத் தூண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண் குமார் தனது டுவிட்டர் பக்கத்திலும், இராமநா தபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் கருத்து வெ ளியிட்டிருந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் தணிந்தது. கலவர பீதியில் உறைந்து போயிருந்த மக்கள் நிம்மதி அடைந்தார்கள். தனிப்பட்ட விரோதத்தால் ஏற்பட்ட கொலையை வைத்து மதக் கலவரத் தைத் தூண்டி விட்டு அதில்  குளிர்காய நினைத்த சங்பரிவார சக்திகளின் சதி தவிடு பொடியாக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழகத் தையே கலவர பீதியில் இருந்து காப்பாற்றியுள்ள இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் செயலுக்கு பாராட்டு தெரிவிக் காமல் அவரை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

நாட்டில் பதட்டமும், கலவர சூழலும் ஏற்படும் போது அதைக் கட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒரு காவல்துறை அதிகாரியின் சிறந்த செயலுக்கு காத்திருப்போர் பட் டியலை பரிசாகக் கொடுத்திருக்கும் இந்தச் செயல் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் கலவரம் நடக்கும்போது அதை காவல்து றையி னர் கண்டுகொள்ளாமல் இருந்ததைப் போல தமிழகத்திலும் காவல்துறையினர் கலவர த்தை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் அவர்கள் காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள் என்பதை இந்தச் சம்பவம் சொல்லாமல் சொ ல்லியிருக்கின்றது. வடமாநிலங்களில் சங்பரிவார சக்திகளின் ஆதிக்கம் காரணமாக காவல்துறையினர் அவர்களுக்கு பணிந்து போவதைப் போல தமிழகத்திலும் சங்பரிவார் சக் களுக்கு காவல்துறையினர் பணிந்து போக வேண்டும் என்பதையே இந்த நடவடிக்கை  தெளிவுபடுத்துவதாக எண்ண  வேண்டியுள்ளது.

தனிநபர் உயிரைக் காப்பாற்றும் ஒருவருக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்கும் அரசாங்கம், ஒரு மாவட்டத்தையே கலவரத் தில் இருந்து காப்பாற்றியுள்ள ஒரு காவல் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலில் வை த்துள்ள விவகாரம் வேதனையளிக்கிறது.கலவரத்தை தடுப்பதற்காக விரைந்து பணி யாற்றி கொலைக்கான காரணத்தை கண்டறிந்து மக்களின் பதட்டத்தை தனித்த காவல் துறை அதிகாரி வருண் குமார் அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள இந் தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உ டன டியாக ரத்து செய்து அவரை மீண்டும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கே நியமனம் செ ய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது. சங்பரிவார சக் திகளின் மிரட்டலுக்கு பயப்படாமல் காவல் துறையும், அரசாங்கமும் பணியாற்ற வே ண் டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கின்றது.

இப்படிக்கு,

இ.முஹம்மது,

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.