மருத தமிழ் (திரைப்படம்) திரைப்பட விமர்சனம்

மருத தமிழ் (திரைப்படம்) திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

  ஜி ஆர் எஸ் ,  ராதிகா சரத்குமார்,  பருத்திவீரன் சரவணன்,  விஜி சந்திரசேகர், ஜி ஆர் எஸ் , லவ்லின் சந்திரசே கர் ,  வேல ராமமூர்த்தி , மாரிமுத்து , கஞ்சா கறுப்பு மற்றும் பலர், . 

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பு  நிறுவனம் : பிக்வே பிக்சர்ஸ் , தயாரிப்பாளர் : சபாபதி , இசை  : இசைஞானி  இளை யராஜா , இயக்கம் : ஜி ஆர் எஸ்  , ஒளிப்பதிவு  : பட்டுக்கோட்சை ரமேஷ்  . பி , பாடல் ஆசிரியர் : பழனி பாரதி,  ஏ ஆர் பி . ஜெயராம் ,  பாலகர்கள் :  எஸ் .பி . பாலசுப்பிரமணியம், சித் ஸ்ரீராம் , ஒளிப்பதிவு  – பட்டுக்கோட்டை ரமேஷ் , பி ஆர் ஓ  – நிகில் முருகன் மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .

திரை கதை-;

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் ராதிகா சரத்குமார். இவருக்கு ஒ ரே மகன் GRS. ஊரில் ஊதாரித்தனமாக வளர்ந்து வருகிறார். ராதிகாவின் கணவர் மாரி முத்து. ராதிகாவின் அண்ணன் சரவணன் செய்த செய்முறையை திருப்பி செய்ய முடியா மல் அவமானப்பட்டு தற்கொலை செய்து இறந்து விடுகிறார் மாரிமுத்து. இதனால், வறு மை க்கு தள்ளப்படுகிறார் ராதிகா.பருத்திவீரன் சரவணனின் மனைவியாக வருபவர் வி ஜி சந்திரசேகர். ஊரில் உள்ள பலருக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வருபவர். கொ டுத்த பணத்தை வட்டியோடு கொடுக்க தவறினால் அவர்களை கொடூரமான வார்த்தை களால் கொண்டும், அவர்களை அடித்தும், அவமானப்படுத்தியும் பணத்தை பிடுங்கக் கூடிய கொடூர மனம் கொண்டவர் விஜி.

ராதிகாவின் மகனும் சரவணனின் மகளும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இந்த காதலை விஜி சந்திர சேகர் எதிர்க்கிறார். பல வருடங்களுக்கு முன் ராதிகாவிற்கு செ ய்த செய்முறையை வட்டியும் முதலுமாய் தனது மகளுக்கு செய்முறையாக செய்ய வேண் டும் என்று கூறுகிறார் விஜி சந்திரசேகர். செய்முறை செய்யத்தவறினால் ஊரார்களின் முன்னிலையில் அவமானப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார் விஜி.தனது வறுமை யில் அந்த செய்முறையை ராதிகா செய்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நட க்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோ பமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வே ண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? இயக்குனரே நாய கனாக நடித்ததால், படப்பிடிப்பு தளத்தில் “இதெல்லாம் ஒரு நடிப்பா என யாரும் கூற முடி யாதுதான். அதற்காக படம் பார்ப்பவர்களின் கதி.? அழகான கதாபாத்திரத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறார் நடிகர் GRS.நாயகியாக லவ்லின் சந்திரசேகர் கதை க் கேற்ற நாயகியாக இருந்தாலும், இன்னும் ஒரு சில காட்சிகளில் எக்ஸ்ப்ரஷன் இன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றும் சொல்லலாம் அல் லது படத்திற்கு ஒரே ஒரு பலம் என் றும் சொல்லலாம் அது “ராதிகா சரத்குமார்” மட்டுமே. பல படங்களில் நடித்த, கற்றுக் கொ ண்ட தனது அனுபவ நடிப்பை இப்படத்தில் கொ டுத்தி ருக்கிறார். படத்தின் மிகப் பெ ரும் தூணாக நிற்பது இவரது நடிப்பு மட்டுமே.வில்லியாக நடித்த விஜி சந்திரசேகர், தனது நடி ப்பில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார். இக்கதாபாத்திரத்திற்கு இவ்வளவும் ஆக் டிங்க் தேவையில்லை என்று தோன்றுகிறது., சற்று மீட்டரை குறைத்திருக்கலாம். பாவமா ன முகத்தைக் கொண்டு ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்கிறார் சரவணன்.

வேல ராம மூ ர்த்தி, கஞ்சா கருப்பு இருவரின் கேரக்டர்கள் படத்தின் கதைக்கு ஒரு ஓரமாக வந்து செல்லும் கேரக்டர்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது.பட்டுக்கோட்சை ரமேஷ் B அவர் களின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். கிராமத்து காட்சியை மிக அழகாக கண்முன்னே கொ ண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.பாடலையோ மற்றும் பின்னனி இசையையோ ரசிக்கும் அளவிற்கு இசைஞானி இளையராஜா பெரிதான மெனக்கெடலை இப்படத்தில் கொடுக்க வில்லை. Bigway Pictures நிறுவனம் சார்பில் சபாபதி இப்படத்தை தயாரித்திருக்கிறார். தெ ன் தமிழகத்தில் பெரும் புழக்கத்தில் இருந்த செய்முறை பழக்கத்தின் கதையை, யாரும் தொடாத நிலையில், அதை கையில் எடுத்து சரியான முறையில், சரியான ஓட்டத்தோடு கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர். 

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்  திரை  ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5