ஒன்பது குழி சம்பத் திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக்குட்டி, இந்திரன் மற்றும் பலார் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
எழுத்து, இயக்கம் – ஜா. ரகுபதி, இசை – வி.ஏ. சார்லி ,ஒளிப்பதிவாளர் – கொளஞ்சி குமா ர்,படத் தொகு ப்பு – தீனா ,வெளியீடு- ரீகல் டாக்கீஸ் ஆன்லைன் ஒ டி டி ,தயாரிப்பு – 80-20 பிக்சர் ஸ்,த யாரிப் பாளர்- ரஞ்சித் குமார் ,பாலு மற்றும் ஜிகே. திருநாவுக்கரசு,வெளியீடு – தேதி 15 – ஆகஸ்ட் 2020, மொழி – தமிழ்,இயங்கும் நேரம் – 127 நிமிடங்கள்,நாடு – இந்தியா ,,மக்கள் தொடர்பு – எம்பி. ஆ னந்த்.
திரை கதை-;
நாயகன் சம்பத் ஊரில் ஊதாரித்தனம் செய்து திரியும் வாலிபன். ‘ஒன்பது குழி’ கோலி விளையாட்டில் மிகப்பெரும் கில்லி நம்ம நாயகன். நன்றாக வாழ்ந்து சரிந்த குடும்பமாக அதே ஊரில் வாழ்ந்து வருகின்றனர் நாயகி நிகிலா விமலாவின் குடும்பத்தினர்.சம்பத், நாயகி நிகிலாவை ஒருதலையாக காதலிக்கிறார். பல முறை சொல்லியும் சம்பத் கேட்கா ததால், ஊர் மக்கள் முன்னர் சம்பத்தை அடித்து விடுகிறார் நிகிலா.மனம் நொந்து தற் கொலைக்கு முயல்கிறார் சம்பத். இந்த செய்தியறிந்து, நிகிலாவும் சம்பத் மீது காதல் வயப்படுகிறார்.ஒரு கட்டத்தில் நிகிலாவிடம், நான் வேறு ஊருக்கு சென்று சம்பாதித்து விட்டு உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன் என்று சொல்லி கிளம்புகிறார் சம்பத்.அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
நாயகன் பாலாஜி மஹாராஜா(சம்பத்) கதைக்கு ஏற்ற ஒரு தேர்வு. மிகக் கச்சிதமாக கதாபாத்தி ரமாக பொருந்திருக்கிறார் பாலாஜி. ஊர் சுற்றும் முரட்டுப்பயலாக இருக்க ட்டும், காதலிக்கும் போது காதலனாக இருக்கட்டும் என பல விதமான முகமாக நடித்து மிரட்டியிருக்கிறார் பா லாஜி. நாயகி நிகிலா விமல், அழகான, அமைதியான கேரக்டரில் நடித் து அனைவரின் பாரா ட்டுதலையும் பெறுகிறார். இதுதான் இவருக்கு முதல் படம். நாயகனின் நண்பனாக அப்புகுட்டி, நாயகனின் அம்மா, நிகிலா விமலின் குடும்பம் என அனைவரும் கதைக்கேற்ற கதாபா த்திரத் தில் நடித்து அசத்தியிருக்கின்றனர்.
படத்தின் நாயகன் சம்பத் (பாலாஜி மகாராஜா). கிராமத்து இளைஞனுக்கு உரிய அதே கெத்து. வெட்டி பந்தா. ஊதாரித்தனமான முரட்டுக்காளையை கண்முன் நிறுத்தியி ருக் கிறார். நாய கியாக நிகிலா விமல். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கேற்ப தன் கேர க்டரின் வலியை உ ணர்ந்து நடித்திருக்கிறார். மிகையில்லாத நடிப்பை கொடுத்தி ருக் கிறார். பாலாஜியின் நண்ப னாக அப்புக்குட்டி. நிறைய காட்சிகளில் ரசிக்க வைக் கிறார். பாலாஜி அம்மா, நாயகியின் பெ ற்றோர், நிகிலாவின் அண்ணா ஆகியேரின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. அச்சு அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு கிராம அழகி னை கண்முன்னே நிறுத்தியுள்ளது. சார்லியின் பின்னனி இசை ஓகே என்றாலும், பாடல் கள் கைகொ டுக்கவில்லை.ரகுபதியின் இயக்கத்தில் ‘ஒன்பது குழி சம்பத்’ அழகான காத ல் ஓவியம். வழக்க மான காதல் கதை தான் என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சி இயக்கு னரு க்கான தரம் .
படத்தின் கதை நம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்த எதார்த் தமான முன் வந்த கதைதான். நாம் ஏற்கனவே பார்த்து பழகி போயிருந்த கதையாக இருந் தாலும் படத்தின் திரைக்கதை நம்மை புதுமையாக உணர வைத்தது. படத்தின் நாயகன் சம்பத் ஒரு பொறுப்பற்ற முரட்டு இளைஞனாக தன் நண்பர்களுடன் கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு நபர்.அவனை யாருக்கும் பிடிக்காது அவனது தாய் கூட அவனிடம் 14 வருடங் கள் பேசாமல் இருப்பார். படத்தில் சம்பத்தின் நண்பராக சாமி கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கும் அப்புக்குட்டி மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்ந்தார். அத்துடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு முரட்டுத்தனமான ஒரு பொறுப்பற்ற இளைஞனுக்கு காதல் வருகிறது அந்த காதல் இவனது வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதை மிக சுவார ஸ்யமாக கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.படத்தின் ஒளிப்பதிவாளர் மிக எதார் த்தமாக திருச்சி நகரை ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இசையும் இந்த படத்திற்கு நல் ல உறுதுணையாக இருந்தது.படத்தில் அங்கங்கே சில ஸ்லோவா காட்சிகள் இருந்தா லும் ஒரு சில நல்ல நல்ல ஒரு கதை திருப்பங்களுடன் உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் காட்சி மனதிற்கு பாசிட்டிவ் பீலிங் கொடுக்கிறது.
வி.ஏ.சார்லியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. ஒரு காட்சியில் நாயகன் பாடும் இழவு பாடல் தேவையற்றது. எடிட்டர் வெட்டி எறிந்திருக்கலாம்.படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாள ர்தான். கொளஞ்சிகுமார் கைவண்ணத்தில் காட்சி அத்தனையும் அழகு. படத்தை இயக்கி யி ருப்பவர் ரகுபதி. வழக்கம்போல காதல் கதை என்றாலும் படத்தின் க்ளைமாக்சில் எதி ர்பாராத ஒன்றை கொடுத்திருப்பது பாராட்டு. ஒன்பது குழி சம்பத் சமீபத்தில் ரீகல் டாக்கீ ஸ் OTT ல் ரிலீஸ் ஆனது.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து ரீகல் டாக்கீஸ் ஆன்லைன் ஒ டி டி யில் திரை ப்படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3/5