ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும்போது,

இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெ ரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு பட த்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல் வியு றாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது. ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடி க்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக் கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய் யப்படும்.

ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அ தைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் சிறப்பாக அமை ந்தி ருக்கி றார். என்னைப் பொறுத்தவரை லால் கட்டப்பா மாதிரி. எந்த காட்சியாக இருந்தாலும், எந் த பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாக செய்கிறார். யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப் படம் மூலம் முதன்முதலாக ப ணியாற்றும் போது தான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என் று தெரிந்தது. அவருக்கு ஒரு முறை போன் பேசும்போது கிரிக்கெட் விளையாடிக் கொண் டிருக்கிறேன் என்றார். அவரி டம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போ து தான் தெரிந்தது. இப்படி பல திறமைகள் அவரிடம் உள்ளது.

நெப்போலியன் அவர்கள் நண்பராக தான் இப்படத்தின் பணியாற்றினார். ராஷ்மிகா இ துவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்து பெண் ணா க வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வே லை செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாக செய் திரு க்கி றார். அ னைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும் கூட. ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைந்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள் என்றார்.

சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசிய தாவது

பாடலாசிரியர் தனிகொடி பேசும்போது

கொம்பன்-ல் பாடல் எழுதும் போது இரண்டு விதமாக எழுதியிருந்தேன். ஆனால், கார்த்தி முதல் கருத்தைக் கேட்டதுமே இரண்டாவது வேண்டாம். இதுவே போதும் என்றார். இப்பட த்தில் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக் கு நன்றி. அதேபோல, எஸ்.ஆர்.பிரபு மேலும் பல வாய்ப்புகள் கொடுத்தால் இன்னும் நி றை ய பணியாற்றுவேன். கொண்டாட்டமான பாடல் என்றால் தனிகொடியிடம் கொடுத்து வி டுங்கள் என்கிறார் கார்த்தி. அப்படி எழுதப்பட்ட பாடல் தான் இது. இந்தியா முழுவதும் பே சக் கூடிய இப்படத்தில் கொண்டாட்டமான பாடலை எழுத வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. எனது பாடலுக்கு புதுபொலிவு கொடுத்திருக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தில் எனது நண்பர் விவேகாவும் நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றார்.

இப்படம் விவசாயம் சார்ந்தும், அதைத்தாண்டி பல்வேறு விஷயங்களையும் இப்படம் கூறியிருக்கிறது. ஒரு மனிதனுக்கு தேவையற்ற குணத்தை, இந்த மண்ணுக்கு தேவை யான குணமாக மாற்றுகின்ற ஒரு விஷயமாகத்தான் இப்படம் பேசுகிறது.

பாடலாசிரியர் விவேகா பேசும்போது

இப்படத்தில் நான் 5 பாடல்களை எழுதியிருக்கிறேன். ஒரு பாடலுக்கேற்ற சூழலை சொ ல்லுவதற்கு கைதேர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் மாபெரும் வெற்றி யைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அனைத்து பாடல்களையும் ஸ்டுடியோவில் தா ன் இயற்றினேன். ராஷ்மிகா புகைப்படத்தை கொடுத்து இவர்தான் கதாநாயகி என்றதும், ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல’ என்கிற வரி தான் எழுத வந்தது.

பாடல்கள் இணையத்தில் கேட்டுவிட்டு பல பேர் பாடல் வரிகள் குறித்து எனக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கார்த்தி அற்புதமான நடிகர். அனைத்து விதமான பா த்திரங்களும் செய்யக் கூடிய நடிகராக இருந்து வருகிறார். கார்த்திக்கு ‘சிறுத்தை‘ பட த்தி லிருந்து பாடல்கள் எழுதி கொண்டு வருகிறேன் என்றார்.

நடிகர் பிரின்ஸ் பேசும்போது

ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இயக்குநர் முதல் நாளிலிருந்தே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் என்றார்.

நடிகர் சென்றாயன் பேசும்போது

இப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர். விவேக் மெர்லின் நன் றாக இசையமைத்திருக்கிறார்கள். என்னுடைய 2 வயது பெண் இப்படத்தின் பாடலுக்கு ந டனம் ஆடுகிறார். இப்படத்தில் கடினமான உழைத்தார்கள் உதவி இயக்குநர்கள். இப்ப டம் பிரமாதமாக வந்திருக்கிறது. ராஷ்மிகா அனைவருடனும் இயல்பாக பழகக் கூடியவர். பெ ரிய இடத்திற்கு வருவார். ஷோபி எனக்கு என்ன வருமோ அதை வைத்து நடனம் அமைத் தார் என்றார்.

