ஓபென் எலக்ட்ரிக் – ன் முதல் தயாரிப்பான உயர் செயல்திறன் எலக்ட்ரிக் மோட்டார்சை க்கிள் விரைவில் அறிமுகமாகிறது
~ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் வழியாக உலகத்தரத்தில் நிலைக்கத்தக்க மொபிலிட்டி தீர்வுகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது ~
சென்னை, பிப்ரவரி 03, 2022: இந்திய மற்றும் உலக சந்தைகளுக்காக சொந்தமாக உள் நா ட்டிலேயே சுயமாகத் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் நிறு வனமான ஓபென் எலக்ட்ரிக், அதன் தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவி ருப்ப தன் மூலம் எலக்ட்ரிக் -இருசக்கர வாகனத்துறையில் அதன் நுழைவை அறிவித்தி ருக்கி றது. ஓபென் எலக்ட்ரிக், இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற E2W (மின்சக் தியி ல் இயங்கும் இரு-சக்கர வாகனம்) ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். 4 வாகனங்கள் தயாரிப்பு செயல்முறையின் கீழ் தற்போது இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் காலஅளவில் ஒவ் வொரு 6 மாதங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட் டமிட்டிருக்கிறது.
ஓபென் எலக்ட்ரிக் முதல் உயர் செயல்திறன் மோட்டார்சைக்கிள் முதல் காலாண்டி ன்போ து சந்தை அறிமுகத்திற்கு முற்றிலும் தயார்நிலையில் இருக்கிறது. மின்சக்தியில் இயங் கும் இருசக்கர வாகனங்களை வடிவமைக்க, உருவாக்க, தயாரிக்க அவசியமான அனைத் து திறன்களையும் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்திற்குள்ளேயே கொண்டிருப்பது, அதிக செ யல் திறன்மிக்க, நம்பகமான தயாரிப்புகளை தயாரித்து வழங்க திறனுள்ளதாக ஆக் கியிருக்கிறது. E2Wக்களை வெற்றிகரமாக வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்து மற்றும் விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ள குழுவினரின் சிறப்பான நிபுணத் துவம், இதன் செயல்திறனை இன்னும் வலுவாக மேம்படுத்தியிருக்கிறது. செழுமையான அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது சிறப்பு கவனம் மூலம் மிக உயர் வான அளவீடுகள் மற்றும் உலகத்தரத்திலான வடிவமைப்புடன் தங்களது முதல் தயாரி ப்பான ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வெற்றிகரமாக ஓபென் எலக்ட்ரிக் உருவாக் கியிருக்கிறது.
இதன் நிறுவனர்களான மதுமிதா மற்றும் தினகர் அக்ரவால், மின்சக்தியில் இயங்கும் வா கனத்துறையில் 6 ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறப்பான அனுபவத்தை இதற்கு பயன் ப டு த்தியிருக்கின்றனர். E2W வாழ்க்கை சுழற்சி முழுவதிலும் நேரடியான, 6+ ஆண்டுகள் அனு பவம் உள்ள துடிப்பான குழு உறுப்பினர்கள் ஓபென் – ன் மையக்குழுவில் இடம்பெற் றிருப்பது இதற்கு வலிமை சேர்க்கிறது.
ஓபென் எலக்ட்ரிக் – ன் இணை – நிறுவனர் திரு. தினகர் அக்ரவால் இதுபற்றி கூறியதா வது: “வென்ச்சர் கேப்பிட்டல் நிதி செயல்முறை வழியாக, மொத்தத்தில் $2.5 என்ற தொ கை யை நாங்கள் திரட்டியிருக்கிறோம். ஒரு E2W ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் திரட்டப்பட் ட மிக அதிக வித்து மூலதனம் இதுவே. நுகர்வோர் பாதுகாப்பு, அவர்களது பெருமகிழ்ச்சி மற்றும் திருப்தி மீது சிறப்பு கவனத்துடன் புத்தாக்கம் செய்வதற்கு இது எங்களுக்கு உதவு கிறது. இந்திய நுகர்வோர்கள் ICE வாகனங்களிலிருந்து EV -க்கு (எலக்ட்ரிக் வாகனங்கள்) மாறுவதற்கு ஆர்வத்தையும், தூண்டுதலையும் தந்து ஏதுவாக்குவதே எமது நோக்கமாகும். அடுத்த சில ஆண்டுகள் காலஅளவிற்குள் எமது தனிச்சிறப்பான தயாரிப்புகள் மூலம் உல களவில் செயல்படும் ஒரு பெருநிறுவனமாக வளர்ச்சி காண்பது எமது நோக்கமா கு ம்.”
