கருடன் Movie Review

L A R K ஸ்டுடியோஸ்
மற்றும்
G R A S S R O O T
ஃபில்ம் கம்பனி
இணைந்து
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
K.குமார்
மற்றும்
வெற்றி மாறன்
தயாரிப்பில்…

F I V E S T A R
K. செந்தில்
வெளியீட்டில்…

 

R.S.துரை செந்தில் குமார்
இயக்கத்தில்..
யுவன் ஷங்கர் ராஜா
இசையில்..

ஆர்தர் A.வில்சன்
ஒளிப்பதிவில்…
சூரி,
சசிகுமார்,
சமுத்திரகனி,
உன்னி முகுந்தன்,
ரோஷினி ஹரி பிரியன்,
ரேவதி ஷர்மா,
பிரிகிதா சாகா,
ஸ்வேதா நாயர்,
வடிவுக்கரசி,
முத்துராமன்,
ராஜேந்திரன்
மைம் கோபி,
மாஸ்டர் ரோஷன்

மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
கருடன்

கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் அரசியல்வாதி ஆர்.வி. உதயகுமார். ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி கோயில் இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார்  ஆர்.வி.உதயக்குமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள். 
அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசிக்குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் சொக்கன் (சூரி). இவர்கள் வசம் இருந்த பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியான ஆர்.வி.உதயக்குமார் என்னென்ன செய்கிறார், என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை!

சூரி சொக்கன் கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கிறார்என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் கனமாக இருக்கிறார். நகைச்சுவை, ஹீரோயிசம், காதல் என பல முகங்களை களமிறக்கி புதிய சூரியாக நடித்ருக்கிறார்
சசிக்குமார் வழக்கமான நண்பனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நன்றாக நடித்துள்ளார். கதையில், கதாநாயாகிக்கும் பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், தேவையான அளவிற்கு பயன்படுத்தியதற்கு பாராட்டலாம். ஷிவதாவின் நடிப்பு சிறப்பு
வடிவுக்கரசி, மைம்கோபி, ரோஷினி,ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரிகிதி சாகா, ஸ்வேதா நாயர், முத்துராமன், மாஸ்டர் ரோஷன் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும், படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் துரை செந்தில்குமார்
நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற கருவை கொண்டு உருவாகியிருக்கிறார். முதல் பாதி முழுக்க கலகலப்பாக நகரும் திரைப்படம், இடைவேளை நெருங்கும் போது கதையை விறுவிறுப்பாகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் சலிப்பு இல்லாத வகையில் இன்னும் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்திருக்கலாம். இருந்தாலும் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியானபடத்தை கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.