ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கருணாஸ் நடிக்கும் ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகர் கருணாஸ் ரசிகர்களுக்கு வழ ங்கும் பொங்கல் பரிசு
மல்டி ஸ்டார் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. சத்யஜித்ரேவை நி னைவுபடுத்திய ‘ஆதார்’ படக்குழு தைத்திருநாளில் வெளியான ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக்.

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகரு மான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நா த் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர் கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடி கைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகே ஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத் திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ‘அசுரன்’ புகழ் ராமர் படத்தை தொகுத்தி ரு  க்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிரு க் கிறது,” என்றார்.

‘ஆதார்’ தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற ந ம்பிக்கையை பட குழுவி னர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற் கு சான்றாக ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெ ளியிடும் மு ன் னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போ ற் றப்படும் இந் திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத் தியிருக் கின்றனர்.

‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பா ர்த்திபன் பொங்கல் தி ருநாளான இன்று தன்னுடைய சமூக வ லைத்தளத்தில் வெளியிட்டி ருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவ தால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர் ந் து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் – நடிகர் கருணாஸ்  மீண்டும் ‘ஆதார்’ படத்தில் மூன் றாவது முறையாக இணைந்திருப்பதால், ‘ஆதார்’ ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்ற ந ம்பிக்கையும், எதிர்பார்ப்பும் திரை உலகில் ஏற்பட்டிருக்கிறது. .