“இப்பிரிவில் இருக்கக்கூடிய சவால்களை எதிர்கொ ள்ள பல்வேறு நிலைகளில் பரிசோத னை, நீடித்து உழைக்கும் நிலைப்புத்தன்மை பாதுகாப்பு மற்றும் இணைப்புவசதி ஆகிய அம்சங்களின் மூலம் ஓபென் எலக்ட்ரிக் இச்சந்தையில் கால்பதிக்க முழு தயார் நிலையில் இருக்கிறது.” என்று ஓபென் எலக்ட்ரிக் – ன் இணை – நிறுவனர் மிஸ். மதுமிதா அக்ரவால் கூறி னா ர். “E2W வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு அம்ச த்திலும் சிறப்பு திறன் கொண்டி ரு க்கின்ற நிபுண ர்கள் அடங்கிய ஒரு மைய செயற்குழுவை நாங்கள் உருவா xக்கியிருக்கி றோம். வாகனங்களை ஒன்று சேர்த்து அசெம்பிள் செய்வது என்பதையும் கடந்து, இந்தி ய நுகர்வோர்களுக்கு அடிப்படை அம்சத்திலிருந்து ஒரு அற்புதமான தயாரிப்பை உருவாக்க எங்களை ஏதுவாக்கியிருக்கிறது. E2W வாகனங்களை வாங்கும்போது அல் லது அதனை ஓட்டும்போது நுகர்வோர்கள் எதிர்கொள்கின்ற சிரம அம்சங்கள் குறித்து நாங்கள் ஆரா ய்ச் சி செய்து அதற்கேற்ப சரியான தீர்வுகளை உருவாக்கியிருக்கிறோம். எம து பயணத் தின் தொடக்க அறிமுக கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு உற்சாகம ளிக்கிறது. எமது முதல் தயாரிப்பு இந்திய நுகர்வோரால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று மிஸ். அக்ரவால் மேலும் தெரிவித்தார்.
வி ஃபவுண்டர்ஸ் சர்க்கிள் – ன் பின்புல ஆதரவு பெற்றிருக்கும் ஓபென் எலக்ட்ரிக் GVK பவர் & இன்ஃப்ரா நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் திரு. கிருஷ்ண பூபால், IIFL வெல்த் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் திரு. ஷாஜிகுமார் தேவகர் மற்றும் பிற முதலீட்டா ள ர்களிடமிருந்து புதிய நிதியளிப்பை சமீபத்தில் பெற்றிருக்கிறது. ஒரு E2W ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் திரட்டப்பட்ட மிகப்பெரிய வித்து சுற்றுகளுள் ஒன்றாக இதனை ஆக்கும் வ கை யில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு 3 மடங்கு அதிக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத் திரு க் கிறது. ஆழமான IP மற்றும் 18 உரிமங்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றின் மூலம் நு கர் வோர்களின் எதிர்கால தேவையை இன்றே சிறப்பாக பூர்த்திசெய்து வழங்கும் நிறுவ னமாக ஓபென் எலக்ட்ரிக் திகழ்கிறது.
ஓபென் எலக்ட்ரிக் குறித்து
ஓபென் EV என்பது, ஐஐடி கரக்பூர் மற்றும் ஐஐஎம் பெங்களூரு ஆகியவற்றில் உயர்கல்வி பெற்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து, 2020 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவிய ஒரு நிறுவ னமா கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு புதிய எலக்ட்ரிக் வாக னங்களை நிறுவன அமைவிடத்திலேயே உருவாக்க வேண்டுமென்ற உந்துதலோடு ஓபெ ன் EV நிறுவப்பட்டது. கண்கவர் வடிவமைப்புகள், ப்ரீமியம் தரம் மற்றும் நம்பகமான தயா ரிப்புகளை உலக சந்தைக்காக இந்தியாவில் தயாரித்து வழங்கும் ஒரு உலகளாவிய பிரா ண் டை உருவாக்குவதும் இதன் குறிக்கோளாகும். நம்பகமான, செயல்திறனை இலக்காக கொண்ட மற்றும் இணைப்புவசதி கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க தொழி ல்நுட்பத்தையும், புத்தாக்கத்தையும் பயன்படுத்துவதே ஓபென் நிறுவனத்தின் கோட்பா டாகும். வாடிக்கையாளரது விருப்பங்கள், நடைமுறை சாத்தியம் மற்றும் அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய நிலை ஆகிய அம்சங்களின் சமநிலையைப் பேணுவதன் மூலம் இ தை சாதிக்க அது முற்படுகிறது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வடிவமைப்பது, உரு வாக்குவது மற்றும் உற்பத்தி செய்வதில் நேரடி நிபுணத்துவத்தை ஏற்கனவே கொ ண்டிருக்கின்ற நபர்கள் அடங்கிய ஒரு சிறப்பான குழுவால் ஓபெனின் அடித்தளம் வலு வா க அமைக்கப்பட்டிருக்கிறது. இதை வெற்றிகரமானதாக ஆக்குவதற்கு தேவைப்ப டும் திறன்கள் கொண்டவர்களாகவும் இக்குழுவினர் இருக்கின்றனர்.