பைரி – தமிழ் திரைப்பட விமர்சனம்

பைரி – தமிழ் திரைப்பட விமர்சனம்

 

ஒரு சில அறிமுக இயக்குனர்கள் நடப்பு வாழ்வியலை சொல்லும் சில படங்களை தந்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வரிசையில் அண்மையில் வெளி வந்திருக்கும் படம் தான் பைரி. பைரி என்றால் கழுகு என்று பொருள். நாகர்கோவில் பகுதியில் புறாவை வேட்டையாடும் கழுகின் ஒரு பிரிவை தான் பைரி என்று அழைக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி நாகர்கோவிலில் நடைபெறும் புறா பந்தயத்தை மையப்படுத்தி இந்த பைரி படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்.

நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் இளைஞன் லிங்கம் படித்து விட்டு, புறாவின் மீது உள்ள காதலால் வேலைக்கு போகாமல், புறா வளர்ப்பில் ஈடுபடுகிறான் . அதே பகுதியில் உள்ள உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா வளர்ப்பில் ஈடுபடுகிறான் . கதாநாயகன் மற்றும் வில்லனின் கனவு மட்டுமில்லாமல், அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கனவு என்பது அந்தப் பகுதியில் இருக்கும் ரமேஷ் பண்ணையார் என்பவரின் புறா கிளப்பில் சேர்ந்து, தங்களுடைய புறாவை அதிக நேரம் பறக்க விட்டு உலக சாதனையை செய்ய வேண்டும் என்பதே . இப்படிப்பட்ட கனவில் எல்லோரும் இருக்கும் போது புறா பந்தயம் தொடங்குகிறது. பந்தயத்தில் சுயம்பு செய்யும் ஊழலை லிங்கம் கண்டுபிடித்து பிரச்சனை செய்ய இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் லிங்கம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்க, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் லிங்கத்தின் நண்பர் வில்லன் சுயம்பை குத்தி விடுகிறார். அதற்குப் பழி வாங்க வில்லன் சுயம்புவின்

ஆட்கள் லிங்கத்தின் நண்பனை வெட்டி விடுகிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு இடையில் சென்னை சென்ற லிங்கம் மீண்டும் வந்து,தன்னுடைய நண்பனுக்காக வில்லன் சுயம்புவை பழி வாங்கினாரா…..? என்பதே பைரி படத்தின்

முதல் பாகத்தின் கதை.

படத்தில் பாராட்டபட வேண்டிய விஷயமாக இருப்பது புறாவை அடிப்படையாகக் கொண்டு அந்த மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தியதுதான்.

புறாக்களில் இருக்கும் வகைகள் பற்றியும், இவை பறக்கும் தூரங்கள் பற்றியும், போர் அடிக்காமல் சுவாரசியமாக புரிய வைத்துள்ளார் இயக்குனர். நாகர்கோவில் பகுதியில் நான்கு தலைமுறைகளாக நடக்கும் புறா பந்தயத்தின் பின் உள்ள வரலாற்றை சொல்லி இருப்பது சிறப்பு.

அதேபோல மூன்று பேருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.ஒன்று வில்லன் சுயம்பு உடைய கதாபாத்திரம். மற்றொன்று ரமேஷ் பண்ணையாருடைய கதாபாத்திரம். மூன்று நண்பனாக நடிக்கும் இப்படத்தின் டைரக்டர் ஜான் கிளாடி . மூன்று பேருடைய பேச்சு, நடிப்பு அந்த நாகர்கோவில் பகுதியில் உள்ள மக்களுடைய பேச்சை அப்படியே ஒத்து இருக்கிறது. அதேபோல் ஹீரோயின் உடைய கதாபாத்திரம் சிறப்பு. ஹீரோவின் அம்மா கதாபாத்திரமும் சற்று ஓவர் ஆக்டிங் ஆகவே தோன்றுகிறது…

அதேபோல் ஹீரோ vumகொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருந்தால் இன்னும் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும்.

தேவையே இல்லாமல் அதிகமாக கோபப்படுகிறார்.. அதிகமாக கத்திக் கொண்டிருக்கிறார்… மிஷ்கின் படத்தின் ஹீரோவை ஞாபகப்படுத்துகிறார்…ஹீரோ, ஹீரோயின் அம்மா இருவரும் தங்களுடைய நடிப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அய்யா வைகுண்டரை, காமராஜரை பற்றி சொல்லியிருப்பதெல்லாம் சிறப்பு. ஒளிப்பதிவு சுமார். பின்னணி இசை சிறப்பு. பாடல்கள் சுமார் ரகம். DI இல் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்… படித்துவிட்டு,ஒழுங்காக வேலைக்கு செல்லாமல்,புறா வளர்ப்பில் ஈடுபட்டு,அதனால் ஏற்படும் சீர்கேடுகளை சொல்லி இருப்பதற்காகவே இப்படத்தினை பலமுறை பாராட்டலாம்…

இப்படம் (பிப்ரவரி 23ம் தேதி) திரைக்கு வருகிறது.

.