ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில் 1606 ரூபாய் கட்டணத்தில் தொடங்கும் ‘ஃப்ளாஷ் சேல்’ சிறப்பு விற்பனையை தொடங்கியிருக்கிறது!
· ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஃப்ளாஷ் சேல்’ சிறப்பு விற்பனைக்கான முன்பதிவு வசதி அக்டோபர் 27, 2024 வரை மட்டும் வழங்கப்படுகிறது.
சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தீப ஒளியின் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையாக ‘ப்ளாஷ் சேல்’ [‘Flash Sale’]-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் குவஹாத்தி-அகர்தலா, கொச்சி – பெங்களூரு, சென்னை – பெங்களூரு, விஜயவாடா – ஹைதரபாத் உள்ளிட்ட பல விமான சேவை வழித்தடங்களுக்கு முக்கிய முன்பதிவு தளங்களில் ₹1606 முதல் ஆரம்பமாகும் கட்டண சலுகைகளை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையான ‘ஃப்ளாஷ் சேல்’ நவம்பர் 1 முதல் டிசம்பர் 10, 2024 வரையில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு மட்டும் பொருந்தும். மேலும் இந்த சலுகையானது முன்பதிவு அக்டோபர் 27, 2024 வரையில் செய்யும் முன்பதிவுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்தியேகமான எக்ஸ்பிரஸ் லைட் கட்டண சலுகைகளையும் வழங்குகிறது.airindiaexpress.com-ல் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1456 ரூபாயில் ஆரம்பமாகும் கட்டண சலுகைகளுடன் ஜீரோ கன்வீனியன்ஸ் ஃபீ’ [Zero Convenience Fee’] சலுகையையும் வழங்குகிறது. எக்ஸ்பிரஸ் லைட் கட்டணத்தில் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், கூடுதல் 3 கிலோ கேபின் பேக்கேஜை எடுத்து செல்வதற்கான முன்பதிவு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு விமானங்களில் செக்-இன் லக்கேஜ்ஜிற்கு தள்ளுபடி கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது. 15 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு வெறும் 1000 ரூபாயும், சர்வதேச விமானங்களில் 20 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு 1300 ரூபாயும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்கள் பிரத்தியேக தள்ளுபடிகளுடன், Biz இருக்கைகளுக்கு தரம் உயர்த்தி கொள்ளும் போது சிறப்பு சலுகையாக 50% வரை தள்ளுபடி பெறலாம். இது பிசினஸ் கிளாஸ்ஸூக்கு இணையான ஒன்றாகும். விருந்தினர்கள் 58 அங்குலங்கள் வரை இருக்கை வசதியுடன் மேம்பட்ட பயண அனுபவத்திற்காக தங்களது இருக்கைகளை Biz இருக்கைகளுக்கு மாற்றம் செய்து கொள்ளவும் முடியும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விமான சேவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் இணைத்திருக்கும் 35 புத்தம் புதிய போயிங் 737-8 விமானங்களிலும் எக்ஸ்பிரஸ் பிஸ் இருக்கைகள் கிடைக்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் புதிய விமான ஒன்றை தனது சேவை விமானங்களின் வரிசையில் இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது. லாயல்டி உறுப்பினர் களுக்கு ‘Gourmair’ சூடான உணவுகள், இருக்கைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் அஹெட் முன்னுரிமை சேவைகள் ஆகியவற்றில் 25% தள்ளுபடியும் கிடைக்கும்.
கூடுதலாக, மாணவர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சிறப்பு தள்ளுபடி கட்டணங்களைப் பெறு வகையில் முன்பதிவு செய்யலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பற்றி.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியாவின் ஒரு துணை நி றுவனமாகும். மேலும் இது டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. 82 விமானங்களுடனான சேவையின் மூலம், 33 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 14 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் தினமும் 400 விமானங்களை இயக்கி வருகிறது. தனது விமான சேவை அணிவகுப்பில் 61 போயிங் 737 விமானங்கள் மற்றும் 29 ஏர்பஸ் A320 விமானங்கள் என மொத்தம் 90 விமானங்கள் இருக்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விருந்தினர்களை ‘நீங்கள் நீங்களாகவே பறக்கலாம்’ [Fly As You Are] என்ற முன்மொழிவுடன் அழைக்கிறது. தனித்துவமான இந்திய அரவணைப்பு உணர்வுடன், இந்த விமான நிறுவனம் சூடான கெளமெர் [Gourmair] உணவுகள், செளகரியமான இருக்கைகள், மற்றும் பிரத்தியேக லாயல்டி பலன்களையும் வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விருது பெற்ற மொபைல் ஆப் மற்றும் இணையதளமான airindiaexpress.com.-ல் தனித்துவமான லாயல்டி பலன்களை வழங்குகிறது.