ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ரீடம் சேல்’ அறிமுகம்!
குறைந்த கட்டணமாக ₹1947 -கட்டணத்தில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கியது!!
சென்னை, 1 ஆகஸ்ட் 2024: இந்தியா தனது சுதந்திரத்தின் 77-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது “ஃப்ரீடம் சேல்” [Freedom Sale] மூலம் வாடிக்கையாகளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறது. இச்சலுகையின் மூலம் ‘எக்ஸ்பிரஸ் லைட்’ கட்டணங்கள் [Xpress Lite fares] ₹1947 முதல் தொடங்குகின்றன. இச்சலுகை கட்டணத்திலான டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விருது பெற்ற இணையதளம், airindiaexpress.com பிரத்தியேகமாக கிடைக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரிவுகளில் 2024 செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.
15 சர்வதேச தடங்கள் மற்றும் 32 உள்நாட்டு இடங்களை உள்ளடக்கிய தனது நெட்வொர்க் முழுவதும் தனது சிறப்பு தள்ளுபடி கட்டணங்களுடன் ஃப்ரீடம் சேல் சலுகையை வழங்குவதுடன், டெல்லி-ஜெய்ப்பூர், பெங்களூரு-கோவா, டெல்லி-குவாலியர் [Delhi-Jaipur, Bengaluru-Goa, Delhi-Gwalio] போன்ற மனதை மென்மையாக உணர செய்யும் விடுமுறை பயண இடங்களுக்கு செல்லும் தடங்களில் இந்த பிரத்தியேக சலுகைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது.
airindiaexpress.com-ல் முன்பதிவு செய்பவர்கள் பிரத்தியேகமான ஜீரோ-செக்-இன் பேக்கேஜ் எக்ஸ்பிரஸ் லைட் கட்டணங்களுக்கான [zero-check-in baggage Xpress Lite fares] சிறப்பு வாய்ப்புகளைப் பெறமுடியும். பிரத்தியேகமாக வழங்கப்படும் எக்ஸ்பிரஸ் லைட் கட்டணத்தில், கூடுதல் 3 கிலோ கேபின் பேக்கேஜை எந்தக் கட்டணமும் இல்லாமல் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பும், உள்நாட்டு விமானங்களில் 15 கிலோவுக்கு ₹1000 மற்றும் சர்வதேச விமானங்களில் 20 கிலோவுக்கு ₹1300 என்ற செக்-இன் பேக்கேஜுக்கான தள்ளுபடி கட்டணமும் [discounted fee for check-in baggage at ₹1000 for 15 kg on domestic flights and ₹1300 for 20 kg on international flights.] அடங்கும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்கள் பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் 8% நியூகாய்ன்ஸ் [NeuCoins] வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஸினெஸ் [Biz] மற்றும் ப்ரைம் [Prime Seat] இருக்கைகளுக்கு 47% வரை தள்ளுபடி, ‘Gourmair’ சூடான உணவுகள் மற்றும் பானங்கள் மற்றும் ஆட்-ஆன் பேக்குகள் போன்றவற்றுக்கும் அட்டகாசமான பிரத்தியேக சலுகைகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்திருக்கிறது. லாயல்டி உறுப்பினர்களுடன் கூடுதலாக, மாணவர்கள், மூத்த குடிமக்கள், SME-க்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் சிறப்பு தள்ளுபடி கட்டணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.
புத்தம் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-8 விமானங்களிலும் எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டண [Xpress Biz fares] வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது பிசினஸ் கிளாஸ் பயணத்திற்கு சமமான ஒன்றாக, வழக்கமான எல்சிசி மாடலுக்கு [traditional LCC model] மேம்பட்ட ஒன்றாக வழங்கப்படுகிறது. ‘நீங்கள் நீங்களாகவே பறக்கலாம்’ [‘Fly As You Are] என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் புதுமைப் புகுத்தப்பட்ட ப்ராண்டை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளின் வெளிப்பாடாக ஹைபிரிட் வேல்யூ கேரியர் [hybrid value carrier] மதிப்புடன் அளிக்கப்படுகிறது. விருந்தினர்கள் தங்களது இருக்கையை பிஸ் இருக்கைகளுக்கு மேம்படுத்த முடியும். இதன் மூலம் 58 அங்குலங்கள் வரை அளவுள்ள இருக்கைக்கு மாற்றி மேம்பட்ட பயண அனுபவத்தையும் பெறமுடியும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சேவை விமானங்களின் எண்ணிக்கையை மிக விரைவாக விரிவுபடுத்தி வருவதால், ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 4 புதிய விமானங்களை அறிமுகப்படுத்துகிறது. மேலும் அக்டோபர் 2023-ல் அதன் பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களில் 4-8 பிஸ் இருக்கைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.