எழுந்து வா பாலண்ணா   இரவென்ன செய்யும்  பகலெங்கு போகும்

எழுந்து வா பாலண்ணா   இரவென்ன செய்யும்  பகலெங்கு போகும்

எழுந்து வா பாலண்ணா   இரவென்ன செய்யும்  பகலெங்கு போகும்

செவியென்ன கேட்கும்

உன் பாடல் அன்றி !?

ஆயிரம் நிலவுகள்

உன்குரல் தேடி

திசையெட்டும் சென்று

மழலை போல் நிற்கும்.

காற்றுக்குள் நீ சேர்த்த

சொற்கூட்டமெல்லாம்

புதுப்பாடல் கேட்க

பசியோடு நிற்கும்.

ஓசைக்கு ஆசை வந்த

அழகன் நீ!

ஸ்ருதிக்கு சுவை கூட்ட

வந்தவன் நீ!

சொல்லுக்கு சுவாசத்தை

தந்தவன் நீ!

ஓங்காரப் பெருவெளியின்

அதிசயன் நீ!

ஒளிக்கீற்று வியாசனே

கை நீட்டி வா!

காலத்தை வென்றிடவே

விரைவாக வா!

ராஜாக்கள் கை கூப்பி

அழைக்கின்றார் வா அண்ணா!

ரசித்தவர்கள் அழுதபடி

தொழுகின்றார் வா அண்ணா !

பாலண்ணா !

எழுந்து வா அண்ணா!

எம்மா பாரண்ணா!!

-ராசி அழகப்பன்