முழுமையான சீரமைப்பு மேம்பாட்டை பெறும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகள்

முழுமையான சீரமைப்பு மேம்பாட்டை பெறும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகள்

~ இம்மாநகரில் 14 பள்ளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறை கற்றல் சாதனங்கள் குடிநீர் துப்புரவு மற்றும் தூய்மை வசதிகளை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து செயல்படும் வேர்ல்டு விஷன் இந்தியா ~

சென்னை 27 அக்டோபர் 2020: குழந்தைகள் மீது சிறப்பு கூர்நோக்கம் செலுத்தும் ஒரு மனி தாபிமான சேவை நிறுவனமான வேர்ல்டு விஷன் இந்தியா “வாழ்க்கைக்கு கல்வி” என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இயங்கி வரும் 14 மாநகராட்சி பள்ளிக ளில் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நிர்வாகத்தோடு இணைந்து அவைகளின் உட் கட்டமைப்பு மற்றும் கற்றல் வசதிகளை தரம் உயர்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. மா ணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவ மேம்படுத்தப்பட்ட உட்க ட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் முறையிலான கற்றல் சாதனங்கள் வழியாக தரமா ன கல்விக்கு அணுகுவசதி வழங்குவதை உள்ளடக்கிய இந்த செயல்முறையின் மூலம் தேர் ந்தெடுக்கப்பட்ட 14 மாநகராட்சி பள்ளிகள் ஒரு முழுமையான மாற்றத்தைப் பெறவி ருக் கின்றன.

ஒரு குழந்தையின் நலவாழ்வின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்ற உலகளாவிய தரஅள வு கோ ல்களை எட்டுவதை நோக்கி படிப்படியாக கல்வி அமைப்பு முறைகளை மேம் படுத் துவதே இச்செயல்திட்டத்தின் குறிக்கோளாகும். இச்செயல்திட்டமானது நான்கு முக்கிய அம்சங்கள் மீது கவனம் செலுத்தும்: மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல்முறை கற்றல் வசதியை வழங்குவது. குடிநீர் துப்புரவு மற்றும் தூய்மை நிலைக்கான (WASH) சேவைக ளுக்கு மேம் பட்ட அணுகுவசதி வன்முறை மற்றும் தவறாகப் பயன்படுத்தலின் அனைத்து வடிவங் களிலிருந்தும் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் பள்ளிகளில் குழந்தைகளின் பங் கேற்பிற்கு ஆதரவளிப்பது.

 பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்து றை யோடு வேர்ல்டு விஷன் இந்தியாவும் சேர்ந்து இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்த து. உட்கட்டமைப்பு வசதிகளின் தரம் உயர்த்தல் செயல்பாடுகளில் கழி ப்பறைகள் கட்டு வது மற்றும் சீரமைப்புகள் பள் ளியின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிப்பது மழை நீர் சே கரிப்பு கட்டமைப்புகளை உருவாக் குவது மற்றும் பழுதுநீக்குவதுஆழ்துளை கிணறுகளை தோண்டுவது மாதவிடாய் கால தூய்மை மீது வள ரிளம் பெண் குழந்தைகளிடம் விழிப் புணர்வை உருவாக்குவது விளையாட்டு உபகரணங்கள் பெஞ்ச்கள் மற்றும் மேசைகளை வழங்கு வது ஆகியவை உள்ளடங்கும். சுவர்சித்திரங்கள் வழியாக றுயுளுர் மீது விழிப்பு ணர்வு வாசகங்களை எழுதி மாணவர்கள்ள மனதில் பதியவைப்பது மற்றும் நிலைக்க த்தக்க வாழ்க்கை முறை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க சமையலறை தோட்டங்களை உரு வாக்குவது என்ற பணிகள் மீதும் இச்செயல்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

