அதைத் தொடர்ந்து, அதன் தொடர்பான, சுவையான நிகழ்வுகளே படத்தின் சாரம்.
முன்னோட்டம்: Jason Reitman இன் நேர்த்தியான இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு வளமி கு கற்பனைக் கதையம்சம் கொண்ட நகைச்சுவை விருந்து. Ghostbusters (1984), Ghostbusters 2 (1989) (இவை இரண்டையும் Jason Reitman இன் தந்தை Ivan Reitman இயக்கியிருந்தார்!) மற்றும் Ghostbusters (2016, Paul Feig) ஆகிய மூன்று Ghostbusters படங்களைத் தொடர்ந்து, அந்த Franchi se-இன் அடுத்த பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள படமிது! 1989 – படத்தின் தொடர் சங்கிலி யாக, அப்பட நிகழ்வுகளை அடுத்து, 30 வருடங்களுக்குப் பின்னர், இப்பட நிகழ்வுகள் நட ந்தேறுவதாக, இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதையம்சம்: Ghostbusters என்போர் அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய், ஆவி போன்றவை உலவும் இடங்களில், அவற்றை விரட்டி அடிக்கும் வேலையில் ஈடுபடுவோரைக் குறிக்கும்!
Callie Spengler (Carrie Coon) மற்றும் மகள் Phoebe Spengler (McKenna Grace), மகன் Trevor Spengler (Finn Wolfhard) ஆகிய மூவரும் Oklahoma வில் உள்ள ஒரு சிறிய ஊரில் குடியேறுகிறார்கள். Ghost bu sters மற்றும் அவ்விருவரின் தாத்தாவான (Late Harold Ramis) ஆகியோரிடையே இருந்த தொ டர்பு பற்றி அறிய வருகிறார்கள். அதைத் தொடர்ந்து, அதன் தொடர்பான, சுவையான நிக ழ்வுகளே படத்தின் சாரம்.
Eric Steelberg – படத்தின் ஒளிப்பதிவாளர் ,Ron Simonsen – படத்தின் இசையமைப்பாளர் ,Sony Pi ctures வெளியீடு. தயாரிப்பு – Sony Pictures ,இயக்கம் – Jason Reitman ,வெளியீடு – November 19th 2021