நடன இயக்குநர் ஷோபி பேசும்போது

இப்படத்தில் நடித்த பலருக்கும் நடிப்பில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இப்படம் மாபெ ரும் வெற்றிபெற வேண்டும். இதுபோல பல திரைப்படங்கள் வரவேண்டும் என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,

தரமான படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தீர்மா ன மாக இருக்கிறார்கள். சினிமாவை காதலிக்கிறார்கள்.கார்த்தியைப் பற்றி அனைவரும் கூ றிவிட்டார்கள். மூன்றாவது முறையாக பணியா ற்று கிற வாய்ப்பு இப்படத்தின் மூலம் கி டைத்திருக்கிறது. அனைவரிடத்திலும் சிரித்துக் கொ ண்டும் பேச வேண்டும், ஆனால், அ தில் பொய்யில்லாமலும் இருக்க வேண்டும். அந்த நல் ல குணத்தை அவரிடமிருந்து கற்று க் கொண்டேன்.

எனக்கு சில நடிகைகள் மட்டுமே பிடிக்கும். அதில் ஒருவர் ராஷ்மிகா. இப்படத்தில் நடித் திருப்பவர்கள் பற்றி பேசினால் இப்போதைக்கு முடியாது. 100க்கும் மேற்பட்டவர்கள் நடி த்திருக்கிறார்கள். படத்தொகுப்பில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் பாக்கியராஜ் திருத் து வார். இப்படத்தின் கதையைக் கூறும்போது ஒரு பிரேமில் 100 பேரை அடைப்பது சிரமம். ஆனால், ஒரு படத்திற்குள் எப்படி கொண்டு வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா ல், திரையில் பார்க்கும்போது பாக்கியராஜின் திறமை அபாரமாக வெளியாகி யிருக்கி றது. அவரின் ஒவ்வொரு படத்திலும் நான் பணியாற்ற விரும்புகிறேன்.

KGF நடிகர் ராமச்சந்திரராஜு பேசும்போது,

நான் கார்த்தியின் ரசிகன். இப்படம் மூலம் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்திருக்கிற து. திலீப் சுப்பராயனுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சண்டைக் காட்சிகளில் கார்த்தி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். என்னுடன் நடித்த மற்ற நடிகர், நடிகைகள் தொழி ல்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. கார்த்தி சுல்தானுடன் வருகிறார். இப்படத்தை திரைய ரங்கில் பார்த்தால்தான் இப்படத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்றார்.

இசையமைப்பாளர் விவேக் (மெர்வின்) பேசும்போது

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் கண்ணன் எங்களிடம் கதை கூறினார். 2 ம ணிநேரம் எங்கேயும் நகரவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தோம். ஆனால், இறுதிக் கா ட்சிகளை அவர் கூறும்போது இருவரும் எழுந்து நின்றுவிட்டோம். இதுதான் சுல்தானின் விளைவு. இப்படம் எங்களுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது.

ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது பாடல்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு இயக்குநர், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ். ஆர். பிரபு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அனிரூத் மற்றும் சிம்புவும் இப்பட த்தி ற்காக பாடி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல கட மைப்பட்டுள்ளேன்.

இசையமைப்பாளர் (விஜய்) மெர்வின் பேசும்போது,

பொதுவாக ஒரு படத்தில், பாடல்களில் தான் அதிகமானோர்கள் பங்கேற்பார்கள். ஆனா ல்,  இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் 100க்கும் அதிகமானோர்கள் இருக்கிறார்கள். கா ர் த்தியும், ராஷ்மிகாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திரு க்கி ற து. விவேகா இரவு முழுவதும் எங்களுடன் அமர்ந்து பாடல்களை எழுதிக் கொடுத்தார். அத ன் பலன் தான் இன்று அனைவரும் பாடல் வரிகளை ரசிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேசும்போது,

‘கைதி’ படத்தை சவாலாக செய்து முடித்துவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தேன். ஆ னால், இப்படம் அதைவிட சவாலாக அமைந்தது. இதுபோன்று ஒவ்வொரு படத்தையும் சவாலாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது என்றார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசும்போது

கார்த்தி சிறப்பாக நடிப்பார் என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன் னும் எனக்கு அறிவுரை தேவைப்படுகிறது. இயக்குநர் எனக்கு இப்பட கதையை முதல் முத லாக அழகாக கூறியதற்கு நன்றி. இப்படத்தில் என்னை அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.இதுபோன்ற பின்னணியில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நி னைத்திருந்தேன். அந்த ஆசை இப்படம் மூலம் நிறைவேறியது.. 

நான் அனைவரையும் விரும்புகிறேன் ‘ஐ லவ் யூ ஆல்’ என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேசும்போது,

எனக்கே மிகவும் படபடப்பாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.கார்த்தி சார் நடித்த முதல் படமான ‘பருத்தி வீரன்‘ படம் பார்த்ததும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு நடிகனா என்று ஆச்சரிய பட்டேன். அவரை வைத்து படம் இய க்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். அன்று முதல் அவரது ஒவ்வொரு பட த்தையும் ஓடி ஓடி பார்ப்பேன். அப்படி உருவானது தான் சுல்தான். நான் பிரமித்து பார்த்த நடிகர் என்றால் அது கார்த்தி தான். அவரை பல வித பாத்திரங்களில் பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் புது விதமான கார்த்தியை காண்பிக்க விரும்பினேன்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.

