ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எலக்‌சன்.

ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எலக்‌சன்.

 

கதை

ஒரே கட்சியில் இளம் வயது முதல் பல ஆண்டுகளாக உழைத்தும் எந்தவித பதவியையும் அடையாமல் கடைக்கோடி தொண்டனாகவே இருந்து வரும் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜய்குமார்) அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர். தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார் நடராசன். இது அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்குகிறது. சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? சிக்கல்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்தார்? என்பதே ‘எலக்சன்’ படத்தின் மீதிக்கதை .

நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திபாராட்டை பெறுகிறார்.அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார். ஹீரோவின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான், மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி என அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசை ரசிக்க வைக்கிறது மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

உள்ளாட்சி அரசியல் எந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார்இயக்குநர் தமிழ். பாராட்டுக்கள்