இன்று அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

இன்று அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

என் ஜூவி பேட்டியை பார்த்து தான் ரஜினி தன் முடிவை மாற்றியுள்ளார் – எம்ஜிஆர் நம்பி பேட்டி

இன்று அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் பொதுச்செயலாளர் எம்ஜிஆர் நம்பி தலைமையில் சென்னை வடபழனியில் நடை பெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத் தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் இதுவரை யாருமே செய்திராத பல மக்கள நல திட்டங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினை கட்சியின் பொதுச்செயலாளர் எம்ஜிஆர் நம்பி வெளியிட்டார். அதில் இளைஞர்களுக்கான யூத் பேங்க் ஆஃப் இந்தியா என்ற திட்டம் அ னைவரின் வரவேற்பை பெறும் வகையில் அமைந்துள்ளது. இதன் படி18-38 வயதி ற்குட் பட்ட இளைஞர்கள் ரூ. 1 முதல் ரூ. 5000 கோடி வரை தொழில் செய்ய கடனாக பெறலாம்.

இதற்கு நல்ல திட்டமும் யோசனை மட்டும் போதும் என கூறப்பட்டுள்ளது. அரசியல் கூட்ட ணி குறித்து பேசுகையில், எங்கள் கொள்கை மற்றும் திட்டங்களை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணிக்கு தயார் எனவும், தனித்தே தேர்தலை சந்திக்கவும் தயார் எனவும் கூறினார். மேலும் ரஜினிகாந்த் என்னுடைய ஜூவி பேட்டியை பார்த்த பிறகு தான் கட்சி ஆரம்பிக்கும் முடிவை மாற்றியுள்ளதாக எம்ஜிஆர் நம்பி தெரிவித்தார். மேலும் நண்பர் ரஜினியின் இந்த முடிவை வறவேற்பதாகவும் கூறினார். எம்ஜிஆர் அவர்களின் பெயரை பயனபடுத்த கமலு க்கு அறுகதை இல்லை, இனி புரட்சி தலைவரின் பெயரை கமல் பயன்படுத்த கூடாது என வும் கேட்டு கொண்டுள்ளார்.