ராஷ்மிகா விளையாட்டு பெண்ணாக இருப்பார். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டால் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுவார். காதல் கட்சிகளில் கிட்டதட்ட 100க்கும் மேல் இந்த மாதிரி காட்சிகளை வைக்கலாமா என்று என்னுடன் கலந்து கொண்டார். மிகப் பெ ரிய முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகும் அவர் இப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ஏற்கனவே அவர் முன்னணியில் தான் இப்பொழுது இருக்கிறார்.

இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் தனிக்கொடி எழுதினார். மற்ற அனைத்து பாடல் க ளை யும் விவேகா தான் எழுதினார். எப்படி வேண்டும் என்று கேட்டாலும் இரவு பகலாக விரும் பியபடி எழுதி கொடுத்தார். விவேக் மெர்வின் சகோதரர்கள் நன்றாக இசையமைத்திரு க் கிறார்கள். இப்படம் ஒரு அதிரடி படம் என்பதால் சண்டை காட்சிகளை கண்களுக்கு விரு ந்தாக திலீப் சுப்பராயன் கொடுத்திருக்கிறார்.நெப்போலியன் கார்த்திக்கு அப்பா வாக ந டித்திருக்கிறார். சென்றாயன் பேச்சை கேட்கும் போதே அவருடைய நகைச்சுவை திற மை தெரியும். அவருக்கான வசனங்களை துருவி துருவி கேட்டு கொண்டே இருப்பார்.

ஷோபியின் நடன அசைவு பார்க்க எளிமையாகவும் ஆடும் போது கடினமாகவும் இருக் கு ம். ஒரு பாடல் மட்டும் பிருந்தா இயக்கியிருக்கிறார். என்னுடன் கடினமாக பணியாற்றிய அத்துனை உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.யோகிபாபு படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார். அவர் எது பேசினாலும் சிரித்துக் கொண்டே தான் இருப் போம் என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

2 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்தில் விழாவை வைத்திருக்கிறோம். கொரோ னா விற் கு பிறகு விழா வைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தோடு வைத்திரு க்கிறோம். இப்ப டத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகமாக இருந்தது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் இரண்டு படத்திற்கான கதையைக் கூறினார். பாகுபலி அளவிற்கு பிரமாண்ட கதையாக இருந்ததால், இந்த இரண்டு கதைகளையும் பாகுபலி கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிர சாத்திடம் கூறினோம். அவர் கூறிய ஆலோசனையின்படி இக்கதையை அமைத்தோம். .அ து எங்களுக்கு மிகுந்த பலமாக இருந்தது.

காஷ்மரோ படத்தை சவாலாக எடுத்தோம். அதுபோலவே தான் இப்படமும் சவாலாக அ மைந்தது. அதன்பிறகு வெளியீட்டு தேதி ஒரு வருடத்திற்கு மூன்று தான். பொங்கல், கோ டை விடுமுறை மற்றும் தீபாவளி. ஆனால், அதற்குள் கொரோனா பாதிப்பு எல்லாவற் றை யும் புரட்டி போட்டது. அதன்பிறகு திரைத்துறை பாதை மாறிவிடுமோ? என்கிற பயமும், சந்தேகமும் இருந்தது. ஆனால், அதைத்தாண்டி எல்லோருக்கும் இருந்த தன்னம்பிக்கை தான் வெற்றிபெற செய்திருக்கிறது.

பணம் வந்து விடும். ஆனால், காலதாமதம் ஆகும் என்று என்மீது நம்பிக்கை வைத்து பொ று மையாக இருந்த அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு, இந்திய அளவி ல் சி னிமாவிற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் தான். திரையரங்கில் வெளியி ட்ட அப்படக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கை தா ன் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவெடுக்க வைத்தது.

இப்படத்தில் வரும் ஒரு காட்சியை நான் மிகவும் ரசித்தேன். அது, எப்படிண்ணே இவ்வ ள வு பேருக்கும் சாப்படு போடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு அதை ஏன் கேட்கிறீர்கள்? என்ற காட்சி எனக்கு பொருத்தமாக இருந்தது. அதைப் பார்த்து நான் ரசித்து சிரித்தேன். அந்த ளவிற்கு இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பெரிய கூட்டம் இருக்கும்.  நெப் போலியன், லால், இருக்கிறார்கள். இவர்கள் தவிர மயில்சாமி, மாரிமுத்து போன்ற இன் னும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட் டிருக் கிறது.

இவர்களிடையே நடக்கக் கூடிய உணர்வுபூர்வமான காட்சி அமைப்பு கண்கலங்க வைக் கும்படியாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு தரமான படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. டிரீம் வாரியர்ஸ் எப்போதும் தரமான படங்களை கொடுப்பார்கள் என்பதை இப்ப டம் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன் றி.இ ப்படம்ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. எல்லோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து மகிழுங்கள்.