ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ தொடரின் படக்குழுவினர் கலந்துகொண்ட SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா!

ஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ தொடரின் படக்குழுவினர் கலந்துகொண்ட SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா!

இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்திய குத்துக்கு பத்து குழு !

தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜி ட்டல் தளத்தில் வெளியான, ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ இணைய  தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை SSN பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த கல்லூரி கல்சுரல் விழா வின் குறும்பட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, குத்துக்கு பத்து குழுவினர் கலந்து கொண்டனர். இந்த கல்லூரி விழாவில், இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்துவ தற்கா க, ஆஹா தமிழ் சார்பில் குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டு, போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.

திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவான இணைய தொடர் ‘குத்துக்கு பத்து’. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங் கட், சாரா, ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ‘நவம்பர் ஸ்டோரீஸ்’ புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடி த்துள்ளனர். இந்த தொடருக்கு ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இ சையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார், மதன் குமார் கலை இயக்குநராக பணியாற் றியிருக்கிறார். டார்க்-அடல்ட் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த தொடரை டி கம் பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.

ஆஹா தமிழ் ஓடிடி தளம் இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப் ப ளித்து வருகிறது. அந்த வகையில் யூடுயூப் தளத்தில் பிரபலமான டெம்பிள் மங்கீஸ் என் ற குழுவை கண்டறிந்து, அவர்களுக்கு தொடர் இயக்கும் வாய்ப்பளித்து, அந்த தொடரை ஆ ஹா தமிழ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது அவர்கள் மூலமாகவே இளம் திறமை யாளர்களை கண்டறியும் பணியையும் மேற்கொண்டுள்ளது.

கல்லூரி விழாவினில் கலந்து கொண்ட குத்துக்கு பத்து குழுவினர் மாணவர்களிடம் உரை யாடினர்

அந்நிகழ்வில் இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் வரதராஜ் கூறியதாவது…

எங்கள் ’குத்துக்கு பத்து’ தொடர் நேற்று ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. இத்தொடர் அடல்ட் காமெடி வகையை சார்ந்தது. ஒரு கேங்க் வாரை அடிப்படையாக கொண்டு உரு வாக்கபட்ட தொடர் இது. நண்பனுக்காக நீங்கள் சண்டைக்கு போகும்போது, அங்கு நடக்கு ம் சண்டையில் சிக்கி, அந்த சண்டை பெரிய கேங்க் வாராக மாறினால், என்ன ஆகும் என் பது இந்த தொடர். இங்கு நாங்கள் நிற்கும் இந்த மேடை தான் எங்களுக்கு வெற்றியை கொ டுத்தது. இது மாதிரி மேடைகளில் ஜெயித்தவர்கள் சினிமாவுக்கு போவார்கள். மற்றவர் க ள் அவர்களுக்கு விருப்பமான துறைக்கு செல்வார்கள். இந்த மேடையில் எங்களது தொட ரை புரோமோஷன் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த தொடரில் இணையதளத்தில் பி ரபலமான சும்மி வண்ண காவியங்கள், பிலிப் பிலிப், மைனர் போன்றவர்கள் இந்த தொ டரில் நட்புக்காக நடித்து கொடுத்துள்ளனர். இந்த தொடர் ஆஹா தளத்தில் வெளியா கியு ள்ளது, நீங்கள் அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகர் அப்துல்லா கூறியதாவது….

சிம்போசியம், கல்சுரல் போன்ற நிகழ்வுகளுக்காக இந்த கல்லூரிக்கு வந்திருக்கிறோம். இப்போது நாங்கள் நடித்த தொடர் ஆஹா தமிழில் வெளியாகி, அதற்கான புரோமோ சனு க்காக் இந்த மேடைக்கு வருவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. குத்துக்கு பத்து தொடரை பொறுத்தவரையில், அது ஒரு கேங் வார் சம்பந்தபட்டது. நாம் எப்போதும் நமது காதலை விட நமது நண்பன் காதலுக்காக பெரிய சிக்கலுக்குள்ளாவோம். நண்பன் காதலுக்காக சண்டை போட்டு சிக்கலில் மாட்டிகொண்டவர்கள் ரிலேட் பண்ணிகொள்ள கூடிய ஒன் றாக இந்த தொடர் இருக்கும். நாம் நினைத்து பார்க்காத சில விஷயங்களும் இந்த தொ டரில் இருக்கும். தொடரை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

படத்தொகுப்பாளர் சந்தோஷ் கூறியதாவது….

விஜய் அண்ணா தான் எனக்கு எல்லாவுமாய் இருந்தார். இந்த தொடர் எல்லாருக்கும் ரொ ம்ப நெருக்கமான ஒன்று. டெம்பிள் மங்கீஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமான புரொபசர் ரங் கபாசியம் குத்துக்கு பத்து தொடரில் ஏழு எபிசோடுக்கு மேல் வருவார். நீங்கள் இந்த தொ டரை ஆஹா தமிழ் தளத்தில் பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகர் சஞ்சய் கூறியதாவது…

பல முறை நிராகரிக்கபட்டு, நான் வெற்றி பெற மாட்டேன் என நினைத்த மேடையில் நான் நடித்த தொடருக்கு புரோமோஷன் செய்வது மிகவும் சந்தோசமாக உள்ளது. குத்துக்கு பத் து தொடர் எல்லோரும் ரிலேட் செய்து கொள்ளும் தொடராக இருக்கும். எல்லோரும் பார்த் து ஆதரவு தாருங்கள்.

இதனை தொடர்ந்து

கல்லூரி விழாவில் தி ரையிடப்பட்ட குறும்படங்களை பார்வையிட்ட குத்துக்கு பத்து தி ரைப்படக்குழு, சிறந்த குறும்படங்களுக்கான விருது வழங்கி, இளம் திறமையாள ர்களை ஊக்கபடுத்தும் விதமான கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரைத் தொடர்ந்து, நக்க லைட்ஸ் என்ற உள்ளுர் திறமையாளர்களுடன் இணைந்து உருவான ‘அம்முச்சி 2’ என்ற இணைய தொடரும் ஆஹா ஒரிஜினல் படைப்பாக விரைவில் வெளியாகவிருக்கிறது.

தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் மூலமாக அச த்தி வரும் ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரை ப்பட ங்கள் வெளியாகியுள்ளன. ஆஹா ஒரிஜினல் படைப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ என் ற திரைப்படமும் நேரடி பிரிமியர் ஆக வெளியானது. இதற்கு பார்வையாளர்களிடையே பேராதரவு கிடைத்தது. திரையரங்கில் வெளியான ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ தி ரைப்படத்தை ‘ஆஹா டிஜிட்டல் தளம் விரைவில் வெளியிடவிருக்கிறது.