அன்பிற்கினியாள் திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-
அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ப்ரீவின் ராஜா, கோகுல், ரவீந்திரவிஜய், தீபக் ராஜ், பூபதி ராஜா,ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கௌரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், மணிபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
ஒளிப்பதிவாளர்-மகேஷ் முத்துசாமி, இசை-ஜாவித் ரியாஸ், எடிட்டர்- பிரதீப் ஈ.ராகவ், கலை-எஸ்.ஜெயசந்திரன், வசனம்-கோகுல்,ஜான்மகேந்திரன், பாடல்கள்-லலித்ஆனந்த், நடனம்-பூபதி ராஜா, சண்டை-பிசி, ஆடை-ப்ரீத்தி நெடுமாறன்,இணை இயக்குனர்கள்-மணிபாஸ்கர், பழனி பாலன், சுரேஷ்குரு, பிஆர்ஒ-யுவராஜ். மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .
திரை கதை-;
அன்பிற்கினியாள் என்கிற கீர்த்தி பாண்டியன் தன் தந்தை அருண்பாண்டியன் மீது அ ளவில்லா அன்போடு இருக்கிறார். செவிலியர் படிப்பு முடித்திருக்கும் கீர்த்தி கனடா செ ன்று சம்பாதித்து தன் தந்தையின் கடனை அடைத்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.அதற்காக முயற்சிகள் செய்ய தந்தைக்கோ இதில் துளியும் விருப்பமில்லாமல் இருக்கிறார். இதற்கிடையே பகுதி நேரமாக மாலில் சிக்கன் ஹப்பில் வேலை செய்கிறார். தந்தைக்கு தெரியாமல் ப்ரீவின் ராஜாவை காதலிக்கிறார். இந்த காதல் போலீஸ் மூலமாக தந்தை அருண்பாண்டியனுக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் கனடா செல்ல அனுமதியும் கொடுக்கிறார். இந்த சமயத்தில் ஹைதராபத்தில் ப்ரீவின் ராஜாவிற்கு வேலை கிடைக்க அவர் ஊருக்கு கிளம்புகிறார்.
அன்று கீர்த்தி பாண்டியன் மாலில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது எதிர்பாராமல் அங்கிருக்கும் உணவு பொருட்களை பாதுகாக்கும் உரைய வைக்கும் குளிர் சாதனப் அறையில் மாட்டிக்கொள்ள, கிச்சன் ஹப்பின் மேலாளர் கீர்த்தி இருப்பது தெரி யாமல் கடையை பூட்டி விட்டு சென்று விடுகிறார். தந்தையோ மகள் காதலனோடு ஒடி விட் டார் என்று நினைத்து போலீசில் காதலன் மீது புகார் கொடுக்கிறார். இறுதியில் கீர்த் தி யை தந்தை, காதலன், போலீஸ் ஆகிய மூன்று பேரும் தேடி கண்டுபிடித்தார்களா? அது வரை கீர்த்தி அந்த குளிர் சாதன அறையில் தாக்கு பிடித்தாரா? கீர்த்தியை உயிரோடு மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
மிடில் கிளாஸைச் சேர்ந்தவர். மனைவியை இழந்தவர், அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்சிங் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். கூடவே ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார்.. அப்படி ஜாப்-ப்புக்கு போன இடத்தில் பிரவீன் ராஜை லவ்வு கிறார். இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரிய வந்த அதே நாள் கீர்த்தி பா ண்டியன் எதிர்பாராவிதமாக சிக்கன் ஹப்பின் சில்லிடும் குளிர் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். லாக்கர் ரூம் மாதிரி அதிலும் உடலை உறைய வைக்கும் அந்த அறைக்குள் நாயகி படும் அவஸ்தையுடன், மகளைக் காணாமல் தந்தை பதறும் சம்பவங்களும்தான் படம்..கோலிவுட்டில் எண்ட்ரியாகி 18 வருஷங்கள் ஆனாலும் இன்றைக்கும் தமிழ் ரசிக ர்க ளின் நினைவில் இருக்கும் அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டிய னுக் காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் தன்னால் மு டிந்த அளவு உணர வைக்கிறார். போலீஸ் ஸ்டேசனில் காவலரிடம் மோதும் காட்சியை எ ல்லாம் அசால்டாக செய்து கைத்தட்டல் வாங்குகிறார்.