உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது!
~ வித்யாதர் ககிதா இயக்கியுள்ள, காமி திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ~
சென்னை, 3 ஏப்ரல் 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது. கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள “காமி” திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது. விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களின் வழியே, மனித மனத்தின் விசித்திரங்களைப் பேசுவதுடன், ஆத்மாவின் தேடலை ஆராய்வதோடு, வாழ்வின் காலக்கடிகரமாக, விந்தை காட்டும் படைப்பாக உருவாகியுள்ளது. இயற்கையை மாற்ற முயலும் மனிதகுலத்தின் முயற்சி, பேரழிவு விளைவுகளை உருவாக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
காமி, ஷங்கரின் (விஷ்வக் சென்) பயணத்தை விவரிக்கிறது, மனித ஸ்பரிசத்தை உணர முடியாத ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரி தான் ஷங்கர். துரோணகிரி மலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மர்மமான காளானான மாலிபத்ராவைத் தேடி அவர் செல்கிறார். வழியில், ஷங்கர் இதேபோன்று அந்த காளானைத் தேடும் நுண்ணுயிரியலாளர் ஜானவியை (சாந்தினி சௌத்ரி) சந்திக்கிறார். அவர்களின் விதி, இமயமலையின் பனிக்குளிரில் அவர்களை அலைக்கழிக்கிறது. இன்னொரு புறம் இந்தக்கதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக அறியப்பட்ட தேவதாசி பாரம்பரியத்தின் பாதகங்களைப் பேசுகிறது. ஷங்கர், ஜானவி பயணம் வெற்றி பெறுமா ? ஏப்ரல் 12 ஆம் தேதி ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., “எங்கள் கடைசித் தெலுங்கு டிஜிட்டல் பிரீமியரான ஹனுமான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ZEE5 இல் நாங்கள் மற்றொரு திரையரங்க பிளாக்பஸ்டரான, காமி படத்தைக் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். இப்படத்தைத் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் தருவதன் மூலம் எங்கள் பிராந்திய பார்வையாளர்களை மகிழ்விப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து மொழிகளிலும் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கமாகும், பார்வையாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறந்த சினிமா அனுபவங்களைப் பெற வேண்டுமென்பதே எங்கள் விருப்பமாகும். காமி அதன் திரையரங்க வெளியீட்டின் போதே பார்வையாளர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்போதைய ZEE5 டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பெரும் வரவேற்பைக் குவிக்குமென நம்புகிறோம்.
கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் கார்த்திக் ஷபரீஷ் கூறுகையில்.., “ZEE5 உடன் இணைந்து காமியை 190+ நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் நாங்கள் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் படம் திரையரங்குகளுக்கு அப்பால் பார்வையாளர்களைச் சென்றடைவதைப் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். திரையரங்க ஓட்டத்தின் போது ரசிகர்களிடம் இருந்து எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் அமோகமாக இருந்தது. மேலும் தற்போது ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியரிலும் அதே வரவேற்பைப் பெறுவோம் என நம்புகிறோம். காமி திரைப்படத்தின் மனதைக்கவரும் உருவாக்கம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.
இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்கள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம், இப்போது ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம், திரைப்படங்கள் மீதான எங்களின் காதல் மற்றும் எங்களின் அயராத உழைப்பு, இது உலகளாவிய தளத்தில் புதிய உயரங்களை எட்டுவதைக் காண மகிழ்ச்சியாகவுள்ளது.
நடிகர் விஷ்வக் சென் பேசுகையில், “காமி படத்தில் ஷங்கரின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது அசாத்தியமான பயணமாக இருந்தது. வித்யாதரின் சிறப்பான இயக்கத்தில் எங்கள் குழுவினர் அயராது உழைத்து, ஒரு தலைசிறந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் நீண்ட நாட்களாக பெரும் உழைப்பில் உருவாகி வந்தது. அதற்குப் பலனாக, இப்படம் தியேட்டரில் பார்வையாளர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களின் அன்பு ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம் தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் உருவாக்கிய மேஜிக்கை ZEE5 இன் பார்வையாளர்கள் காண ஆவலாகக் காத்திருக்கிறேன்”.
ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது , ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/