இந்த மாநகராட்சி பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் போன்ற ஸ்மார்ட் அம்சங்களையு ம் வேர்ல்டு விஷன் இந்தியா இடம்பெறச் செய்திருக்கிறது. இப்பள்ளிகளில் 43 டிஜிட்டல் வகுப்பறைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. மென்பொருள் வழியாக பாடங்கள் பதிவே ற்றம் செய்யப்படுகின்ற மற்றும் காட்சி நிலைகள் மற்றும் வரைபடங்களின் உதவியோடு பாடங்களை விளக்க உதவுகின்ற கல்வி மென்பொருளையும் வேர்ல்டு விஷன் நிறுவியிரு க்கிறது. ஆசிரியர்களின் செயல்திறனை இன்னும் அதிகரிப்பதும் இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். WASH சேவைகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள அணுகுவசதியின் மூலம் கோவிட்-19 பெருந்தொற்றுப்பரவலுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் அளவி ற்கு இவைகள் இப்போது பாதுகாப்பானவையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மறுசீ ரமைப்பு செயல்பாட்டிற்கு முன்புவரை இந்த பள்ளிகள் பெரும்பாலானவற்றில் கைகழு வுவதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை துப்புரவு மற்றும் குடிநீருக்கான சேவை வசதிகள் இருக்கவில்லை.

“வாழ்க்கைக்கான கல்வி” செயல்திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 14 மாநகராட்சி பள்ளிகள்:

1. அரசு உயர்நிலைப் பள்ளி – எம்எம்டிஏ காலனி

2. சென்னை மாநகராட்சி ஆண்கள் உயர்நிலை பள்ளி  நுங்கம்பாக்கம்

3. சென்னை நடுநிலை பள்ளி நுங்கம்பாக்கம்

4. சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஷெனாய் நகர்

5. சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளி கீழ்பாக்கம்

6. சென்னை நடுநிலைப்பள்ளி பெரம்பூர்

7. சென்னை பெண்கள் மேனிலைப்பள்ளி பெரம்பூர்

8. சென்னை உருது அரசு நடுநிலைப்பள்ளி பிராட்வே

9. சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சிந்தாதரிபேட்டை

10. சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வால்டாக்ஸ் சாலை

11. சென்னை தொடக்கப்பள்ளி எஸ்எம் நகர்

12. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி  வரதராஜபுரம்

13. சென்னை நடுநிலைப்பள்ளி வில்லிவாக்கம்

14. சென்னை தொடக்கப்பள்ளி அமைந்தகரை

வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்பின் ஆதாரவள திரட்டல் மற்றும் பொது ஈடுபா டுக் கா ன (RMPE) குரூப் இயக்குனர் சோனி தாமஸ் இச்செயல்திட்டம் குறித்து பேசுகையில் “எமது குழந்தைகளுக்கு அதிக உறுதியான எதிர்காலத்தை வழங்க பெருநகர சென் னை மாநக ராட் சியோடு இணைந்து செயல் படுவ தில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். கோ விட்-19 பெருந்தொற்று பரவியதிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குழந்தைக ளி ன் கல்வி மற்றும் நலவாழ்விற்கு இதுவரை கண்டிராத ஒரு மிகப் பெரிய சவாலை தந்திரு க்கிறது. குழந்தைகளது கற் றல் மீது வேர்ல்டு விஷன் இந்தியா அதிக முன்னுரிமை செலுத் துகிறது. கை தூய்மை தூய் மையான குடிநீர் மற்றும் பாதுகாப்பான துப்புரவு வசதிகளை வழங்குவது மீது சிறப்பு நோக்கத்தோடுமீண்டும் தொடங்கப்பட பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே இச்செயல்திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் கல்வி அதிகாரியும் (AEO) மற்றும் பொறு ப்பு கல்வி அதிகாரியுமான திரு. பாரதிதாசன் பேசுகையில் “வசதி குறைவான நகர்ப்புற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும்பாலும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மீது அறிவோ பரிச்சயமோ மிகவும் குறைவாகவே இருக்கிறது. இத்தகைய ஸ்மார்ட் வகுப் பறைகள் மூலம் டிஜிட்டல் முறையிலான கற்றலுக்கான அணுகுவசதியை பெறவும் மற்று ம் அதைத்தொடர்ந்து சிறப்பான வேலைவாய்ப்புகளை பெறுவது என்ற இலக்கை நோக்கி பயணிக்கவும் இத்தகைய மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.