பதினாறு வருடங்களுக்கு பிறகு தந் தையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அருண்பாண்டியன் அவருக்கு மகளாக கீர்த்தி பாண் டியன் இருவரும் சேர்ந்து மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் கீர் த்தி இரண்டாம் பாதியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடங்களில் அதிலி ருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்று முடிந்தவரை சிரமப்பட்டு அனைவரின் கவன த்தை ஈர்த்து சவாலோடு நடித்திருப்பது பாராட்டுக்குரியது.காதலனாக ப்ரீவின் ராஜா, கைதி யாக இயக்குனர் கோகுல், ரவீந்திரவிஜய், தீபக் ராஜ், பூபதி ராஜா,ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கௌரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், மணிபாரதி மற் றும் அதில் நடித்த அத்தனை பேரும் ஒவ்வொரு காட்சிக்கும் சம்பவங்களுக்கும் உறுது ணை யாக இருந்து கச்சிதமாக படத்தை நகர்த்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர்-மகேஷ் முத்துசாமி, இசை-ஜாவித் ரியாஸ் ஆகியோர் படத்திற்கான முக் கியத்துவத்தை உணர்ந்து த்ரில்லாக கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி யுள்ள னர் .எடி ட்டர்- பிரதீப் ஈ.ராகவ் முதல் பாதியில் சில காட்சிகள் கவனம் செலுத்தி எடிட் செய் திருந் தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். நச்சென்ற வசனத்தில் கோகு ல்,ஜான்ம கே ந்திரன் இருவரும் பளிச்சிடுகிறார்கள்.இயக்கம்-கோகுல்.மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ஹெலன் படத்தை மதுக்குட்டி சேவியர் இயக்கினார். அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதன் அடிப்படை கதை மாறாமல் தந்தை மகள் பா ச உறவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் கோகுல். பாசம், காதல், போலீஸ் கெடு பிடி, விசாரணை, செண்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்து பாசிடிவ் வைப்ரேஷனோடு பாத்திரப்படைப்புகளை கொடுத்து திகில் பாதையில் சென்று வெற்றி திசையில் பய ணி க்கிறார் இயக்குனர் கோகுல்.மொத்தத்தில் அன்பிற்கினியாள் அனைவரின் வெற்றி பூரி ப்போடு மனதை கவர்கிறாள்.
தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே டைட்டில் ரோலுக்கான திரைப்படம் கிடைத்த கீர்த்தி பாண்டியன் அந்த பாசமிகு ரோலைப் பக்காவாக உள்வாங்கி சபாஷ் சொல்ல வைக்கிறார்.ஜாவித் ரியாஸின் பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒ ளிப்பதிவும் இந்த அன்பிற்கினியாள் மீது எக்ஸ்டரா பிரியம் காட்ட வைத்துள்ளது. குறிப் பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகள் நடைபெற்றாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. ஆர்ட் டைரக்ட ர் எஸ்.ஜெயச்சந்திரனின் குளிர்சானத அறையின், கடும்குளிர் கொடுமையை நாமும் அனு பவிக்கும் உணர்வு ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறார். மொத்தத்தில் மலையாள ஹிட் பட மான ஹெலன் ஒரிஜினல் திரைக்கதையை தமிழ் ரசிக ர்களுக்கு ஏற்ப இயக்குநர் கோகுல் சகலரும் பார்த்து ரசிக்கும்படி வழங்கியுள்ளார்.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் தி ரை ப்ப டத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 4.5 / 5