ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு
வெளியிடுவோர் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத் துவ நிறுவனம்
ஒவ்வொரு வீட்டிலும் அனுதினமும் ஆயுர் வேதம்
~ 2022ஆம் வருட ஆயுர்வேத தினத்தின் நினைவாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர், பேராசிரியர் மரு. கே. கனகவல்லி மற்றும் தேசிய சி த்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி இருவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் வளாகத்தில் மூலிகை மரம் நட்டனர். ~
சென்னை 21 அக்டோபர் 2022: இந்திய அரசு, நம் நாட்டில் பன்னெடுங்காலமாக மக்களின் உடல்நலத்திற்காக பின்பற்றப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஒருங்கிணைத்து ஆயுஷ் அமைச்சகத்தை ஏற்படுத்தி, அதன் நற்பயன்களை உலக மக்கள் பயன்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அந்தந்த மருத்துவ முறைகளு க்கான தினத்தினை அறிவித்து அதன் சிறப்புகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏ ற்படுத்தி வருகிறது..
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய சித்த மருத்துவ ஆராய் ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவை இந்த ஆண்டு தன் வ ந்திரி ஜெயந்தியாகிய அக்டோபர் 23 ஆம் தேதி, ஏழாவது ஆயுஷ் மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத தினத்தை அனுசரித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து அமை ச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்த ஆண்டு அமைச்சகம் கொண்டாடுகிற து.
இந்த நிகழ்வானது இந்த வருடம் “ஒவ்வொரு வீட்டிலும் அனுதினமும் ஆயுர் வேதம்” எனும் முறைமையை வலியுறுத்தும் விதமாக செயல்படுத்த படுகிறது என்பதனை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர், பேராசிரியர் மரு. கே. கனகவல்லி மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி இருவரும் தெரிவித்தனர்.
இந்த வகையில் நமது ஒவ்வொருவர் வீட்டிலும் அடுக்களையின் அஞ்சறைப்பெட்டியில் உ ள்ள மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் பெருங்காயம் போன்றவற்றின் பயன்பாடு ந மது அன்றாட நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இவைகள் தற்போதைய பெருந் தொற்று கால கட்டத்தில் மட்டுமல்லாது, தொற்றும் மற்றும் தொற்றா நோய் கூட்டங்களை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
சிறப்பாக சித்த மருத்துவத்தின் “பதார்த்த குண சிந்தாமணி” நூலில் குறிப்பிடப் பட் டுள்ள “திரிதோட சமப்பொருட்கள்” எனும் மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏல ம், வெந்தயம் மற்றும் பூண்டு போன்றவை நமது தினசரி உணவுப் பொருட்களாக இடம் பி டிக்கிறது. இந்த உணவுப் பொருட்கள் நமது உடலில் நோய் உண்டாக காரணமான வளி, அ ழல் மற்றும் ஐயம் எனும் முத்தோடங்களை சமநிலையில் வைத்து நம்மை பல்வேறு நோய் களிலிருந்து காக்கிறது.
இத்தகைய பாரம்பரிய உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் நாம் தி னந்தோறும் பின்பற்றி நோயில்லா பெருவாழ்வு வாழ உதவி செய்யும் இந்திய முறை மரு த்துவ முறைகளை தினமும் போற்றுவோம்.
இந்த தேசிய ஆயுர்வேத தினத்தினையொட்டி கடந்த 6 வாரங்களாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆயுஷ் அமைச்சகம் நிகழ்த்தி வருகிறது. இந்திய முறை மருத்துவத்தினை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேருதவி புரி கின்றன. இதனை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மரு த்துவ நிறுவனம் ஆயுஷ் அமைச்சகத்தின் உதவியுடன் திறம்பட செய்து வருகிறது.
இதன்ஒரு பகுதியாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி அவர்கள் தலைமையில் நிறுவனத்தில் உள்ள அனைவரும் ஆயுர்வேத தினவாழ்த்துக்களை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்துவருகின்ற னர்.
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக விளங்கும் சித்த மருத்துவத்தின் தினமா னது அகத்தியர் பிறந்த நாளான மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர நாளன்று சித்தமருத் து வ தினமாக கடந்த 5 வருடங்களாக கொண்டாடி வருகின்றது. அத்தினமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அன்று வருகின்றது. சித்தமருத்துவ தினத்திற்கான ஏற்பாடு க ளையும் விவாதித்து செயல்படுத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.